லாலு மீதான ஊழல் வழக்கு : உச்சநீதிமன்றத்தை அணுக உள்ள தேஜஸ்வி

பாட்னா கால்நடை தீவன ஊழலில் மற்றொரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.   பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்,  கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து தண்டனை வழங்கியது. அவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ளார்.   இது தவிர லாலு பிரசாத் யாதவ் மீது 5-வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அந்த தோரந்தா … Read more

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20 போட்டி – இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

கொல்கத்தா: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது.  இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20  போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகி விட்டதால் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது.  சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசைப்பிடிப்பால் விலகியுள்ளால் அவருக்கு … Read more

பிப்-16: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சிறுநீரகம் தானம் பெற்றவர்கள் திருமணம்| Dinamalar

பெங்களூரு : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மீண்ட இருவர், காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர்.பெங்களூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு, 30 ஆண்டுக்கு முன் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. முதல் குழந்தையை இழந்தனர். அதன் பின், அபினாஷ் என்ற மகன் பிறந்தார். ஆரம்பத்தில் மற்ற குழந்தைகள் போல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. காலப்போக்கில், அபினாசுக்கும் சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2013ல் தாய், தன் மகனுக்கு ஒரு சிறுநீரகம் வழங்கினார். … Read more

ஏபிஜி ஷிப்யார்ட்: ரூ.22,842 கோடி கடன் மோசடி செய்த அதிகாரிகள் மீது லுக்அவுட் நோட்டீஸ்..!

இந்திய மக்கள் இன்னும் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் வங்கி கடன் மோசடி செய்தியின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராத நிலையில், இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியைக் கப்பல் கட்டுமான நிறுவனமான ஏபிஜி ஷிப்யார்ட் செய்துள்ளது. ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் செய்த 22842 கோடி ரூபாய் வங்கி மோசடி மூலம் வங்கி பங்குகள் தொடர்ந்து மந்த நிலையில் இருக்கும் நிலையில்,ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத் தலைவர்கள் நாட்டை விட்டுத் தப்பிக்கக் கூடாது என்பதற்கான லுக்அவுட் … Read more

இந்தியா – இலங்கை தொடரில் புதிய மாற்றம் : பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா – இலங்கை அணிகள் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.  இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணியின் கோரிக்கையை ஏற்று டி20 தொடர் முதலில் நடத்தப்படவுள்ளது.  அதன்படி  முதல் டி20 போட்டி  பிப்ரவரி 24 ஆம் தேதி லக்னோவிலும், 2வது டி20 வரும் … Read more

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலத்தை நீட்டித்துள்ளார். தமிழகத்தின் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.  இங்கு பிச்சுமணி துணை வேந்தராக உள்ளார்.  இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இன்று வரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு  புதிய துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை.  இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் … Read more

அஜித்தின் அடுத்த படத்தின் புதிய லுக் – தீயாய் பரவும் புகைப்படம்

சென்னை: வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்படத்தையும் (ஏகே 61) வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் அஜித்தின் புதிய லுக்கை போனிக்கபூர் வெளியிட்டுள்ளார். காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வித்தியாசமான லுக்குடன் அஜித் இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது.  அந்த கெட்டப்பில் தான் … Read more

ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்வு| Dinamalar

புதுடில்லி :கடந்த ஜனவரியில், இந்தியாவின் ஏற்றுமதி, 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆபரணங்கள் இந்தாண்டு ஜனவரியில் பொறியியல், பெட்ரோலியம், நவரத்தினங்கள் மற்றும் துறைகள் சிறப்பாக செயல்பட்டதால், ஏற்றுமதி, 25.28 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.அதே சமயம் இதே காலத்தில் நாட்டின் இறக்குமதி, 23.54 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 475 கோடி … Read more

யார் இந்த குர்சவுரப் சிங்.. ஆனந்த் மஹிந்திராவை பிரமிக்க வைத்த நபர்.. உங்களுக்கு தெரியுமா?

ட்விட்டரில் எப்போதும் பிசியாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, புது புது கண்டுபிடிப்புகள், ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வுகள் என பல சுவாரஷ்யமான விஷயங்களை பகிர்ந்து வருபவர். அதுமட்டும் திறமைகளை ஊக்குவிப்பதோடு, பாராட்டவும் செய்வார். ஏன் புதிய கண்டிபிடிப்பாளர்களை பாராட்டுவதோடு மட்டும் அல்ல, தேவையான உதவிகளையும் செய்வார். 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! அப்படிப்பட்டவர் தற்போது தனது சாதாரண சைக்கிளை மின்சார சைக்கிளாக சில நிமிடங்களிலேயே மாற்றியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். … Read more