வீடு வீடாக போய் எனக்கு ஓட்டு போட வேணாம்னு சொல்றாங்க! எப்போ ஒழியும்? சீமான் ஆவேசம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துதான் போட்டியிடுகிறது; நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம். வீடு வீடாகச் சென்று சீமானுக்கு வாக்கு செலுத்த வேண்டாம், அது பாஜகவுக்கு சென்று விடும் என்று பிரப்புரை செய்கின்றனர்; பாஜக தனித்து நிற்கிறது. அப்படி இருக்கும்பொழுது நான் எப்படி … Read more

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என  உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜித்தேந்தர சிங் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார்.  இத்திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்து உத்தரவு … Read more

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் வெற்றி யாருக்கு?- இறுதி கள நிலவரம்

சுற்றி சுற்றி வந்தார்கள்… முடியும், முடியாது என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் நாங்கள் வந்தால் எல்லாவற்றையும் செய்து முடிப்போம் என்ற ரீதியில் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்தார்கள். மக்களும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்கள். எல்லோரும் சொன்னவற்றை யோசிக்க நாளை ஒருநாள் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தங்கள் பிரதிநிதிகளை அடையாளம் காட்டப் போகிறார்கள். மக்கள் ரகசியமாக காட்டும் அடையாளம் 22-ந்தேதிதான் வெளிப்படையாக தெரிய வரும். நடைபெற உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சி தேர்தலிலும் எல்லோரது … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ரூ.37,920-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.77 உயர்ந்து ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.68.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிணற்றின் மேல்தளம் உடைந்ததால் உள்ளே விழுந்து 13 பெண்கள் பலி – திருமண நிகழ்ச்சியில் அரங்கேறிய சோகம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது விருந்தினர்களில் பெண்கள் வீட்டிற்கு பின்னால் அமைந்திருந்த கிணற்றின் மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.  கிணற்றின் மேல் பகுதி இரும்பு வலையான ஆன கான்கிரீட் மேடை அமைக்கபப்ட்டிருந்தது. அதன் மீது ஏறி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். … Read more

4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

உலகளவில் ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தப் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மிகவும் டிரெண்டான விஷயம் இரண்டு. சீனாவில் பிரபலமாகி வரும் 996 முறை, மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் வாரத்தில் 4 நாள் மட்டுமே பணியாற்றும் கலாச்சாரம். இதில் வாரத்தில் 4 நாள் மட்டுமே பணியாற்றும் கலாச்சாரம் அதிகப்படியான நாடுகளில் பயன்படுத்தத் துவங்கிய நிலையில் பெல்ஜியம் நாட்டின் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 … Read more

AK- 61: அஜித்துடன் முதல்முறை இணையும் இசையமைப்பாளர்! லுக்கை வடிவமைத்தது யார்? – ஆச்சர்யத் தகவல்கள்!

அஜித்தின் ரசிகர்கள் `வலிமை’ ரிலீஸில் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆனால் ஹெச்.வினோத்தின் டீமோ ‘ஏகே61’க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர். ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. செட் வேலைகள் நிறைவடைந்த பின்பு, படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகின்றன. ஹீரோயினாக தபுவை கமிட் செய்துள்ளனர். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திற்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜித்துடன் நடிக்கிறார் தபு. ‘வலிமை’யில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மாற்றிய அஜித், இதிலும் … Read more

சுவிட்சர்லாந்தில் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் நேற்று நள்ளிரவுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆகவே, இனி பொது இடங்களுக்குள் நுழைய சுகாதார பாஸ்கள் தேவையில்லை. பணித்தலம், கடைகள், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இனி மாஸ்க் அணியவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது இப்போதைக்கு மாஸ்க் அணியவேண்டும். என்றாலும், அந்தக் கட்டுப்பாடும் அடுத்த மாத இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. இப்போதைக்கு ஒரு விதியில் மட்டும் மாற்றமில்லை. அதாவது கொரோனா பரிசோதனையில் தங்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவருவோர் தங்களை … Read more

‘ஹிஜாப்’ முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது! கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், ஹிஜாப் குறித்து குரானில் ஏதும் சொல்லப்படவில்லை, ஒரு பிரிவினரின் பிற்போக்கானமனநிலையின் விளைவு, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் விமர்சித்துள்ளார். பள்ளிகளில் அனைவரும் சமம் என்பதை உணர்த்திடவே சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை சரியாக கடைபிடிக்காத காரணத்தால், தற்போது மத ரீதியிலான பிரச்சினைகள் எழுந்துள்ளன.  கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், … Read more