வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவலுக்கு இடையே பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அதற்காக மாணவர்களை தயார்படுத்தும் நிலையில் ஆசிரியர்கள் கற்றல் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது. காலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வை எப்படி … Read more

கடலூரில் பரபரப்பு: வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

கடலூர்: கடலூர் மாவட்டம் வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரன்ஸ் சாலையில் உள்ள கடையில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். விருதாச்சலத்தில் உள்ள ஜெயின் நகை கடையிலும் உரிமையாளர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 27 ஆயிரமாக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 34 ஆயிரமாக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 27 ஆயிரமாக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,409 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,26,92,943 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 82,817 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,17,60,458 ஆனது. தற்போது 4,23,127 பேர் … Read more

கர்நாடகத்தில் பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் நாளை திறப்பு மாநில அரசு அறிவிப்பு

பெங்களூரு,  உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் கடந்த 8-ந் தேதி போராட்டம் நடத்தினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டு மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர … Read more

ஹேப்பி நியூஸ்.. 2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. MCX & COMEX நிலவரம் என்ன?

தங்கத்தின் விலையானது கமாடிட்டி சந்தையில் மூன்று மாத உச்சத்தில் காணப்படுகின்றது. இது கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்னும் விதமாகவே காணப்படுகின்றது. அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் விலையானது இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டுள்ளது. இது தங்க ஆர்வலர்களுக்கும், தங்க முதலீட்டாளர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்திய கமாடிட்டி சந்தையிலும் தொடர்ந்து … Read more

`டெட்’ தேர்வுடன் `நீட்’ தேர்வை அண்ணாமலை ஒப்பிடுவது சரியா?! – ஓர் அலசல்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தில், தமிழக தி.மு.க அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வையும், ஆசிரியர் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் ‘டெட்’ தேர்வையும் ஒப்பிட்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். டெட் தேர்வு “ஆசிரியர் பணிக்கு பி.எட் தேர்வு மதிப்பெண் இருந்தும், ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் … Read more

சாலையிலேயே நின்று பர்தாவை கழற்றிய ஆசிரியை! பெரும் சலசலப்பை கிளப்பிய வீடியோ

இந்தியாவின் கர்நாடகாவில் பள்ளிக்கூடத்திற்கு ஹிஜாபுடன் வந்த ஆசிரியைகள், மாணவிகளை ரோட்டிலேயே அதை அகற்ற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஹிஜாப், பர்தா பிரச்சனை மீண்டும் தலை தூக்கியுள்ளது. அதன்படி நேற்று ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளோடு, ஆசிரியைகளும் அதை வாசலில் நின்று அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பள்ளி வளாகத்திற்குள் கூட அனுமதிக்காமல் ரோட்டிலேயே நின்று ஹிஜாப்பை அகற்றுமாறு மாணவிகளை ஆசிரியர்கள் வலியுறுத்தியதால் பெரும் … Read more

மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமான வார்டனை சிறைவாசலில் வரவேற்ற திருச்சி எம்எல்ஏ…! மீண்டும் சர்ச்சை…

தஞ்சாவூர்: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் நேற்று வெளியே வந்த வார்டன் சகாயமேரிiய சிறை வாசலுக்கு சென்று திருச்சியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வார்டன் சகாய மேரியை சிறை வாசலில் வரவேற்ற காங். எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஏற்கனவே மாணவியின் தற்கொலை வழக்கில், திமுகவினரும், திமுக கூட்டணி கட்சியினரும், காவல்துறையினரும் ஒருதலைப்பட்சமாக பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்ததால், வழக்கை … Read more

உயர்வுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 56,405.84 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதும் 265 புள்ளிகள் உயர்ந்து 56,731 புள்ளிகளுடன் வர்த்தகமானது. பங்குச்சந்தையின் இடையில் அதிகபட்சமாக 550 புள்ளிகள் உயர்ந்து 56,955.09 வர்த்தகமானது. குறைந்சபட்சமாக 56,539.32 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தற்போது 10 மணி நிலவரப்படி வர்த்தகம் சென்செக்ஸ் புள்ளிகள் 210 புள்ளிகள் உயர்ந்து 56,615.95 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. அதபோல் தேசிய பங்குசந்த்தையில் நிஃப்டி இன்று காலை … Read more

தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா குறைந்த நிலையில் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.