முதல்வர் ஸ்டாலினுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்திப்பு

சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவியுடன் இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அடுத்த மாதம் மார்ச் 17ம் தேதி நடிகர் சிவராஜ்குமாரின் தம்பியும் மறைந்த நடிகருமான புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், எந்த விஷயத்திற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்கிற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது. முன்னதாக புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை கன்னட … Read more

குமாரபாளையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீர் மாயம்

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கொக்கராயன்பேட்டை ஆலங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் நசீர் (வயது 32), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு தாசின் (26) என்ற மனைவியும், கிகனா (8) என்ற மகளும், சையத் கலாம் (7) என்ற மகன், முகமது உசேன் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளனர். நசீருக்கும், தனது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தாசின் கோபித்துக்கொண்டு அவருடைய தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. … Read more

ஐபிஎல் மெகா ஏலம்: 98வது வீரர்களிலிருந்து 164 வரை வீரர்கள் இன்று ஏலம்

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் இன்று 98வது வீரர்களிலிருந்து 164 வரை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 164 முதல் 600 வரை உள்ள வீரர்களில் ஒவ்வொரு அணியும் 20 பேரை தேர்வு செய்ய வேண்டும். அணிகள் தேர்வு செய்த வீரர்கள் மட்டுமே ஏலத்திற்கு விடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் வாய்ப்பு..!

தங்கம் விலையானது இரண்டு மாத உச்சத்தில் இருந்து வருகின்றது. இது அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் பாதுகாப்பு புகலிடமாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையும் விஸ்வரூப எடுத்து வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலையானது உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?! சிறந்த ஹெட்ஜிங் பணவீக்கத்திற்கு எதிரான … Read more

விரைவில்.., அதிக ரேஞ்சு வழங்கும் டாடா நெக்ஸான் EV அறிமுகம்

இந்தியாவின் மிக பிரபலமான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV காரில் கூடுதலான ரேஞ்சு வழங்கும் மாடலை விற்பனைக்கு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூரம் பயணிப்பதற்க்கான நெக்ஸான் மின்சார காரில், பெரிய 40kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய நெக்ஸான் EV உடன் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் விற்கப்படும் மின்சார கார்களில் 60 சதவீத சந்தையை நெக்ஸான் கொண்டுள்ளது. டாடா நெக்ஸான் இவி சிறப்புகள் விற்பனையில் கிடைக்கின்ற நெக்ஸான் … Read more

BB Ultimate -14: வெளியேறுகிறார் சுஜா! காரணம் என்ன? வனிதாவை கேள்வி கேட்பாரா கமல்?

அல்டிமேட் சீசனிற்கும் வீட்டின் தலைவர் பதவிக்கும் ராசியில்லை போல. ஏதோவொரு கண்டம் இதில் இருக்கிறது. கடந்த வாரத்தில் வீட்டின் தலைவர் ஆன கையோடு சுரேஷ் எலிமினேட் ஆனார். இப்போது சுஜா அடுத்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆம், அதேதான். இந்த வாரத்தில் சுஜாதான் எலிமினேட் ஆகியிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். வீட்டுப்பணி, டாஸ்க் என்று அனைத்திலும் சின்சியராக செயல்பட்டதாக சக போட்டியாளர்களே சுஜாவைப் பாராட்டியிருக்கிறார்கள். ‘நீதிடா. நேர்மைடா..’ என்று செயல்பட்டவர் சுஜா. அவரை விடவும் சுமாரான போட்டியாளர்கள் … Read more

IPL ஏலத்தில் CSKவை கலாய்த்து தள்ளிய டெல்லி அணி: CSKவிற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள்

நேற்று நடந்த IPL ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாட்டை கிண்டல் செய்யும் விதமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2022ம் ஆண்டுக்கான ipl வீரர்கள் மெகா ஏலம் நேற்று பெங்களுருவில் தொடங்கியது. முதல் நாள் நடத்த பட்ட ஏலத்தில் அதிகப்பட்சமாக இஷான் கிஷான் 15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதனை தொடர்ந்து தீபக் சஹார் 14 கோடிக்கு சென்னை அணியால் … Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வட கடலோர மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

ஹிஜாப் விவகாரம்: பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு – உடுப்பி மாவட்டத்தில் நாளைமுதல் அமல்

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை சுற்றி நாளை (14-ந்தேதி) காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்துள்ளார். இதையொட்டி பள்ளிகளை … Read more

மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்குவங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள், மரபுகளுக்கு எதிரானது என முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.