175 கோடி டோஸ் தடுப்பூசியில் புதிய சாதனை| Dinamalar

புதுடில்லி:நாட்டில், 18 வயது கடந்தோரில் 80 சதவீதம் பேருக்கு, இரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், 36.28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இதுவரை செலுத்திய டோஸ் 175.03 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.5 சதவீதம் பேர் முதல் டோஸ் மற்றும் 80 சதவீதம் பேர் இரு … Read more

8 மாத உயர்வை தொட்ட தங்கம் விலை.. இப்போ தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்குமா..?!

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் குறையாத நிலையில் பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்கம் மீது திரும்பியுள்ளனர். தங்கம் விலை உயர இந்தியாவும், சீனாவும் தான் காரணம்.. 2021 நிலைமையைக் கொஞ்சம் பாருங்க..! தங்கம் மீது ஆர்வம் கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் கூடப் பங்குச்சந்தை சரியும் போது கூடுதலான முதலீடு செய்து அதிகம் லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் தற்போது தங்கம் … Read more

நாடோடிச் சித்திரங்கள்: `சிந்து நதிக்கரையின் கதைகளும் இலக்கியப் பின்னணியும்’ | பகுதி 22

படின்டா – ஹிமாச்சல் பகுதிகளின் குளிர்கால முற்பகல் வேளைகள் ரம்மியமானவை. சூரியனின் வெப்பக் கரங்கள் உடலைத் தீண்டி இதம் தந்துவிடாதா என்ற ஏக்கத்தில் நாங்கள் அனைவரும் ஹர்ப்ரீத்தின் கீரைத் தோட்டத்தில் தேநீருக்காகக் கூடுவது வழக்கம். ஹர்ப்ரீத் புதிதாக மணமுடித்து வந்து சில நாள்களே ஆகியிருந்தன. ஹர்ப்ரீத் தன் தோட்டத்தில் பாலக்கீரை, முள்ளங்கிம் பச்சைப் பட்டாணி பயிரிட்டிருந்தாள். இளம்பச்சை நிற இலைகள்மீது படர்ந்திருந்த பனித்துளிகள் சிதறிவிடாதபடி பக்குவமாக ஒவ்வோர் இலையாகக் கொய்து, அவற்றை அவள் இறுகக் கட்டும் அழகை … Read more

ஒரே நாளில் வாயு தொல்லையை தீர்க்க வேண்டுமா? அருமையான வீட்டு வைத்தியங்கள் இதோ!

வயிற்றில் வாயு சேர்வதை வயிற்றுப் பொருமல் என்கிறோம். இதனை ப்லேடஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது. வாயு என்பது பொதுவாக ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியே பிரியும். வயிற்றில் வாயு தங்கிவிட்டால் அது வயிறை வீங்கச் செய்வதோடு வேறு சில பிரச்சனைகளையும் கொடுக்கும். பொதுவாக நாம் சாப்பிடும்போதும், பேசும்போதும் உடலுக்குள் வாயு நுழைகிறது. அது மட்டுமல்ல பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள், உணவை செரிமானம் செய்யும்போது வாயுவை உற்பத்தி செய்கிறது. குளிர்காலத்தில் அதிக உணவை உட்கொள்வதால் வயிற்றில் வாயு … Read more

19/02/2022: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு, 3,561 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில்  3,561 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் … Read more

தமிழகத்தில் மேலும் 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,051 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1146 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 43ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி … Read more

மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக முகவர் கிரிராஜன் கைது

மதுரை: மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக முகவர் கிரிராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம்: திவால் நடவடிக்கை தீவிரம்| Dinamalar

புதுடில்லி: அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த, ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தை வாங்குவதற்கான ஏல விருப்பத்தை வழங்குமாறு, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி கேட்டுக்கொண்டுஉள்ளார்.அனில் அம்பானியின் குழுமத்தை சேர்ந்த, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவை, கடந்த ஆண்டு நவம்பரில் ரிசர்வ் வங்கி நீக்கியது. மேலும், திவால் நடவடிக்கையிலும் இறங்கியது. தற்போது ஏல விருப்பத்தை தெரிவிப்பதற்கு, மார்ச் 11ம் தேதி கடைசி என்றும், தீர்வு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, … Read more

பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பயமுறுத்தும் ‘நாஸ்டாக் டெத் கிராஸ்’.. முதலீட்டுக்கு ஆபத்தா..?!

அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த 4 மாதங்களாகப் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம், வட்டி விகிதம் உயர்வு ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான சரிவையும் தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வருகிறது. மாத சம்பளகாரர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் சம்பள உயர்வு அமோகம்.. 5 வருட உச்சத்தை எட்டலாம்..! இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஏற்பட்ட சரிவின் மூலம் ஏப்ரல் 2020க்கு பின்பு நாஸ்டாக் காம்போசிட் குறியீடு மீண்டும் டெத் கிராஸ் … Read more