முத்து ரத்தினம் பள்ளியில் இன்று ரத்ததான முகாம்| Dinamalar

புதுச்சேரி, : முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் இன்று ரத்ததான முகாம் நடக்கிறது.கவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில், 7 நாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று காலை 9:00 மணி முதல், பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெறுகின்றது.ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர், கொடையாளர்களிடம் இருந்து ரத்தம் தானம் பெறுகின்றனர்.ரத்த தானம் செய்வோர், 24ம் தேதி மாலை நடைபெறும் முகாம் நிறைவு விழாவில் கவுரவிக்கப்படுவர். புதுச்சேரி, … Read more

உக்ரைன் எல்லையில் அணு ஆயுத போர் பயிற்சியில் ரஷ்யா.. அதிகரிக்கும் பதற்றம்..

உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் ரஷ்யா அணு ஆயுத பயிற்சியை மேற்கொண்டுவருகிறது. உக்ரைன் – ரஷ்யா எல்லையில் லட்சக்கணக்கான போர் வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், போர் மூளும் பபாயம் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன. உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் … Read more

வாக்குச்சாவடிக்கு 5 மணிக்கு மேல் வந்து தகராறு: திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் அதிகாரிகள், போலீசாருடன் கட்சியினர் வாக்குவாதம்

சென்னை: வாக்குச்சாவடிக்கு 5மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித் திருந்த நிலையில், 5 மணிக்கு மேல் வந்து, தங்களை வாக்களிக்க அனுமதிக்குமாறு ஆளும்கட்சியினர் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம்  திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் நடந்தேறி உள்ளது. மேலும் கோவையிலும் அரங்கேறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை … Read more

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது – டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் … Read more

மீனவர் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய  அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண இரு தரப்பு மீனவர்களிடையிலான பேச்சுக்களை விரைவில் தொடங்குவதென அண்மையில் நடந்த இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இரு  தரப்பு பேச்சுக்களை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க … Read more

இன்றைய ராசி பலன் | 20/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

பாகிஸ்தான் PSL கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் போஸ்டர்!

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவரது ரசிகர் ஒருவர் வைத்திருந்த போஸ்டர், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும், அவர் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் அதிகம் பின்தொடரும் கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்திய டெஸ்ட் அணியின் … Read more

இந்தியாவின் ஐஐடி கல்வி நிலையத்தின் முதல் வெளிநாட்டு வளாகம் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கப்படுகிறது

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் தொடர்பான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அபுதாபி இளவரசர் ஷேக் மொஹம்மத் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே காணொளி காட்சி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பொருளாதாரம், பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே கூட்டு … Read more

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2.5 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி: உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது. … Read more