கனடாவுக்கு புலம்பெயர்ந்த இளம்தம்பதி கைக்கு வந்த பல கோடி பணம்! சொந்த நாட்டுக்கு செல்லப்போகும் மகிழ்ச்சி

கனடாவுக்கு புலம்பெயர்ந்துசாதாரண நிலையில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் பரிசு பணத்தை எடுத்து சென்று தங்கள் சொந்த நாட்டில் வீடுகளை வாங்கவுள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் வசிக்கும் தம்பதி Emma மற்றும் Seabata Makhakhe. இந்நிலையில் தாங்கள் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததா என்பதை Seabata பார்த்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி ரூ. 7,97,83,989.05 (இலங்கை மதிப்பில்) விழுந்ததை அவர் கண்டுபிடித்தார். பின்னர் தம்பதிகள் மகிழ்ச்சியில் … Read more

நாளை வாக்குப்பதிவு: வெளிநபர்கள் தங்குவதை தடுக்க விடுதிகள், மண்டபங்களில் காவல்துறை சோதனை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் முறைகேடுகள் ஏற்படாதவாறு, வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல்  ஒத்தி வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் குட்டு காரணமாக, தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகள் கழித்து  … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை 28-ந் தேதி ராகுல்காந்தி வெளியிடுகிறார்

சென்னை: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி பிறந்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த மு.க.ஸ்டாலின் , பட்டப்படிப்புக்கு முந்தைய கல்வியை விவேகானந்தா கல்லூரியில் படித்தார். தொடர்ந்து, 1973-ம் ஆண்டு மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பள்ளி படிக்கும் போதே 1967-1968-ம் ஆண்டில், சென்னை கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க.வை மு.க.ஸ்டாலின் தொடங்கி, அரசியலில் ஈடுபட்டார். 1975-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி துர்காவை மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து கொண்டார். இப்படி அவரது … Read more

நாகை அருகே கொடூர சம்பவம் :மனைவி, 2 மகள்கள் மீது கல்லை தலையில் போட்டு கொன்று தானும் தற்கொலை!!

நாகை : நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் தனது மனைவி புவனேஸ்வரி 45, மகள்கள் வினோதினி (18), அக்சயா (15) ஆகியோரை கல்லை தலையில் போட்டு கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3  மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் காதல் திருமணம் செய்ததால், மன உளைச்சலில் இருந்த லக்‌ஷ்மணன், மனைவி மற்றும் இரு மகள்களை கொன்று தற்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சர்ச்சைக்குரிய மாத்திரை ரூ.47 கோடிக்கு விற்பனை| Dinamalar

புதுடில்லி: சர்ச்சைக்கு மத்தியில், கடந்த ஜனவரியில் மட்டும், 47 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.2 கோடி, ‘மோல்னுபிரவிர்’ கொரோனா மாத்திரைகளை, இந்திய மக்கள் வாங்கி உள்ளனர். நாட்டில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது முதல், அதற்கு பல மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு வந்தன. கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க நிறுவனம் தயாரித்த மோல்னுபிரவிர் மாத்திரைக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, நாட்டில் உள்ள 13 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மோல்னுபிரவிர் … Read more

எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..?

இந்திய பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டும் வரும் நிலையில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக மார்ச் மாதம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் உயர்த்த இருக்கும் வட்டி விகிதம், ரஷ்ய – உக்ரைன் எல்லை பிரச்சனை ஆகியவை முதலீட்டு சந்தை புரட்டி போட்டு வரும் நிலையில் தற்போது மும்பை பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் முதலீட்டில் அதிகப்படியான இழப்பைச் சந்தித்து கொண்டு இருக்கும் இந்தியச் … Read more

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்… என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்கான பெட்டகத்தை 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன், கூடங்குளம் அணுஉலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்த பதிலில், “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறுசுழற்சி மையத்துக்கு எடுத்துச்செல்லப்படும். … Read more

100 மைல் வேகத்தில் தாக்கவுள்ள புயல்., பிரித்தானியாவுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை!!

சுமார் 100 மைல் வேகத்தில் வீசக்கூடிய காற்றுடன் யூனிஸ் புயல் தாக்கவுள்ளதால் பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் யூனிஸ் புயல் (Storm Eunice) 100 மைல் வேகத்தில் பிரித்தானியாவை தாக்கவுள்ளது. வானிலை அலுவலகம் ஒரு அரிய சிவப்பு வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், பள்ளிகள், ரயில்கள் மற்றும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று கூறினார். … Read more

வார ராசிபலன்: 18.2.2022  முதல் 24.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க எடுத்துக்கிட்ட வெகுகால முயற்சிகள் அவ்வளவும் அதிரடியாப் பணத்தைப் பல மடங்கு கொண்டு வரப்போகிறதுங்க. பணம் பல வழிகளில் வந்தாலும் நல்வழியில் மட்டும் செலவு செய்து பேங்க்கில் இருப்புக்களை அதிகரிச்சுக்குவீங்க. ஏழ்மையில் உள்ளோர், ஆதரவற்றோர் போன்றோர்களின் காவலன் என்று பெயர் எடுப்பதில் பெருமிதம் கொள்வீங்க. ஒரு வேளை நீங்க பிசினஸ் செய்பவர் என்றால், உணவுப் பொருட்கள் உணவகங்கள், எலக்ட்ரானிக்ஸ் துறை மூலம் முழுமையான வருமானத்தை பெற்று மகிழ்வீங்க. தந்தையார் நலனில் கூடுதல் கவனம் தேவை, கண் … Read more

தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை நெருங்குகிறது: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.616 உயர்வு

சென்னை : தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் விலை குறைந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 663-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 304-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.77-ம், பவுனுக்கு ரூ.616-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும், ஒரு பவுன் ரூ.37 … Read more