பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சண்டிகர்: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.  மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போட்டனர்.  காலை 11 மணி நிலவரப் படி 18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 1 மணி நிலவரப்படி … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்

கொல்கத்தா: 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட்யில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

என்னை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை: கேரள கவர்னர்

திருவனந்தபுரம் : ”அரசாங்கத்தில் உள்ள யாருக்கும், கவர்னரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது,” என, கேரள மாநில அரசை, கவர்னர் ஆரிப் முகமது கான் மறைமுகமாக எச்சரித்துள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையில், தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், மாநில … Read more

இரு மாநில தேர்தல் 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: உ.பி – 21.18%, பஞ்சாப் – 17.77%

புதுடெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக,25,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி,3 ஆம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதைப்போல்,பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் சற்று முன்னதாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இத்தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. அதன்படி,இத்தேர்தலில் 1304 வேட்பாளர்கள் … Read more

ரூ.7.3 லட்சம் வரை சம்பளம்.. டிசிஎஸ்-ன் நச் அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

சர்வதேச அளவிலான பொறியியல் நிறுவனமான டாடா டெக்னாலஜி நிறுவனம் 2023ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாடு உட்பட பல பகுதிகளிலும் இந்த பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளது. எப்படியிருப்பினும் இந்தியா முழுவதிலும் பணியாளர்களை அதிகரிக்கலாம். பணியமர்த்தல் மூன்றாவது காலாண்டில் மட்டும் நிறுவனம் 1500 பேரை பணியமர்த்தியுள்ளது. ஆக ஓராண்டுக்கான 3,000 பேர் என்ற கணிப்பு என்பது குறைவாக இருந்தாலும், இது தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆக … Read more

ரூ.6 லட்சம், ஆடம்பர ஐபோன்; 500 கி.மீ பயணம்; வீட்டைவிட்டு சென்ற 15 வயது சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனும், அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் திடீரென காணாமல் போயிருக்கின்றனர். இது தொடர்பாக 15 வயது சிறுவனின் தந்தை தன் மகன் கடத்தப்பட்டு விட்டதாக போலீஸில் புகார் செய்திருந்தார். போலீஸார் வழக்கு பதிந்து இரண்டு பேரையும் தேடிவந்தனர். இரண்டு பேரில் 17 வயது சிறுவனிடம் மொபைல் போன் இருந்தது. அதோடு 15 வயது சிறுவன் காணாமல் … Read more

மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து! முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் … Read more

ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது கடமை என்று கூறி உள்ளார். தாங்கள் நேசிக்கும் கடவுளுக்காக பணிவுடன் ஹிஜாப் அணிவதாக குறிப்பிட்டுள்ள சைரா, குறிப்பிட்ட கொள்கையைப் பரப்புவதாக, பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது மோசமான நிகழ்வு என கூறியுள்ளார்.

பள்ளியை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நகர்ப்புற தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானது: கமல்ஹாசன்

சென்னை: தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை என அவர் தெரிவித்துள்ளார். நகர்ப்புற தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.