5 மாநில தேர்தல் முடிவு- பா.ஜனதா பாராளுமன்ற குழு இன்று மாலை கூடுகிறது

புதுடெல்லி: பா.ஜனதா பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று மாலையில் கூடுகிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா உள்பட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதையும் படியுங்கள்…4 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி- பஞ்சாபில் சுனாமியாக மாறிய ஆம் ஆத்மி

உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் 2-வது முறையாக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக வரலாறு படைத்திருக்கிறது: எல்.முருகன்

சென்னை: உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் 2-வது முறையாக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக வரலாறு படைத்திருக்கிறது என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மேல் வாக்காளர்கள்  அதிக நம்பிக்கை  வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது என எல்.முருகன் கூறியுள்ளார்.

ஏ.ஜே., பள்ளியில் மகளிர் தின விழா| Dinamalar

புதுச்சேரி-தவளக்குப்பம் அடுத்த டி.என். பாளையத்தில் உள்ள ஏ.ஜே., மேனிலைப் பள்ளியில் மகளிர் தின விழா நடந்தது.தாளாளர் ஜான்சன், ஜீனே ஜான்சன் தலைமை தாங்கினர். பள்ளி முதல்வர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.ஆசிரியை ரெபாக்கா வரவேற்றார். பெற்றோர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப் பட்டது. சிறந்த பெற்றோர்களை தேர்வு செய்து பரிசு வழங்கினர். ஆசிரியைகளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.ரஷ்யா-உக்ரைன் இடையே போர் வேண்டாம் என, பள்ளி முதல்வர், ஆசிரியைகள், மாணவர்கள் பதாதைகள் ஏந்தி, வலியுறுத்தினர்.ஆசிரியைகள் விஜயலட்சுமி, சரண்யா தொகுத்து வழங்கினர். … Read more

கோவா தேர்தல்: மனோகர் பாரிக்கர் மகன் – பாஜக வேட்பாளர் இடையே கடும் போட்டி

பனாஜி, 40 தொகுதிகளுக்கான கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில், முன்னிலை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜகவும், 12 தொகுதிகளில் காங்கிரசும், 5 தொகுதிகளில் மகாராஷிடிரவாடி கோமண்டக் கட்சியும், 3 தொகுதிகளில் சுயேட்சைகளும், 1 தொகுயில் ஆம் ஆத்மியும் முன்னிலையில் உள்ளன. இதற்கிடையில், கோவா முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் … Read more

கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. அமெரிக்க அரசு திடீர் முடிவு..!

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி குறித்து ஆய்வு செய்து, பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா மட்டும் இதில் மௌனம் காத்து வந்தது. இதற்கிடையில் ரஷ்யா கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி மூலம் உலக நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை எளிதாகக் களைந்து உலக நாடுகள் உடனும், சர்வதேச நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியும் எனக் கணிப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகவும் … Read more

உ.பி தேர்தல்: “இந்துவோ, முஸ்லிமோ…. எங்களின் திட்டங்கள் அனைவருக்குமானது!" – பாஜக அமைச்சர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைத் தாண்டி அங்கு பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. அமித் ஷா, யோகி, மோடி இந்த நிலையில், உத்தரப்பிரதேச அமைச்சர் சதீஷ் மஹானா தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய … Read more

ஐரோப்பாவுக்கு ஆபத்து! செர்னோபில் அணு உலையை உடனடியாக சீரமைக்க போர்நிறுத்தம் கோரும் உக்ரைன்

கதிர்வீச்சு அபாயத்திற்கு மத்தியில் செர்னோபில் மின்பாதையை சரிசெய்வதற்காக உக்ரைன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, செர்னோபில் அணுமின் நிலையம் புதன்கிழமை முற்றிலுமாக மூடப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமா நிலையத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், இது அணுசக்தி பொருட்களை குளிர்விப்பதற்கான அமைப்புகளை பாதிக்கலாம் என்றும் உக்ரைன் கூறியுள்ளது. மின் தடைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் புதிய கவலைகளை எழுப்புகிறது. உலகின் மிக மோசமான … Read more

போர் நிறுத்தம் ஏற்படுமா? ரஷியா- உக்ரைன் நாடுகளின் மந்திரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

கீவ்: ரஷியா- உக்ரைன் நாடுகளின் மந்திரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது. இதற்கான முயற்சியை துருக்கி எடுத்துள்ளது. உக்ரைன் – ரஷ்ய மந்திரிகள் நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. பிப்ரவரி 14ந்தேதி தொடங்கிய போர் இன்றுவரை நீடித்து வருகிறது. இதற்கிடையில் உலக நாடுகளில் வலியுறுத்தல் காரணமாக 3 முறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த துருக்கி … Read more

கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக

ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முன்னணி நிலவரப்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட்டில், பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சி, மீண்டும் அமைக்கிறது. இந்நிலையில் கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.  மதியம் 1 மணி நிலவரப்படி கோவாவில் பாஜக 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் முன்னிலை வகித்தது. திரிணாமுல் 4 இடங்களிலும் மற்றவர்கள் 6 … Read more

தாம்பரம் மற்றும் திருவள்ளுவர் பகுதிகளில் 17 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ 15.55 இலட்சம் வசூல்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சென்னை/தெற்கு-ஐஐ மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தாம்பரம் மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.1,09,000/-  செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.