ஒரே நேரத்தில் 20 கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு! பெண்ணொருவர் கொடுத்த புகாரையடுத்து பொலிஸ் அதிரடி

தமிழகத்தின் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை சாதிப்பெயரை சொல்லி அங்கிருந்த தீட்சிதர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை … Read more

கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கிய மோடி : பிரியங்கா காந்தி கடும் தாக்கு

பதான்கோட் மோடி ஏற்கனவே கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கி உள்ளார் எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.   தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் நிலையில் பாஜக இங்கு ஆட்சியைப் பிடிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.   பாஜகவுக்காகப் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் என பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்காக … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட பின்னர், பிரசாரம் விறுவிறுப்படைந்தது. வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். அதிகாலை முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது மக்களை சந்தித்து ஓட்டு … Read more

லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டம் ரத்து: தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு

சென்னை: அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து தேசிய நிறுவன தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

அசைக்க முடியாத சீன நிறுவனங்கள்.. 2 வருடத்தில் மொத்தமும் மாறியது..! #Xiaomi

இந்திய சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு மோடி அரசு சீனாவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. குறிப்பாக முதலீட்டுக்குத் தடை, சீன செயலிகளுக்குத் தடை, சீன உற்பத்தி நிறுவனங்கள் கண்காணிப்பு எனப் பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்திய சீனா எல்லையில் இருநாட்டு ராணுவத்திற்கு மத்தியில் நடந்த தாக்குதலின் போது கூட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சியோமி தனது MI பிராண்டை மேக் இன் இந்தியா என்று கூட … Read more

`மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’ தலைப்பில் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி… அதிகாரி பணி இடைநீக்கம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14 அன்று 5 முதல் 8 வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடைபெற்றது. இந்தப் பேச்சு போட்டியில் ‘மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’, ‘வானத்தில் பறக்கும் பறவைகளை மட்டுமே நான் விரும்புகிறேன்’ மற்றும் ‘நான் ஒரு விஞ்ஞானியாக மாறுவேன். ஆனால் அமெரிக்கா செல்ல மாட்டேன்’ என்ற மூன்று தலைப்புகளின் கீழ் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் … Read more

முடிவுக்கு வந்த மூன்று நட்சத்திர வீரர்களின் ஐபிஎல் வாழ்க்கை! முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த 14 வருடங்களாக விளையாடிய 3 நட்சத்திர வீரர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அமித் மிஸ்ரா 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தேர்வான அமித் மிஸ்ரா தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, 2022ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, … Read more

கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவரான ஏபிவிபிஐச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இவரை ஏற்கனவே பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவராகவும், பேராசிரியராகவும்  இருந்து வருபவர் மருத்துவர் சுப்பையா. இவர் பாஜகவின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) தேசியத் தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஊழியருக்கான நடத்தை … Read more

ரஞ்சி கோப்பை: மும்பை அணிக்காக சதம் விளாசிய ரகானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரகானே திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது. இதற்கிடையே பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, ரகானே ரஞ்சி டிராபியில் விளையாடி தனது ஃபார்மை திரும்ப பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், தான் சர்வதேச போட்டியில் சறுக்கியபோது ரஞ்சி டிராபியில் விளையாடினேன் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இன்று ரஞ்சி கோப்பை … Read more

திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை:பாலியல் தொல்லை அளித்த வழக்கில் திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு அரசின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.