எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எல்.ஐ.சி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய – முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். இம்முடிவு மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று. ஒரு நல்லரசு என்பது … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு: ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிரசாரம் முடிந்த பின் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

ஏர் இந்தியா சி.இ.ஓ.,வாக இல்கர் அய்சியை நியமித்தது டாடா நிறுவனம்| Dinamalar

புதுடில்லி: துருக்கி ஏர்லைன்ஸ் தலைவராக பணியாற்றிய இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ), நிர்வாக இயக்குநராகவும் (எம்.டி) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு மத்திய அரசு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா … Read more

ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..!

இந்தியாவில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் சில்லறை பணவீக்கம் ஜனவரி 2022ல் ஆறு மாத உச்ச அளவான 6.01 சதவீதத்தை எட்டியுள்ளது. நாட்டின் சில்லறை பணவீக்கம் டிசம்பர் 2021ல் 5.59 சதவீதமாக இருந்தது, இது ஐந்து மாத உயர்வாகும், அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 6 மாத உயர்வை எட்டியுள்ளது. உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட தொடர் உயர்வின் காரணமாக ரீடைல் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. உணவுப் பணவீக்கம் 2021 டிசம்பர் மாதம் 4.05 … Read more

நீட் உதயமாக காங்கிரஸ் – திமுக காரணமா? – அதிமுக-வின் தொடர் குற்றச்சாட்டும்… எதிர்தரப்பு விளக்கமும்!

“நீட் தேர்வை ரத்துசெய்வதற்குக் கடுமையான முயற்சி மேற்கொண்டோம். இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடத்தவேண்டிய சூழ்நிலையில் அப்போது அ.தி.மு.க இருந்தது. இப்போதும் நீட் தேர்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்று நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் தி.மு.க-வும்தான் காரணம்.” என அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி வருகிறார்கள். “2010-ல் மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன் இருந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. … Read more

வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு : தேர்தல் ஆணையம் அறிக்கை

சென்னை தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதனால் தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணி நேரம் முன்பாக அரசியல் கட்சிகளின் அனைத்து விதமான பிரசாரங்களையும் நிறுத்த வேண்டும்.   எனவே வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று 1,634 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,634 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 2,296 ஆக இருந்த நிலையில் இன்று 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 341 … Read more

வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: பள்ளிக்கல்வி ஆணையம்

சென்னை: வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வி ஆணையம் கூறியுள்ளது. நாளை நடைபெற உள்ள +2 திருப்புதல் தேர்வுக்கான உயிரியல் பாட வினாத்தாள் கசிந்தது. 10-ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த நிலையில் +2 வினாத்தாளும் கசிந்துள்ளது.

கோவா, உத்தரகாண்ட், உ.பி(2வது கட்டம்) ஓட்டுப்பதிவு நிறைவு| Dinamalar

உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் (2ஆம் கட்டம்) மாநிலங்களின் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி கோவா: 75.29 %உத்தரகாண்ட்: 59.37 %உத்தர பிரதேசம் (2வது கட்டம்) 60.44% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் கமிஷன் … Read more

சாமானியர்கள் விரும்பும் அஞ்சலகத்தின் RD திட்டம்.. எப்படி தொடங்குவது.. டெபாசிட்?

பொதுவாக அஞ்சலக திட்டங்கள் என்றாலே சாமானியர்கள் விரும்பும் ஒரு திட்டமாக இருந்து வருகின்றது. குறிப்பாக அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் என்பது மிக விருப்பமான திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. ஏனெனில் கையில் இருக்கும் குறைவான தொகையினை கூட, இந்த திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்ய முடியும். 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! எல்லாவற்றிற்கும் மேலாக சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் … Read more