யாருக்கும் சட்டசபையை முடக்கும் அதிகாரம் கிடையாது : ப சிதம்பரம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சட்டசபையை முடக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.   மேற்கு வங்க ஆளுநர் சமீபத்தில் அம்மாநிலச் சட்டசபையை திடீரென முடக்கி வைத்து உத்தரவிட்டார்.    ஏற்கனவே அவருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் நடக்கும் பனிப்போரே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.   இதற்கு எதிர்க்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு கூட்டத்தில் விரைவில் தமிழக சட்டசபையை … Read more

10-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு: மேலும் ஒரு வினாத்தாள் கசிந்தது

சென்னை: தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் இப்போது நடந்து வருகிறது.   திருவண்ணாமலையில் 14-ம் தேதி நடக்கவிருந்த 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வும், பிளஸ்2-க்கு கணிதத் தேர்வும் வினாத்தாள்கள் வெளியானதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வினாத்தாள் வெளியானது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று ரூ.110 கோடி நிரந்தர வைப்புத் தொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செக்போஸ்ட்| Dinamalar

தப்பித்தது ஏரி!ஆ.பேட்டை அருகேயுள்ள பிராங்க் அண்டு கோ ஏரியில் செடி கொடிகள், முட்கள் வளர்ந்து புதர் மயமாகி உள்ளது.பல்வேறு இடங்களின் சாக்கடை கழிவுகள் வந்து சேர்ந்து, ஏரியை நாசமாக்கி உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஏரி நீர் வயல்களுக்கு பாசனமாக இருந்தது. நல்ல விளைச்சலை கொடுத்தது. தற்போது இந்த ஏரி, ஜந்துக்களின் பிறப்பிடமாக மாறியுள்ளது. இங்கு விஷப் பாம்புகள் சிலரை கடித்து பெரும் பாதிப்பை கொடுத்ததை அப்பகுதியினர் மறக்கவில்லை. இங்குள்ள நடைபாதை மேம்பாலமும் ஆபத்தான கதியில் உள்ளதால் … Read more

இன்னும் சில நாட்களில் சிறை செல்லும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை இன்று அறிவிப்பேன்: சஞ்சய் ராவத்

பதிலடி கொடுக்கப்படும் மராட்டியத்தில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவி செய்யுமாறு சிலர் தன்னை அணுகியதாக கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய முகமைகளின் அதிகாரத்தை வைத்து எங்களை மிரட்ட வேண்டாம். நாங்கள் அதற்கு பயப்படபோவதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் அஞ்சப்போவதில்லை. இதேபோல சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரே குடும்பத்தின் மீது கூறப்படும் பொய்யான … Read more

ரூ.6 டூ ரூ.150.. பல மடங்கு லாபம் கொடுத்த பென்னி பங்கு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்னர் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, பிறகு முதலீடு செய்வது நல்லது. அதிலும் பென்னி பங்குகளில் முதலீடு செய்யும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து, ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் எல்லா பென்னி பங்குகளும் லாபகரமான மல்டிபேக்கர் பங்குகளாக ஏற்றம் காண்பதில்லை. அந்த வகையில் நாம் இன்று அலசி ஆராயவிருப்பது ஒரு பென்னி பங்கினை பற்றி தான். அது என்ன பங்கு? எந்தளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. … Read more

ஆளுநர்களுக்கு எதிரான தேசிய இயக்கம்; முன்னெடுக்கும் மம்தா, ஸ்டாலின்?! -அதன் தாக்கம் எப்படியிருக்கும்?

மேற்குவங்க முதல்வர் மம்தா பானார்ஜிக்கும், அந்த மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே நீண்ட நாள்களாக உரசல்கள் இருந்துவருகின்றன. இந்த நிலையில், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அரசியலமைப்புச் சட்டத்தின் 174-வது பிரிவு தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிப்ரவரி 12-ம் தேதி முதல் மேற்குவங்க சட்டசபையை முடக்குவதாக உத்தரவிட்டார். ஜக்தீப் தன்கரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பியது. இதையடுத்து, மேற்குவங்க ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். … Read more

உக்ரைனை எந்த நேரத்திலும் தாக்க தயாராக இருக்கும் ரஷ்யா! உளவுத்துறை தகவல்

உக்ரைன் எல்லையில் எந்த நேரத்திலும் பல தாக்குதல்களை நடத்தவும், கியேவைக் கைப்பற்றவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தாக்க முடிவு செய்தால், உக்ரைனின் தலைநகர் கீவை (Kiev) முக்கிய இலக்காக வைத்து உக்ரைனின் எல்லையில் பல தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகளின் கூறுகின்றனர். ரஷ்யப் படைகளைக் கட்டியெழுப்புவதும் ஆயுதங்களையும் பீரங்கிகளை விநியோகிப்பதும் படையெடுப்பைத் தவிர வேறு எதற்காகவும் இருக்க முடியாது என்று மேற்கத்திய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். … Read more

இந்திய பங்குச் சந்தையில் சித்ராவும் சித்த புருஷரும் நடத்திய சித்து விளையாட்டு…

4 ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தை கட்டுப்படுத்தக் கூடிய தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சித்ரா ராமகிருஷ்ணன் தனக்கு பரிச்சயமே இல்லாத முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் வந்த ஈ-மெயில் உத்தரவுகள் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நடத்திய விசாரணையின் அறிக்கை வெள்ளியன்று வெளியான நிலையில், இன்றைய பங்குவர்த்தகத்தில் இது எதிரொலித்தது. நிதி … Read more

ஜிம்பாப்வே நாட்டில் 90 சதவீத ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக  அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.  பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் கடந்த வியாழன் அன்று எச்சரித்திருந்தது. எனினும் போராட்டம் தொடரும் நிலையில், பொதுப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 1, 40,000 பேரில் 1,35,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீத ஆசிரியர்களை அரசு இடை நீக்கம் … Read more