முதல்முறையாக குமரி கப்பியறை பேரூராட்சியை கைப்பற்றியது திமுக, இரணியல் மண்டைக்காடை கைப்பற்றியது பாஜக…

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக குமரி பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. அதே வேளையில் குமரி மாவட்டம் இரணியல் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான  வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற்று முடிவடைந் தது. இதையடுத்து, இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும 268  … Read more

திண்டுக்கல் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகனும், தி.மு.க. சார்பில் தொழிலதிபரின் மகனுமான நாகராஜனும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் இந்த வார்டில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த வார்டில் இரவு முழுவதும் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வார்டில் இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்மோகன் … Read more

ஓசூர் மாநகராட்சி 13-வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய 22 வயது சட்டக் கல்லூரி மாணவி வெற்றி

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 13-வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய 22 வயது சட்டக் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவி யஷாஸ்வினி வெற்றி  பெற்றார். 1146 வாக்குகள் பெற்ற யஷாஸ்வினி, 640 வாக்குள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.

ஒரு கண்ணில் சாதி, மறு கண்ணில் மதம்; அகிலேஷ் குறித்து அமித் ஷா விமர்சனம்| Dinamalar

லக்னோ: ஒரே கண்ணில் சாதி, மறு கண்ணில் மதம் என ஒரே மூக்கு கண்ணாடி மூலமாக பாகுபாடு பார்ப்பவர் அகிலேஷ் என அமித் ஷா விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. மீதம் நான்கு கட்ட தேர்தல் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் … Read more

பிரமிக்க வைக்கும் அறிக்கை.. அரசு பத்திரங்கள், ஈக்விட்டிகள், சேமிப்பு எல்லாவற்றிலும் LIC தான் டாப்!

இந்தியா வரலாற்றிலேயே எல்ஐசி (LIC ) பொது பங்கு வெளியீடானது மிகப்பெரிய அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் LIC பங்கு வெளியீடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது குறித்து ஒரு தரப்பு எல்ஐசி பங்கு வெளியீடானது முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கின்றது. எனினும் ஒரு தரப்பு தங்க முட்டையிடும் வாத்தினை அரசு விற்பனை செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை செபியிடம் சமர்பித்த வரைவில், … Read more

“பைடன் ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா உறவு பலவீனமாகிவிட்டது!"- ட்ரம்ப் முன்னாள் அதிகாரி பேட்டி

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியின் கடைசி சில வாரங்களில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் தலைமை அதிகாரியாக இந்திய-அமெரிக்கரான காஷ் படேல் பணியாற்றியிருந்தார். காஷ் படேல் சமீபத்தில் அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய காஷ் படேல், “2024-ல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன. மோடி – ட்ரம்ப் முன்னாள் அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மதிப்புமிக்க உயர்ந்த உறவு இருந்தது. இவர்கள் இருவரும், இந்திய … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! விஜய் மக்கள் இயக்கத்தின் 2 வேட்பாளர்கள் வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 7 மாநகராட்சியில் முன்னிலை வகிக்கிறது, அதே போல 24 நகராட்சியில் திமுக கூட்டணியும், 4 நகராட்சியில் அதிமுக கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளது. முழு முடிவுகள் வந்த பின்னரே மொத்தமாக எந்த கட்சி எவ்வளவு இடத்தை வென்றுள்ளது என்பது தெரியவரும். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கமும் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டது. இயக்கத்தை … Read more

முன்ளாள் முதல்வர் ‘எடப்பாடி’ பழனிச்சாமி தொகுதியில் திமுக முன்னிலை….

சேலம்: முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரு எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியிலேயே அதிமுகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.  எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சேலம் மாநகராட்சியில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவு கடந்த 18ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் வாக்கு எண்ணிக்கை … Read more

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 11 மணி முன்னிலை நிலவரம் – 753 இடங்களில் திமுக வெற்றி

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 753 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 180 இடங்களில் அதிமுகவும், 162 இடங்களில் … Read more

சென்னை 136வது வார்டில் திமுக இளம் வேட்பாளர் வெற்றி

சென்னை: சென்னை 136வது வார்டில் இளம் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயதான திமுக இளம் வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றார்.