உக்ரைன்-ஐ தொட்டால்.. பெட்ரோல் விலை 120, சன்பிளவர் ஆயில் விலை 200.. இந்திய மக்கள் பாவம்..!

கொரோனா, ஒமிக்ரான்-ஐ தொடர்ந்து உலக நாடுகளின் விலைவாசி தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில் பணவீக்கத்தை எதிர்த்து போராடி வரும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் எல்லை பிரச்சனை பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. இவ்விரு நாடுகளின் பிரச்சனை ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா எனப் பல முன்னணி நாடுகளைப் பாதிக்கும் காரணத்தால் வல்லரசு நாடுகள் தனது ஆதிக்கத்தைக் காட்ட அண்டை நாடுகள் உடன் கூட்டணி சேர துவங்கியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் மத்தியில் போர் மூண்டால் உலக நாடுகள் … Read more

பாலிவுட்டில் டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்திய பாடகர் பப்பி லஹிரி மறைந்தார்!

பாலிவுட்டில் 1980, 90 களில் டிஸ்கோ நடனத்தை அறிமுகம் செய்து பிரபலமானவர் பப்பி லஹரி. சிறந்த இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விளங்கிய பப்பி லஹிரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த திங்கள் கிழமை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய் கிழமை மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடனே டாக்டர் ஒருவரை உடனே வீட்டிற்கு அழைத்து குடும்பத்தினர் சிகிச்சை கொடுத்தனர். ஆனால் டாக்டரின் பரிந்துரையின் பேரில் … Read more

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உண்மையை போட்டுடைத்த முரளிதரன்

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன் அணி வீரர்கள் குறித்து  பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியிலும் தேர்வு செய்தனர். இந்த ஏலத்தில் அதிகப்பட்சமாக மும்பை அணியால் இஷான் கிஷான் ரூ.15.25 கோடிக்கும், … Read more

பாரதிய ஜனதாவின் சின்ன வீடு அண்ணா திமுக : காங்கிரஸ் தலைவர் கிண்டல்

ஈரோடு கூட்டணியில் இல்லை என்றாலும் பாஜகவின் சின்ன வீடாக அதிமுக இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர், “எடப்பாடி பழனிச்சாமி கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளையில் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பது விசாரணைக்குப் பிறகு முழுமையாக வெளிவரும்.  எனவே நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிசாமி இருக்கப்போகிறார். நான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டினை சொல்லியுள்ளேன்.  தேர்தலில் … Read more

ஓட்டலில் உணவு பரிமாறும் பட்டு சேலை அணிந்த ரோபோ

பெங்களூரு: இன்றைய நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வேலைப்பாடுகள் குறைந்து மின்சாதன பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் மைசூருவில் பிரபலமான சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ பட்டு சேலையுடன் வந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு கொண்டு வருகிறது. என்னதான் அறிவியல் வளர்ச்சி பிரமிக்கவைத்தாலும், நாம் கேட்டதும் கொண்டு வரும் ஓட்டல் ஊழியர்கள் போல் ரோபோவால் ஓடோடி … Read more

திமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கம் : துரைமுருகன் அறிவிப்பு

சென்னை : திமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் .தலைமை அறிவித்த வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்ட நிர்வாகிகள், கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவோர் என தற்போது 19 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நதிகள் இணைப்பு திட்டம்: ஆணையம் அமைத்தது அரசு| Dinamalar

புதுடில்லி:கென் – பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது.சமீபத்தில், மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நதிகளை இணைக்கும் திட்டங்கள் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.கென் – பெட்வா நதிகளை இணைக்க, 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், கென் – பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்திற்காக, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது. … Read more

பீகாரில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு

பாட்னா,  சாயத்துக்காக அவுரிச்செடியை கட்டாயமாக பயிரிட உத்தரவிட்ட ஆங்கில அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி, 1917-ம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பாரனில் சத்தியாகிரக இயக்கத்தை தொடங்கினார். அதை நினைவுகூரும்விதமாக இங்குள்ள ராட்டை பூங்காவில் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை நேற்று முன்தினம் இரவு உடைத்து கீழே தள்ளப்பட்டிருந்தது. இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் அன்றைய இரவு மதரீதியிலான முழக்கங்கள் கேட்டதாகவும், எனவே மதச்சார்பு குழுக்கள்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றும் … Read more

உக்ரைன் எல்லையில் படைகள் குறைப்பு? ரஷ்யா முடிவால் 1700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 2வது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் தொடங்கின. முடிவிலும் நல்ல ஏற்றத்தினை கண்டு முடிவடைந்துள்ளன. இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அந்த சூழலில் இருந்து சற்று மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிகின்றது. 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு … Read more

உக்ரைன் விவகாரம்: “அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்!” – ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யா – உக்ரைன் விவகாரமானது, உலக அளவில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் போர்ச்சூழல் காரணமாக, அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் உக்ரைனில் வசித்துவரும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றன. பல நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நட்டு தூதரகங்களையும் மூடிவருகின்றன. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் குவித்து வைத்திருந்த 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் சில குழுவினரை தங்கள் நாட்டு … Read more