Kacha Badam: வேர்கடலை வியாபாரி டு வைரல் பாடகர் பூபன் பத்யாகரின் கதை தெரியுமா?

`மேற்கு வங்க மாநிலத்தில் குரல்ஜூரி என்னும் கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வருபவர் தான் இந்த ‘பூபன் பத்யாகர்’. எப்போதும் பாடல் பாடிக்கொண்டே வேர்க்கடலை விற்று வருவதுதான் இவரது இயல்பு. அவ்வாறு வேர்க்கடலை விற்றுக்கொண்டே ‘கச்சா பாதாம்’ என்று வாயில் முணுமுணுத்த படி இவர் பாடிய பாடலுக்கு ரசிகரான அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், கடலை விற்றுக்கொண்டே பாடல் பாடும் பூபன் பத்யாகரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதற்குப்பின் அவரது கிராம மக்கள் … Read more

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

“தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு ஏற்ப கட்சிக்கு வெளியில் இருந்து செயலாற்றுவதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளேன்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கடிதம் எழுதியுள்ளார். 2012-2013ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராகப் பணியாற்றிய அஸ்வனி குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான தனது 46 ஆண்டுகால தொடர்பை முறித்துக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா … Read more

திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது- பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். எனவே, தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக … Read more

ஏற்றத்தில் நிறைவு பெற்ற பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1736 புள்ளிகள் உயர்ந்து 58,142 புள்ளிகளில் வணிகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1736 புள்ளிகள் உயர்ந்து 58,142 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 509 புள்ளிகள் அதிகரித்து 17,352 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவு பெற்றது.

இண்டர்நெட் முடங்கும் அபாயம்.. கூகுள், அமேசான், நெட்பிளிக்ஸ் பதற்றம்.. புதிய தலைவலி..!

இன்று உலகம் முழுவதும் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் பதற்றமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியக் காரணம் உலகம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் இண்டர்நெட் முடங்கலாம், டெக் நிறுவனங்களின் சேவை முடங்கலாம் என்பதால் தான். இந்தப் பதற்றமான சூழ்நிலைக்கு முக்கியக் காரணம் உலகில் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும் அரிய பொருட்களில் ஒன்றான ஹீலியம் தான். 2 நாளில் ரூ.12 லட்சம் கோடி காலி.. பாதாளம் நோக்கி சென்ற சென்செக்ஸ்.. … Read more

`இந்தியர்களே… உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்!' – இந்திய தூதரகம் அறிவுரை

ரஷ்யாவும் உக்ரைனும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள். ஏற்கெனவே இரு நாடுகளுக்கு மத்தியில் மோதல் போக்கு நிலவிவந்தாலும், எப்போது உக்ரைன் அமெரிக்காவின் நேட்டா வில் இணைய முடிவு செய்ததோ அப்போதிலிருந்து பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. … Read more

வாய் துர்நாற்றம் உடனே சரியாக வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்றை வாயில் போட்டு மெல்லுங்க

பொதுவாக உடலில் உள்ள பிரச்னைகளில் மிக மோசமானதும், சகிக்க முடியாததும் என்றால் அது வாய் துர்நாற்றம் தான். இதனால் மற்றவர்கள் அருகில் வரவே பயப்படுவார்கள். இவை வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக பல் சொத்தை, தீய பழக்க வழக்கங்கள், சரியாக பல் விலக்காதது, வாய் உலர்ந்து போவது மற்றும் வெற்றிலை பாக்கு போடுவது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றை எளியமுறையில் சில பொருட்களை கொண்டு போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.    வாய் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் , பேரூராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு , வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக , தேர்தல் நடைபெறும் பகுதிகளில் , … Read more

நீட் விவகாரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. பொதுவிவாதம் நடந்தால் நானும் தயார்: அன்புமணி அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முதலாக நடக்கும் தேர்தலில், உறுதியாக மேயராக பா.ம.கவை சேர்ந்தவர் வருவார். காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மேயராக பா.ம.க. வெற்றி பெற்றவுடன், போடும் முதல் கையெழுத்து டாஸ்மாக் இல்லாத நகரமாக மாற்றுவது ஆகும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் நீட் வர அ.தி.மு.க. தான் … Read more