சுற்றுலாப் பயணிகளின் தலை மேல் விழுந்த ஹெலிகாப்டர்: வெளியான திகில் வீடியோ காட்சிகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரையில் பொதுமக்கள் சூழ்ந்திருந்த பகுதிக்குள் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சனிக்கிழமை மதியம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மியாமி கடற்கரையில் கூடி பொழுதை கழித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்து கொண்டிருந்த பகுதிக்குள் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாக்கியது. Near-miss helicopter crash on Miami beach https://t.co/r2vAQAfw1J pic.twitter.com/0iOlxuWpeQ — … Read more

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார் விக்கி. இப்படம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத படமாக மாறியது. ஏனெனில் இப்படம் மூலம் தான் அவருக்கும், நயன்தாராவுக்கும் (Nayanthara) இடையே காதல் … Read more

பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய அணி: உத்தவ் தாக்கரேவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

மும்பை: தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அதன் ஒரு பகுதியாக அவர் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடாவை சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் … Read more

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மதியம்1 மணி நிலவரப்படி 35.88% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆற்றில் கார் கவிழ்ந்து கோர விபத்து.. மணமகன் உட்பட 9 பேர் பலியான சோகம்!

கோட்டா, ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து  காரில் உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் நயாபுரா கல்வெட்டில் இருந்து  கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா நகர … Read more

சில்லறை முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. எல்ஐசி ஐபிஓ-வில் அதிரடி திட்டம்..!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நாட்டில் மிகபெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு வரும் முன்பே இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக பொதுப் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக வாய்ப்பு என்பார்கள். கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..! எல்ஐசி ஐபிஓ இந்த நிலையில் எல்ஐசி இன்னும் … Read more

மும்பையை டிக் அடித்த சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி; டார்கெட் 2036, இந்திய ஒலிம்பிக்ஸ் கனவின் முதல்படி!

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் 140 வது அமர்வை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டின் மே – ஜூன் மாதங்களில் மும்பையில் இந்த அமர்வு நடைபெறும் என்றும் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் அத்தனை பேரும் இதில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய விளையாட்டு வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்ஸை நடத்த வேண்டும் என்கிற இந்திய தேசத்தின் கனவை நிறைவேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாக இது இருக்கும் கூறப்படுகிறது. சர்வதேச … Read more

உலக முக்கிய பணக்காரர்களின் ஒரு நிமிட வருமானம் எவ்வளவு தெரியுமா? எலன் மஸ்க் முதல் அம்பானி வரை

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், உலக பணக்காரர்களின் ஆண்டு வருமானம் பற்றியும் அல்லது ஒருநாள் வருமானம் பற்றியும் அறிந்து கொள்ள எப்போவுமே ஆர்வம் உண்டு. இந்த பணக்கார நிறுவனங்கள் பலகோடி மனிதர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத நிலையில், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு கூட தங்கள் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் எவ்வளவு, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்று தெரிவது இல்லை என்பது நிதர்ச்சனமான உண்மை. அந்த வகையில் இந்த … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநில வாலிபர்கள் 2 பேர் பலி

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலிஉசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவர் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பணியாளர்கள் வந்ததால் எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. மதியம் … Read more