ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்கள்…

பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே  கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்களைத் தொடர்ந்து இன்று மாலை 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  முதல்நாளில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஹிஜாப், காவி துண்டு அணிந்து பள்ளிக்கு … Read more

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு

வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உருமாறிய கொரோனா வைரசுகளுக்கு எதிராகவும் தடுப்பு மருந்துகள் நல்ல பலன்களை அளிக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய போது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அது நல்ல பலனை அளிக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த … Read more

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நடவடிக்கை

திருவண்ணாமலை: திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

மராட்டிய சட்டசபையில் மார்ச் 11-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

மும்பை, மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது. இதில் மார்ச் 11-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  மார்ச் 25-ந் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நாக்பூரில் நடைபெறுவது வழக்கம். ஆனால், முதல்-மந்திரி … Read more

மோடியின் ஒரேயொரு உத்தரவு.. 16 பில்லியன் டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் #FreeFire..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 14ஆம் தேதி சீனா உடன் தொடர்புடைய 54 ஆண்ட்ராய்டு செயலிகளைத் தடை செய்வதாக அறிவித்தது. தற்போது தடை செய்யப்பட்ட பெரும்பாலான செயலிகள் 2 வருடத்திற்கு முன்பும் இந்திய மக்களின் தனிநபர் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்ட 100க்கும் அதிகமான செயலிகளின் மாற்று வடிவம் அல்லது பெயரை மாற்றி மீண்டும் இந்தியச் சந்தைக்குள் நுழைந்த சீன செயலிகள் என மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) … Read more

சுதந்திர இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர்! – 106 வயதில் மரணம்!

கோவை கருப்பராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். 106 வயதான, அவர் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தார். விவசாயியான மாரப்பனுக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் மூலம் 4 பேரன்கள், 4 பேத்திகள் உள்ளனர். சுதந்திர இந்தியாவுக்கு முன்பே பிறந்ததால் காந்தி, நேரு போன்ற தலைவர்களின் பணிகளை நேரடியாக பார்த்தவர். வாக்கு கோவை: வாகனம் மோதியது தொடர்பாகத் தகராறு… கொலைவெறித் தாக்குதலில் ஒருவர் கொலை! – போராட்டம், பதற்றம் சுதந்திர இந்தியாவின் … Read more

சனிபகவானால் துன்பங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இன்றைய ராசிப்பலன்

2021 ஜனவரி 18ம் தேதியிலிருந்து சனி பகவான் மகர ராசியில் சஞ்சரித்து வருகின்றது. ஜோதிடத்தில், சனி பகவான் நீதி பகவானாக பார்க்கப்படுகிறார். தற்போது மகரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற சனி பகவானுடன், மேலும் செவ்வாய், புதன், சுக்கிர கிரகங்களின் சேர்ந்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் இந்த சனியின் பெயர்ச்சியால் இன்றைய நாள் துன்பங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.  உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    … Read more

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா முக்கிய ஆலோசனை….

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பளிங்கென் இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டதாக வெள்ளை மாளிகையின் ஊடகத் துறை இணைச் செயலாளர் கரைன் ஜீன் பியர்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். ஜீன் பியர்ரி இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் குவாட் அமைப்பு சார்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் … Read more

தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் நாளை பிரேமலதா பிரசாரம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகவே அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்தார். மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் அவர் காணொலி காட்சி மூலம் அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டினார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், … Read more