கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை:  கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாப்பாக காப்பாற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் எம்மதமும் சம்மதம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்.. இது உலகளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்..!

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமாக இருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏற்கனவே பல துறைகளிலும் வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றது. இந்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானி புதிய தொழிலுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ப்ளூ ஹைட்ரஜன் உற்பத்தியில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த விலையில் உற்பத்தி முகேஷ் அம்பானியின் இந்த திட்டம் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ப்ளூ ஹைட்ரஜன் உற்பத்தியில் சர்வதேச அளவில் மிகப்பெரிய இடத்தினை பிடிக்கவும், மிக … Read more

மது போதையில் பள்ளி மாணவிகளை டார்ச்சர் செய்த ஆசிரியர்; போக்சோவில் கைது செய்த போலீஸ்!

பெரம்பலூர் மாவட்டம், நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மலையப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்குக் குடித்துவிட்டு வந்ததாகவும், வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த மாணவிகளிடம் அருகில் அமர்ந்து கொண்டு உடையை மாற்றி வரச் சொல்லி யூடியூபில் பாடல்களைப் போட்டு ஆடச்சொல்லியதாகவும் கூறப்படுகிறது. பெரம்பலூர் இதனால் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையிலிருந்து வெளியேறிய மாணவிகள், இது பற்றிப் பெற்றோர்களிடம் … Read more

உக்ரைனுக்கு அருகில் தயாராக நிற்கும் ரஷ்ய படைகள்: வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்

போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், உக்ரைனுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் பாரிய இராணுவப் படையின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கான சாத்தியம் அதிகரித்து வருவதால், மிகப்பெரிய போர் நடப்பதற்கான பதற்றமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய இராணுவம் ன்பெலாரஸ், ​​கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யாவில் அதன் பிரம்மாண்ட படைகளை குடுவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கிரிமியா, பெலாரஸ் மற்றும் மேற்கு ரஷ்யாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை Maxar வெளியிட்டுள்ளது. அதில், குறித்த பிராந்தியம் … Read more

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு, மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டப்பேரவை காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு, மேற்கு வங்க ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நடந்து கொண்டிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரை, பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்த ஆளுநர் தன்கர், மாநில … Read more

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வை முதலில் நடந்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அநீதி. ஒரே பள்ளியில் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்குத் தான் இட மாறுதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர் … Read more

விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை: ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தகவல்

ஆஸ்திரேலியா: விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் நட்சத்திரங்கள் மற்றும் பிற கோள்களிலிருந்து எந்த விதமான அதிர்வுகளும் கண்டறியப்படவில்லை எனவும் மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்க்கோப் மூலம் ஆராய்ச்சி செய்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இடுக்கி மோப்ப நாய் பிரிவில் பெல்ஜியம் மெலானாய்டு வகை சேர்ப்பு| Dinamalar

மூணாறு: இடுக்கி மாவட்ட போலீஸ் மோப்ப நாய் பிரிவில் பயிற்சி பெற்ற பெல்ஜியம் மெலானாய்டு வகை நாய் சேர்க்கப்பட்டது. மாவட்டத்தில் மோப்ப நாய் பிரிவில் திருட்டு, கொலை குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை எளிதில் கண்டறிய வசதியாக ஏழு மோப்ப நாய்கள் உள்ளன. தற்போது பெல்ஜியம் மெலானாய்டு வகையைச் சேர்ந்த ஏஞ்சல் என பெயரிடப்பட்ட நாய் சேர்க்கப்பட்டதால் மோப்ப நாய்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.இந்த நாயுடன் 23 நாய்களுக்கு திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்பது … Read more

அதிர்ச்சியளிக்கும் ராகுல் பஜாஜின் மறைவு.. தொழிற்துறையில் மாபெரும் வெற்றிடம்..!

மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் சகஜமான விஷயம் தான். ஆனால் சிலரின் மறைவினையே ஊரே பேசும். அந்தளவுக்கு இன்று பேசுப்படுவர் ராகுல் பஜாஜ். பஜாஜ் நிறுவனத்தின் ஆணி வேராக இருந்த ராகுல் பஜாஜ் சனிக்கிழமையன்று உடல் நலக்குறைவால் காலமானார். கொல்கத்தாவில் பிறந்த ராகுல், ஒரு வணிக குடும்பத்திலேயே பிறந்தவர். அதனால் அவரின் ரத்தத்திலேயே கலந்துள்ளது வணிக ரத்தம். அமெரிக்காவில் ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தவர். பஜாஜ் தலைவர் படிப்பினை முடித்த கையோடு பஜாஜ் நிறுவனத்தில் … Read more