ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கைகள் துவக்கம்

உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவுவது தொடர்பான பிரச்சினைக்கு எதிராக பிரித்தானியா அதிரடி நடவடிக்கைகளைத் துவங்கியது. அதன்படி, பண பலமும், அரசியல் செல்வாக்கும் மிக்க ரஷ்யர்கள் பலர் மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செல்வந்தர்கள் மீது 2018ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா தடைகள் விதித்துவிட்ட நிலையில், அவர்கள் கவனம், பிரித்தானியா மீது திரும்பியது. ரஷ்யாவிலிருந்து பல்லாயிரம் பில்லியன் டொலர்கள் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசங்களுக்குள் கொண்டுவரப்பட்டன. மிகப்பெரிய பணக்கார ரஷ்யர்களுக்கு பிடித்த … Read more

மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல்: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை.

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 90 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்து உள்ளது. இதையடுத்து,. மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் குறித்து  திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்பட பல மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே சிறையில் உள்ளார். சென்னை ராயபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் உள்பட 110 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இருந்து ஜாமினில் விடுவிக்கக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அவர் மேலும் ஒரு வழக்கில் இன்று காலை மீண்டும் கைது … Read more

திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்ப்பு.: காவல்துறை

சென்னை: திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில் ஜார்ஜ் டவுன் நீதிமனறத்தில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 நிமிடங்களில் முடிந்த புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பீபின் ராவத், பாடகி லதா மங்கேஸ்வர், முன்னாள் எம்.எல்.ஏ., பரசுராமன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி., திருத்த முன்வரைவுக்கு அனுமதி அளிக்க கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை கால வரையறை இன்றி ஒத்திவைத்தப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் மக்கள் பிரச்னையை பேச ஒரு வார காலம் சட்டசபையை நடத்தாததை கண்டித்து புதுச்சேரி சட்டசபை … Read more

ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த சென்னை ஓசூர்-தானா..!!

தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் துவங்க வேண்டும் எனத் திட்டமிடும் அனைத்து பெரு நிறுவனங்களுக்குத் தற்போது ஓசூர் விருப்பமான இடமாக மாறியுள்ளது. கடந்த 2 வருடத்தில் டாடா மற்றும் ஓலா ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை ஓசூரில் அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் ஓசூரைத் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஓசூரில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், புதிய நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் சுமார் 4000 ஏக்கர் நிலத்தை வாங்க முடிவு … Read more

கோவை: சொல்லியடித்த செந்தில் பாலாஜி… வேலுமணி சறுக்கியது எங்கே?!

2021 மே 2-ம் தேதி 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட பிடிக்க முடியாதது முதல்வர் மு.க. ஸ்டாலின் மனதில் கவலையை ஏற்படுத்தியது. ஸ்டாலினுக்கும், தி.மு.க-வுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி. எஸ்.பி வேலுமணி ‘கோவை ஃபார்முலா’ – ரூ.750 கோடி… கேலிக்கூத்தான தேர்தல்! இந்தப் பிரச்னைகளை போக்க ஸ்டாலின் கோவைக்கு அனுப்பிய அஸ்திரம் அமைச்சர் செந்தில் பாலாஜி. … Read more

அமேசான் காட்டுக்குள் உயிருடன் கண்ணில் நுழைந்த “மனித பூச்சி”! திடுக்கிட வைக்கும் சம்பவம்

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலில் இருந்து 3 உயிருள்ள ஒட்டுண்ணிகளை இந்திய மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாகவே, வலது கண்ணில் வீக்கம் மற்றும் அரிப்பால் அவதிப்பட்டுள்ளார். இதே தொந்தரவு முதுகிலும், கையிலும் ஏற்பட்டுள்ளது, எதனால் இப்படி இருக்கிறது என குழம்பி போன அப்பெண் மருத்துவரை அணுகிய போது ஒவ்வாமை பிரச்சனையாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இருப்பினும் அந்த அறிகுறிகள் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது, இந்நிலையில் இந்தியாவுக்கு … Read more

“மரியாதையை காப்பாத்திக்க..!” : ஆர்.கே.சுரேஷூக்கு பாலா அறிவுரை

இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் சீனு … Read more

மு.க.ஸ்டாலின் வியூகங்களால் கொங்கு மண்டலத்தை வாரி சுருட்டிய தி.மு.க.

கோவை: சட்டமன்ற தேர்தலோ, பாராளுமன்ற தேர்தலோ எந்த தேர்தல் வந்தாலும் அனைவரின் கவனமும் திரும்புவது கொங்கு மண்டலத்தின் மீது தான். இந்த மாவட்டங்களில் கிடைக்கும் வெற்றி பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தும். கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்தது கொங்கு மண்டலத்தில் பெற்ற வாக்குகள் தான். 2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக அமருவதற்கும் கொங்கு மண்டலமே காரணமாக இருந்தது. இதனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி எளிதாக … Read more