வாக்களிக்கும் போது வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மேயர்; வழக்கு பதிவு செய்த உ.பி போலீஸ்!

உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு மூன்றாம் கட்டமாக நடைபெறுகிறது. இந்த மூன்றாம் கட்டத் தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், கான்பூர் பகுதியின் மேயர் பிரமிளா பாண்டே இன்று கான்பூரில் உள்ள ஹட்சன் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துள்ளார். வக்களிக்கும் போது எடுக்கப்பட்ட புகப்படம், அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் வாக்குப்பதிவு செய்வதை வீடியோவாகவும், … Read more

ஆற்றில் கவிழ்ந்த கார்! மணமகன் உட்பட அனைவரும் பலி- திருமணத்துக்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்

இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட காரில் சென்ற 9 பேரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள சோட்டி புலியா பாலத்தில் இருந்து சம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். உடனடியாக விரைந்து வந்த மீட்புப்படையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமண நிகழ்வுக்காக சென்ற போது நடந்த இந்த விபரீத சம்பவம் கடும் … Read more

60 வயதில் விளம்பர மாடலாக வலம்வரும் கூலித் தொழிலாளி மம்மிக்கா

கோழிக்கோட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மம்மிக்கா இவருக்கு வயது 60. கேரளாவின் வீதிகளில் லுங்கி சட்டையுடன் அன்றாடம் நடந்து செல்லும் கூலித் தொழிலாளியான மம்மிக்காவைக் கண்ட ஒருவர் அவரது அனுமதியுடன் அவரை புகைப்படம் எடுத்து தனது ஸ்டூடியோ-வில் வைத்திருந்தார். ஆறு மாதம் கழித்து மேலும் சில புகைப்படங்களை அவர் எடுக்க இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிரபல புகைப்படக் கலைஞரான ஷரீக் வாலயில் விளம்பர மாடலாக நடிக்க இவரை அணுகினார். விளம்பர மாடலாக நானா ? என்று ஆச்சரியத்தில் … Read more

ரஜினிக்காக 30 ஆண்டுகளாக வாக்களிக்காத ரசிகர்- மனது மாறி உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்

புதுக்கோட்டை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற வாக்குறுதியை அவர் அளித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ‘அண்ணாத்த’ … Read more

சென்னையில் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக 12 பேர் கைது

சென்னை: சென்னையில் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக கடந்த 7 நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்.13 முதல் 19 வரை நடைபெற்ற சோதனையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2.8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கிய பங்கு: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசம் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: தேசப்பற்று மற்றம் சமூக நல்லிணக்க உணர்வு மூலம் அருணாச்சல பிரதேசம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லப்படும். மாநிலத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை மக்கள் பாதுகாக்கும் விதமும், அதனை முன்னெடுத்து செல்லும் விதமும் நாட்டிற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவில், … Read more

பண்ணாரி சோதனைச்சாவடியில் போலி ரசீது கொடுத்து கட்டண வசூல்?! – வனத்துறை மீது எழுந்த குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக திண்டுக்கல்-மைசூர் இடையேயான நெடுஞ்சாலை செல்கிறது. தமிழக-கர்நாடக இடையே சரக்கு போக்குவரத்திற்குப் பிரதான சாலை என்றே இதை சொல்லாம். ஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் உலகின் அரிய கானுயிர் வாழ்விடமாகத் திகழ்கிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். திம்பம் மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணிநேரமும் சென்றுகொண்டிருக்கின்றன. பண்ணாரி சோதனைச் சாவடி அருகே வலம் வரும் யானைகள் குறிப்பாக, இரவு நேரங்களில், … Read more

காலையில் 4 கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. ஆனால் இதை பலரும் சாப்பிடாமல் தூக்கி எறிந்துவிடுவோம். கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னவெல்லாம் அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த … Read more

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி

சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்குப்பதிவை 100 சதவீதமாக கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின்போதும் முயற்சி எடுக்கிறது. ஆனால் எதிர் பார்த்த அளவுக்கு இன்னும் பலன் கிடைக்க வில்லை. தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில், உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியதாக … Read more