பயங்கரவாதிகளிடம் சிக்கி கொண்ட கணவன்: மீட்க காட்டுக்குள் சென்ற மனைவி

இந்தியாவில் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தனது கணவரை தேடி மனைவி காட்டு பகுதிக்கு சென்று இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் கட்டுமான கம்பெனியில் இன்ஜினீயராக பணிபுரிந்து வரும் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ் ஆகிய இருவரை சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர். இந்த நிலையில், அவரது மனைவி சோனாலி பவார் தனது இரண்டு குழந்தைகள் உடன் இணைந்து, அசோக் பவரை விடுவிக்குமாறு மிகவும் … Read more

பாஜக எம்பி யின் ஆபாச பதிவு : காங்கிரஸ் பெண் நிர்வாகி புகார்

நொய்டா நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி பங்குரி பதக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ரவி கிஷன் பாஜகவின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.   அதே மாநிலத்தைச் சேர்ந்த பங்குரி பதக் காங்கிரஸ் பெண் நிர்வாகி மற்றும் நட்சத்திர பேச்சாளர் ஆவார்.   இவர் நொய்டா காவல் நிலையத்தில் ரவி கிஷன் மீது அளித்த புகார் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பங்குரி பதக் தனது … Read more

கட்டப்பஞ்சாயத்து செய்யாத கவுன்சிலர் வேணுமா… பாஜகவுக்கு ஓட்டு போடுங்க: அண்ணாமலை பிரசாரம்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது, முதலமைச்சர் நேரில் வந்து வாக்கு சேகரிக்காத முதல் தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளதாக விமர்சனம் செய்தார். சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது:- முதல்வர் நேரில் வந்து பிரசாரம் செய்யாமல் அவரது அறையில் இருந்து கம்ப்யூட்டரைப் பார்த்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். 2 கோடியே 64 லட்சம் பேர் ஓட்டு போடும் தேர்தலில் மாநில … Read more

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி பந்து வீச்சு| Dinamalar

கோல்கட்டா: விண்டீஸ் அணிக்கு எதிரான டுவெண்டி 20 முதல் போட்டியில்இந்தியஅணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இன்று கோல்கட்ட ஈடன் மைதானத்தில் நடக்கிறது. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து … Read more

சென்னை பெண் செய்த காரியத்தால் வாயடைத்து போன சோமேட்டோ.. இது தான்டா ஒரிஜினல் காதல்..!

உலகம் முழுவதும் மக்கள் காதலர் தினத்தைப் பலவிதமாகக் கொண்டாடி இருப்பார்கள், ஆனால் யாரும் நம் சென்னை கல்லூரியை சேர்ந்த தீக்ஷிதா மாதிரி கொண்டாடி இருக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம். பிப்ரவரி 14ஆம் தேதி எங்குத் திரும்பினாலும் காதல் மற்றும் காதலர்கள் குறித்த பதிவுகள் தான் சமுகவலைதளத்தில் டிரெண்டாகிக் கொண்டு இருக்கையில் லின்கிடுஇன் தளத்தில் தீக்ஷிதா பாசு போட்ட பதிவு டேட்டிங் பதிவு தான் வைரல். காதலர் தின ஸ்பெஷல்: உலகம் முழுவதும் பெங்களூர் ரோஜா..! தீக்ஷிதா … Read more

உள்ளாட்சி ரேஸ்: அடித்து ஆடும் அதிமுக; குஸ்தி சண்டையில் திமுக! -திருப்பூர் மாநகரம் யாருக்கு?

திருப்பூர் மாநகராட்சி ஆளும்கட்சியாக இருந்தாலும் தி.மு.க-வுக்கு கொங்கு மண்டலம் எப்போதும் கண்டம்தான். தற்போதைய அமைச்சரவையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தி.மு.க-வுக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். பார்ப்பதற்கு பவர்புல்லாக தெரிந்தாலும், கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டும்தான் தி.மு.க வென்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் `ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!’ – அரசுக்குக் கடிதம் எழுதிய திருப்பூர் கான்ட்ராக்டர் அதில் 2 தொகுதிகள் புறநகர் பகுதியை சேர்ந்தவை. மாநகராட்சி பகுதிகளில் … Read more

ஒரே நாளில் டிரெண்டான பெண்! தனக்கு கிடைத்த வெகுமதி பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

ஹிஜாப் விவகாரத்தில் டிரெண்டான முஸ்கான் என்ற பெண் தனக்கு வெகுமதியாக கிடைத்த பணத்தை மருத்துவமனைக்கு வழங்க முடிவு செய்துள்ளார். கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் காவி துண்டினை அணிந்து “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட்ட மாணவர்கள் கூட்டத்தை எதிர்கொண்டு, “அல்லாஹு அக்பர்” என்று பதில் கோஷம் எழுப்பினார் ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி முஸ்கான் கான். இந்தியா முழுவதிலும் இருந்து முஸ்கான் கானுக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில், பலரும் வெகுமதி பரிசுகளை அறிவித்தனர். … Read more

இந்தியாவில் கடந்த இரண்டு மாதத்தில் விலைவாசி உயர்வு 6.01 சதவீதமாக அதிகரிப்பு! தேசிய புள்ளியியல் அலுவலகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த இரண்டு மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளதாகவும்,  கடந்த 2021ம் ஆண்டு  டிசம்பரில் 5.66% ஆக இருந்த சில்லறை விலைவாசி உயர்வு விகிதம், தற்போது (2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி) 6.01% ஆக அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத்தொடர்ந்து, கடந்த இரு ஆண்டுகளாக விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரி வசூலும் முக்கிய … Read more

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தின் போது ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணியின் … Read more