புதிய அணை திட்டத்தை ஏற்க முடியாது- கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள சட்டமன்றத்தில் இன்று (18.02.2022) கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது.  இது 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் குறைந்து 57,833 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் குறைந்து 57,833 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 28 புள்ளிகள் குறைந்து 17,276 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

ரஞ்சி கிரிக்கெட்; அறிமுகப்போட்டியில் முச்சதம் அடித்து பீஹார் வீரர் சாதனை| Dinamalar

கோல்கட்டா: கோல்கட்டாவில் நடைபெற்ற மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், பீஹார் அணியை சேர்ந்த சகிபுல் கனி என்பவர், தனது அறிமுகப் போட்டியிலேயே முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசிய முதல் வீரர் என்னும் சாதனை புரிந்துள்ளார். 56 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 341 ரன்கள் விளாசினார். கோல்கட்டா: கோல்கட்டாவில் நடைபெற்ற மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், பீஹார் அணியை சேர்ந்த சகிபுல் கனி … Read more

இந்தியாவில் கொரோனாவால் 37 லட்சம் பேர் இறப்பா..? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி,  இந்தியாவில் கடந்த நவம்பர் வரையில் 37 லட்சம் பேர் வரையில் கொரோனாவால் இறந்திருக்கக்கூடும் என்ற ஆய்வுத்தகவல் அடிப்படையிலான ஊடக அறிக்கைகளை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் கொரோனா தொற்றால் 4.6 லட்சம்பேர் இறந்ததாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் 32 லட்சம் முதல் 37 லட்சம் வரையிலானோர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றின் அடிப்படையில் சில ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை மறுக்கும் விதத்தில் … Read more

8 மாத உச்சத்தில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா வேண்டாமா?

தங்கம் விலையானது சர்வதேச அளவில் நிலவி வரும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 1900 டாலர்களையும் தொட்டுள்ளது. கடந்த அமர்விலேயே 1900 டாலர்களை உடைத்த தங்கம் விலையானது, முடிவிலும் 1902 டாலர்களாக முடிவுற்றுள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இன்று தொடக்கத்திலும் தங்கம் விலையானது 1902.60 டாலர்களாக அவுன்ஸூக்கு தொடங்கியுள்ளது. ஆக தற்போது தங்கம் விலையானது சற்று … Read more

லீ மெரிடியன் ஹோட்டல் கையகப்படுத்தும் திட்டம் ரத்து; மேல்முறையீட்டில் ஜெயித்த அப்பு ஹோட்டல்ஸ்!

பிரபல லீ மெரிடியன் ஹோட்டல் வாராக்கடன் காரணமாக திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு விற்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்த அப்பு ஹோட்டல்ஸ் அதில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை கிண்டி, கோவை ஆகிய இடங்களில் லீ மெரிடியன் ஹோட்டலை நடத்திவரும் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமிக்கு சொந்தமானதாகும். பழனி ஜி.பெரியசாமி மருத்துவமனையாக மாறப்போகும் பிரபல … Read more

38 பேருக்கு மரண தண்டனை! அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜூலை 26, 2008 அன்று, அகமதாபாத்தில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜூலை 26, 2008 அன்று நடந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற குழு பொறுப்பேற்றது. இதனிடையே, இந்த மாத … Read more

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும் மோடி அரசு…! ஆடியோ

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும், மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் சித்தனையுடைய பாஜக அரசு அவதூறு வீசுவதை கண்டிக்கும் வகையில் ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. அத்துடன் நேருவின் ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதையும் விளக்கி உள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/02/Pari-Audio-2022-02-18-at-1.11.52-PM.ogg

வெளி ஆட்கள் தங்கி இருக்கிறார்களா?: என ஆய்வு- லாட்ஜூகளில் போலீசார் விடிய விடிய சோதனை

சென்னை: தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் அதன் பிறகு வார்டுகளுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தங்கக் கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோன்று யாராவது தங்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இரவு தமிழகம் முழுவதும் விடிய விடிய லாட்ஜூகள், … Read more

முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிப்புல் கனி சாதனை

முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிப்புல் கனி சாதனை படைத்துள்ளார். மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 405 பந்துகளில் 341 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.