தேர்வுக்கு முன்பே வெளியான திருப்புதல் தேர்வு வினாத்தாள்! திருவண்ணாமலையில் பரபரப்பு…

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு இன்று திருப்புதல் தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே சமுக வலைதளங்களில் லீக்கானது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  10ம் வகுப்பு அறிவியல் மற்றும் 12ம் வகுப்பு கணிதம் பாடத்தின் கேள்வித்தாள் சமூக வலைதளங்களை வெளியானது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில்,   உரிய விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காவல் துறையில் புகாரளித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் … Read more

காதலர்கள் போல் தனியாக சென்று வாக்கு சேகரியுங்கள் – வேட்பாளர்களுக்கு ஐடியா கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

குடியாத்தம்: குடியாத்தத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய தலைவராக உருவாகி வருகிறார். தமிழ்நாட்டில் வரும் 25 ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி இருக்கும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 6 மாதங்கள் கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் மீண்ட உடன் பெருவெள்ளம் இப்படியே 8 மாதம் கழிந்து விட்டது. 6 மாத பட்ஜெட் தான் போட்டுள்ளோம், இனி வரும் நாளில் முழு … Read more

வாக்குப்பதிவு நிலவரம்!: சட்டமன்ற தேர்தல் நண்பகல் 1 மணி நிலவரப்படி கோவாவில் 60.18%, உ.பி., 51.93%, உத்தராகண்ட் 49.24% வாக்குகள் பதிவு..!!

பனாஜி: கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்திரப்பிரதேச சட்டமன்ற 2ம் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.93  சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

அன்னா ஹசாரே போராட்டம் ஒத்திவைப்பு| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.மஹாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சூப்பர் … Read more

NSE சித்ரா ராமகிருஷ்ணா: யார் இந்த இமயமலை சாமியார்..? பங்குசந்தை முதல் டெல்லி வரை நெட்வொர்க்..!

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் இந்திய சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் திக்குமுக்காடிய ஒரு விஷயத்தை தேசிய பங்குச்சந்தை இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் செய்துள்ளார். 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் தேசிய பங்குச்சந்தை குறித்த பல்வேறு ரகசிய தரவுகளைப் பகிர்ந்துள்ளது கண்டுப்பிடக்கப்பட்டுச் செபி அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி யார் … Read more

"அந்த ஒரு சீன்ல நான் வர்றதுக்காக வடிவேலுண்ணே அவ்வளவு போராடினார்!"- நெகிழும் அமிர்தலிங்கம்

வடிவேலுவின் காமெடி டீம்… இயக்குநர் ஹரியின் படங்களில் சின்ன ரோலாக இருந்தாலும் செம ஸ்கோர் செய்பவர் அமிர்தலிங்கம். அடிக்கடி படங்களில் பார்த்திருக்கலாம். சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக 500 படங்களில் நடித்திருப்பவரான அமிர்தலிங்கத்திடம் பேசினேன். “எதாவது ஒரு துறையில சாதிக்கணும்னு விரும்பினேன். சினிமா என் லட்சிய பயணம். அதுல இத்தனை வருஷங்களாக இருக்கறது சந்தோஷமா இருக்கு. நாம மறைந்தாலும் ‘இப்படி ஒருத்தர் இருக்கார்’னு மத்தவங்க சொல்லணும்னு விரும்பினேன். ஆரம்ப காலங்கள்ல மேடை நாடகங்கள்ல இருந்தாலும், 1980க்கு பிறகுதான் … Read more

சுவிட்சர்லாந்தில் பெருமளவில் குறைந்துள்ள கொரோனா தொற்று

சென்ற வாரத்தில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 157,683 பேர் புதிதாக சென்ற வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், முந்தைய வாரத்தை விட இந்த எண்ணிக்கை 24% குறைவு என தெரியவந்துள்ளது. முந்தைய வாரம் சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 208,542 ஆகும். மருத்துவமனைகளில் முந்தைய வாரம் 518 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்ற வாரம் அந்த எண்ணிக்கையும் 5% குறைந்து 492 ஆகியுள்ளது. அத்துடன், … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதாக வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா  தற்கொலை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா,  தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இவர், ஜனவரி 9-ஆம் தேதி … Read more

பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் அடிபட்ட நச்சு பாம்புகள்- கே.எஸ். அழகிரி தாக்கு

சென்னை: சென்னை மாநகராட்சி  தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பெரம்பூர் பகுதியில் 37-வது வார்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தாமோதரன் நகர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் டில்லி பாபுவுக்கு ஆதரவு திரட்டினார். தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் அடிபட்ட நச்சு பாம்புகள். ஆனால் இன்னும் உயிர் இழக்கவில்லை. பா.ஜனதா இந்தியாவுக்கே ஆபத்தான கட்சி. அ.தி.மு.க. தமிழகத்துக்கு ஆபத்தான … Read more

குறையும் கொரோனா பரவல்: திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்

ஆந்திரா: கொரோனா பரவல் குறைந்து வருவதால் திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.