ஒரு வாக்கு கூட வாங்காத அ.தி.மு.க. வேட்பாளர்

புதுக்கோட்டை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி ஏழாவது வார்டு அதிமுக வேட்பாளர் முகம்மது இப்ராம்சா  ஒரு வாக்குகள்  கூட பெறவில்லை. இந்த வார்டில் … Read more

நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சி 3வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி

நாமக்கல்: நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சி 3வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 189 வாக்குகள் பெற்ற நிலையில் 190 வாக்குகள் பெற்று அதிமுகவின் செல்வி வெற்றி பெற்றார்.

கோரிக்கை அட்டை அணிந்து கல்லுாரி ஆசிரியர்கள் போராட்டம்| Dinamalar

புதுச்சேரி : கல்லுாரி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி உயர்கல்வி குழுமத்தின் கீழ், ஒரு கல்வியியல் கல்லுாரி, நான்கு கலை அறிவியல் கல்லுாரிகள், இயங்கி வருகின்றன. இக்கல்லுாரி ஆசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.இதனை கண்டித்து, கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பு நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை.இரண்டாம் கட்டமாக, நேற்று காலை 9.00 … Read more

இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை!

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 175.84 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 35 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் 1,98,99,635 தடுப்பூசி மையங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 35,50,868 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி … Read more

5 நாட்களுக்குள் 9.1 லட்சம் கோடி இழப்பு.. போட்டதெல்லாம் போச்சே.. கதறும் முதலீட்டாளர்கள்..!

இன்று காலை தொடக்கம் முதல் கொண்டே சரிவில் இருந்து வரும் இந்த சந்தைகள், தற்போதும் கூட சரிவில் தான் காணப்படுகின்றன. எனினும் இன்று காலை 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டிருந்த சென்செக்ஸ், தற்போது 285.95 புள்ளிகள் குறைந்து, 57,415.52 புள்ளிகளாக காணப்படுகின்றது. இதே நிஃப்டி 85.2 புள்ளிகள் குறைந்து 17, 121 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சிபிஐ-யிடம் சிக்கிய அனந்த் சுப்பிரமணியன்.. சென்னையில் 3 நாட்களாக துருவித் துருவி கேள்வி..! இது ரஷ்யா – உக்ரைன் இடையேயான … Read more

மதுரை: மு.க.அழகிரி ஆதரவாளர் வெற்றி – அதிர்ச்சியில் திமுக தரப்பு!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. தி.மு.க வேட்பாளர்கள் அதிகமாக வெற்றி பெற்று வரும் சூழலில், மதுரை 47-வது வார்டில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகலாவை எதிர்த்து மு.க.அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரியின் மனைவி பானு போட்டியிட்டார். முபாரக் மந்திரி தி.மு.க ஆட்சிக்கு … Read more

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலன் மஸ்கின் புதிய காதலி யார் தெரியுமா? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

உலகளவில் பிரபல பணக்காரராக உலா வரும் எலன் மஸ்கை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவி வருகின்றது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓவான எலன் மஸ்க் ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பஸட்டை காதலித்து வருகிறார். 50 வயதாகும் எலான் மஸ்க் 27 வயது நடாஷாவை காதலிப்பது குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. 233 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து வைத்திருக்கும் எலன் மஸ்க் தான் … Read more

திமுக வசமானது திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகள்… கொங்குமண்டலத்திலும் அதிமுகவை வீழ்த்தி முன்னிலை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாநகராட்சியை திமுக கூட்டணி  கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மற்ற மாநகராட்சிகளை யும் கைப்பற்றும் சூழல் எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்திலும் அதிமுகவை வீழ்த்தி திமுகவை முன்னிலையில் உள்ளது. தமிழழ்நாட்டில்  கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, அனைத்து இடங்களிலும் பெரும்பாலாக திமுக கூட்டணி கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன. தமிழ்நாட்டில் … Read more

அரியலூர்-மணப்பாறை நகராட்சி யாருக்கு?: சமபலத்தில் தி.மு.க-அ.தி.மு.க.

அரியலூர்: அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கு, 34 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அரியலூர் நகராட்சியில் 4 மேஜைகளில் 9 சுற்றுகளாக இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேட்டைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் நகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. … Read more

கரூர் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

கரூர்: கரூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக 42 இடங்களில் வெற்றி பேருள்ளது. மேலும் அதிமுக 2, சுயேட்சைகள் 2, காங்கிரஸ் 1, சிபிஎம் 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றது.