5 நதிகளை இணைக்க டெல்லியில் இன்று ஆலோசனை: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்துக்கு பெரிய வரப்பிரசாதம்

சென்னை: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்கும் வகையில் நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக … Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

தானே- திவா இடையே புதிதாக 2 ரெயில் பாதைகள் – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

மும்பை, மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையமாக உள்ளது. இதில் கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதையில் ஸ்லோ மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற 2 பாதையில் விரைவு மின்சார ரெயில்களுடன், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.  பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில், நீண்ட தூர ரெயில்களால் மின்சார ரெயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் தானே – … Read more

சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. இன்று சற்றே ஆறுதல்.. ஆபரண தங்கம் நிலவரம் என்ன?

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். இதற்கிடையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கத்திற்கான தேவையானது, இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், 5ல் 2 பங்கு தங்கத்தின் தேவையானது பாதுகாப்பு ரீதியாக முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா+நேட்டோ போட்ட மிகப்பெரிய வெடி.. தங்கம் விலை மீண்டும் உச்சம்..! முதலீடுகள் வெளியேறலாம் … Read more

விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற கர்நாடக அரசு; கன்னட மொழியில் சோலார் ஒப்பந்த நகல்!

இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான பாவகடாவின் ஒப்பந்த நகல் ஆங்கிலத்திலிருந்து கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறித்த புரிதலை இது விவசாயிகளுக்கு வழங்கும். மேலும் விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒப்பந்தத் தொகையை உயர்த்துவது குறித்தும் கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக சூரிய எரிசக்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டில் கர்நாடக அரசானது, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டது. அதற்காகப் பாவகடா பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள விவசாயிகளின் நிலங்களைக் குத்தகைக்கு எடுக்கவிருப்பதாகக் … Read more

மாணவி ஹேமமாலினி மர்ம மரணம்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் சாமியார் கைது… வெளிவரும் பகீர் பின்னணி

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் தொடர்பாக சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி ( 20) தனியார் பொறியியல் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து … Read more

மதிய உணவு சரியில்லை: அரியலூரில் அரசு பள்ளியை கண்டித்து மாணாக்கர்கள் சாலைமறியல்…

அரியலூர்: மதிய உணவு சரியில்லை என குற்றம் சாட்டி, அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு எதிராக மாணாக்கர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் , சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணாக்கர்களுக்கு சரியான முறையில் மத்திய … Read more

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு- வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் … Read more

சாமியாரின் ஆசிரமத்தில் மர்மான முறையில் கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கு: சாமியார் முனுசாமி கைது

திருவள்ளூர்: சாமியாரின் ஆசிரமத்தில் மர்மான முறையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சாமியார் முனுசாமியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2ம் நாளாக முடங்கிய கர்நாடக சட்டசபை இரவு, பகல் தர்ணா ஆரம்பித்த காங்கிரஸ்| Dinamalar

பெங்களூரு-கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தி காங்கிரசார் இரண்டாவது நாளாக சட்டசபையை முடக்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அவரை நீக்கும்வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என்று, சட்டசபையிலேயே தங்கி, இரவு, பகல் தர்ணா நடத்தி வருகின்றனர்.டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தொடர்பாக கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரசார் குற்றம் சாட்டினர்.எனவே அவரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க … Read more