ரஷ்யாவால் அஞ்சுகிறேன்! நேச நாடுகளிடம் வெளிப்படையாக கூறிய பிரித்தானியா

பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை உக்ரைன் நிலைமை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா, இத்தாலி, போலந்து, ருமேனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய … Read more

உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் – பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார். உத்தரகாண்டி ஸ்வாபிமான்’ பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா பேசுகையில், உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு மக்கள் சோர்ந்துபோயிருப்பதால் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் என்ன செய்யப் போகிறார் என்பதை முதல்வர் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எம்ரி லே;வோ எ;இ[ஔஅ அவர், பெண்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என்று கேள்வி எழுப்பினர். “பிரதமர் நரேந்திரனின் … Read more

தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முழு விவரம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலமைச்சர்  வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 22-1-2022 அன்று 30,744 ஆக இருந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-2-2022 அன்று 3086 ஆக குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் … Read more

ஐபிஎல் மெகா ஏலம்: பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் ஏலம் தொடங்கும் என தகவல்

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்த நிலையில் ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் சம்பள உயர்வு..! #7thPayCommission

கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகளை நிறுத்தி வைத்திருந்தாலும், 2வது அலைக்குப் பின்பு அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான சலுகைகளை மத்திய அரசு அளித்தது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயர்ந்தது. இந்நிலையில் மோடி அரசு மீண்டும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டு அதற்கான ஆலோசனையில் இறங்கியுள்ளது. புதிய சம்பள உயர்வு திட்டம் நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதம் 8000 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ஒபிஎஸ் சகோதரர் மகன் காரை சிறைபிடித்த திமுகவினர்! – வேட்பாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினாரா?!

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். அவர் நேற்று இரவு 24 ஆவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அக்ரஹாரத் தெருக்களில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவின் மகன் முத்துகுகனின் காரில் வைத்து வாக்காளர்களுக்கு இலவசமாக சேலை, வேஷ்டி வழங்குவாதக் கூறி திமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். அதே வார்டில் … Read more

ரூ 12 கோடிக்கு விலை போன ஸ்ரேயாஸ் ஐயர்! கூடுதல் ஜாக்பாட்டாக கேப்டன் பதவி

பெரிய தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் விலைபோகியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ 12.25 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. இதோடு கூடுதல் சிறப்பாக அணியின் கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் ஐயரே பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர் ஷமி புதிய அணியான குஜராத் டைட்டனால் ரூ 6.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அதே போல பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியால் ரூ 7.25 கோடிக்கு … Read more

ஐபிஎல் ஏலம் 2022: டுபிளெசிஸ்-ஐ தூக்கியது ராயல் சேலஞ்சர்ஸ், டேவிட் வார்னர்ரை ஏலம் எடுத்த டெல்லி கேப்பிட்டல்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஐபிஎல் ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.  வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், … Read more

11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் … Read more

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்தார். நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.