சீனாவின் 54 ஆப்களுக்கு தடை.. பாதுகாப்பு அச்சுறுத்தல் தான் காரணம் என பரபர குற்றச்சாட்டு..!

சீனாவின் பிரபலமான 54 ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக சீனாவின் பிரபலமான டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட பல ஆப்களுக்கு, இந்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் 54 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது. இது பியூட்டி கேமரா, ஸ்வீட் செல்பி HD, கேம்கார்ட் , விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் Xriver, onmyoji,ஆன்மியோஜி செஸ், ஆன்மியோஜி அரீனா, ஆப்லொஜி அரங்கம் உள்ளிட்ட பல ஆப்கள் இதில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more

Mr.IPL: சேப்பாக்கம் முதல் சென்சூரியன் வரை… ரெய்னாவின் வெறியான 5 இன்னிங்ஸ்கள்!

Mr.IPL, சின்ன தல என ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் கரியர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. சென்னை அணியுமே கூட கைவிரித்துவிட்டது. ஒரு மாபெரும் சகாப்தமே கண்முன் சரிந்ததை போல இருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக சென்னை அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. அதை கொண்டாடும் வகையில் சென்னை அணிக்காக ரெய்னா ஆடிய டாப் 5 இன்னிங்ஸ்கள் இங்கே… 87(25) … Read more

27 ஆண்டுகளுக்கு முன் காதலியிடம் காதலைச் சொன்ன அதே இடத்துக்குச் சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாபம்

தான் தன் காதலியிடம் 27 ஆண்டுகளுக்கு முன் காதலைச் சொன்ன அதே இடத்துக்கு மீண்டும் சென்ற பிரித்தானியர் ஒருவர் பரிதாபமாக பலியானதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள Altrincham என்ற நகரைச் சேர்ந்தவர் Dr Jamie Butler (54). Butlerக்கு இரட்டையர்களான இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், தான் தன் மனைவியிடம் முதன்முதலாக தன் காதலை வெளிப்படுத்திய அதே இடத்துக்குச் சென்று, மீண்டும் தன் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார் Butler.   அதன்படி, கணவனும் மனைவியுமாக … Read more

சென்னை முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம்!

சென்னை: மத்தியஅரசுக்கு சொந்தமான ஈசிஆர் முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. முதலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லாததால்,  நிதி நெருக்கடி காரணமாக, இந்ந மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், வடநெம்மேலி பகுதியில் மாபெரும் முதலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு 17 வகைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட முதலைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து … Read more

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டடுவிட்டர் செய்தியில், 2019-ம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த … Read more

முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

சென்னை: முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திருவான்மியூரில் உள்ள ரவிராஜ் பாண்டியன் இல்லத்தில் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.

விடுதி உரிமையாளருடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 2 பேர் கைது

பெரும்பாவூர், கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரின்சினா (வயது 26). இவர் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஆட்டோ டிரைவரான ஷாஜகானுடன் (27) வந்தார். பின்னர் இருவரும் அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஷாஜகான் திடீரென்று அந்த விடுதி உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் தாங்கள் இருவரும் விடுதியில் உள்ள குளிர்பானத்தை வாங்கி … Read more

1200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த வீழ்ச்சி..முதல் நாளே இப்படியா?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. வட்டி விகிதமானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு, வட்டியில் ஏதேனும் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் உச்சம் தொட்டு வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக … Read more

`என் சகோதரர் ராகுல் காந்திக்காக உயிரையும் தியாகம் செய்வேன்!" -யோகிக்கு பிரியங்கா காந்தி பதில்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் உள்ளதாகவும், அந்த மோதல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் பிளவுபடுத்தி வருவதாகவும் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி – யோகி ஆதித்யநாத் பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய … Read more

லண்டனில் விவாத பொருளான ஜோடியின் திருமணம்! இப்படி செய்யலாமா மாப்பிள்ளை? வெளியான வீடியோ

பிரித்தானியாவில் மணமகன் அணிந்த திருமண ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வின் பின்னணி வெளியாகியுள்ளது. லண்டனில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் வெந்நிற திருமண உடையில் தேவதையாய் ஜொலிக்கிறார், அருகில் இருக்கும் மணமகன், ஏதோ கல்யாண திகதியை மறந்துவிட்டு கடைசி நேரத்தில் ஓடிவந்தவர் போல மோசமான கேஷ்வல் உடையில் நின்றிருக்கிறார். அதே உடையில் மணப்பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நடைபெறும் வீடியோ சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை குவித்துள்ளது. அந்த வீடியோ டிக்-டாக்கில் இருந்து டெலிட் செய்யப்பட்ட போதும், … Read more