சிறு வயதில் இருந்து திருமண ஆசை! 66 வயதில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம்… மன்மதனாக வலம் வந்த முதியவர்

இந்தியாவில் 66 வயதான முதியவர் இதுவரையில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் ஸ்வெயின். 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டுமே. 66 வயதாகும் இவர் சிறு வயது முதலே திருமண ஆசையில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியிலிருந்து புவனேஸ்வர் போலீஸ் … Read more

ஆளுநரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு

திருவனந்தபுரம் ஆளுநர் த்வறு செய்யும் போது அவரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு செய்துள்ளது. பல மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும்  இடையே தொடர்ந்து பணிப்போர் நிலவி வருகின்றது..   இந்த நிலை கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத பல மாவட்டஙளில் ஏற்பட்டுள்ளது.   சமீபத்தில் சத்ஹீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கும் அம்மாநில ஆளுநர் அனுசுயா உயிகிக்கும் மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு … Read more

‘பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்- கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்று பரவலும் அதனையடுத்து வந்த ஊரடங்கு விதிமுறைகளும் ஒவ்வொருவரின் அன்றாடத்திலும், திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பும் பிற தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த, நான் விரும்பிச் செய்கிற ஒன்று. விக்ரம் பட பணிகள், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம். கொரோனா பெருந்தொற்று … Read more

தூத்துக்குடி அருகே கடற்கரையில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி கீழவைப்பார் கடற்கரையில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கீழவைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐஸ் என்ற போதைப்பொருள் படகுடன் பறிமுதல் செய்துள்ளனர்.

நிர்வாகத்தை எளிமையாக்க இரண்டு மற்றும் மூன்றாவது அறிக்கை தாக்கல்

பெங்களூரு, : அரசு நிர்வாகத்தை எளிமையாக்க கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணையம், தன்னுடைய இரண்டு மற்றும் மூன்றாவது அறிக்கையை தாக்கல் செய்துஉள்ளது.கர்நாடக அரசு நிர்வாகத்தை சீர்திருத்துவது குறித்து கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணையம் தன்னுடைய இரண்டு மற்றும் மூன்றாவது அறிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் தாக்கல் செய்துள்ளது. ஆணைய தலைவரான ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை செயலர் விஜய பாஸ்கர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.தேவையற்ற செலவுகளை குறைக்க வெளி குத்தகை வழங்குவதில் எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கும் … Read more

`பிராய்லர் கோழி புரட்சி'க்கு காரணமான அமெரிக்க பெண்மணி; ஒற்றை பூஜ்யத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்!

இன்று சிக்கன் என்றழைக்கப்படும் பிராய்லர் கோழி இறைச்சி நீக்கமற எல்லா ஊர்களிலும் இருக்கிறது. குக்கிராமங்களிலும் கறிக்கோழிக் கடைகளைக் காண முடிகிறது. நகரங்களில் கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், பிரியாணி, பெப்பர் சிக்கன் என்று பல வடிவங்களில் கோழி இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்தக் கறிக்கோழி இறைச்சி மூலம் பல லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதற்கு முதன்முதலில் வித்திட்டவர் ஒரு பெண்மணி என்றால் … Read more

தயார் நிலையில் புதிய ரஷ்ய படைகள்! வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்

உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா புதிதாக தனது படைகளை நிறுத்திவைத்துள்ளதாக சொல்லப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Maxar டெக்னாலஜிஸ் வெளியிட்ட படங்கள், பல வாரங்களாக ரஷ்யப் படைகளின் குவிப்பைக் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்யாவின் நிரந்தர இராணுவ தளங்களிலிருந்து பல கவச உபகரணங்கள் மற்றும் துருப்புக்கள் புதிய களத்தில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று Maxar புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. Maxar நிறுவனத்தின் … Read more

பாஜக அரசு மக்களுக்குச் சேவை செய்வதை மறந்து விட்டது : பிரியங்கா காந்தி

ரேபரேலி பாஜக அரசு மக்களுக்குச் சேவை  செய்வதை மறந்து விட்டு பெரிய தொழிலதிபர்களுக்காகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.  மொத்தம் உள்ள 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்டம் முடிந்துள்ளது.  மாநிலம் எங்கும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அவ்வகையில் ரேபரேலி ஜகத்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவி இடங்களுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.    இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தம்  5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று மாநில … Read more

இந்திய கடற்படை கப்பல்களை குடியரசு தலைவர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்!!

டெல்லி : இந்திய கடற்படை கப்பல்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்திய கடலோர காவல்படை, இந்திய வர்த்தக கப்பல்கள் உட்பட 60 கப்பல்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விமானங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றன.