தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம்

பெங்களூரு-கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம் என, சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில், கொரோனா 3வது அலை தீவிரமடைந்ததால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. ‘மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகளுக்கு மட்டும், கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாதாரண நோய்களால் அவதிப்படுவோர், மருத்துவமனைக்கு வரக்கூடாது. ‘தனியார் மருத்துவமனைகளில், 50 சதவீதம் படுக்கைகளை, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்’ என, அரசு உத்தரவிட்டிருந்தது.தொற்று தீவிரமாக இல்லாததால், நோயாளிகள் பலரும் வீட்டில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைகள், … Read more

கரடியின் பிடியில் சந்தை.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தில் இந்த முறையும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இது இன்னும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்பதையே சுட்டி காட்டிகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பணவீக்க விகிதமும் அதிகரித்து வருகின்றது. சர்வதேச … Read more

புதிய மாருதி சுசூகி பலேனோ எதிர்பார்ப்புகள்..?

வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள புதிய மாருதி பலெனோ கார் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது நெக்ஸா டீலர்ஷிப் மற்றும் ஆன்லைன் வழியாக முன்பதிவு நடைபெற்று வருகின்றது. 2022 மாருதி சுசூகி Baleno புதிய பலேனோ சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வகைகளில் தொடர்ந்து வழங்கப்படும். சுசூக்கி பலேனோ காரில் தொடர்ந்து என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் 82 bhp பவரை வழங்கும் … Read more

`போராடியும் திமுக-வில் வாய்ப்பு கிடைக்கல!’ -சைகையால் வாக்கு சேகரிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் 31-வது வார்டு போஸ்நகரைச் சேர்ந்தவர் கண்ணன். திமுகவின் தீவிர விசுவாசி. 45 வருடங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இவரின் மகன் சுப்பிரமணியன், மருமகள் சரிதா ஆகிய இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக திமுகவில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான், 31-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதில் போட்டியிட சரிதா விருப்பப்பட, அதற்காக திமுக கட்சித் தலைமையிடம் ரூ.2,500 கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்திருக்கின்றனர். ஆனாலும், … Read more

சந்திரனின் ஆசியால் யாருக்கு லாபம்? இன்றைய ராசிபலன்கள்

இன்றைய தினத்துக்கான பெப்ரவரி 11, ராசிபலன்கள் குறித்து பார்க்கலாம். மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து … Read more

ஒரே மாதத்தில் 54% சிறார்களுக்குத் தடுப்பூசி போட்ட மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சென்ற மாதம் 3 ஆம் தேதி முதல் 15-18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.    இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.   கோவாக்சின் தடுப்பூசி இரு டோஸ்களுக்கு இடையே 28 நாட்கள் இடைவெளி இருந்தால் போதும் என்பதால் தற்போது சிறார்களுக்கு 2 ஆம் டோஸ் ஊசியும் போடப்படுகிறது/ மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் … Read more

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் … Read more

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை

வாஷிங்டன் : உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே எல்லை பதற்றம் நிலவி வரும் நிலையில் பிடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறப்பு; முதல்-மந்திரி அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.  ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் … Read more

அதானியின் தொடர் முதலீடு.. அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் அதானி எண்டர்பிரைசஸ்..!

அதானி குழுமம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு துறையிலும் தனது காலடியினை ஆழமாக பதித்து வருகின்றது. அதோடு ஆய்வு செய்து முதலீடுகளையும் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் Unyde Systems நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்கியுள்ளது. இந்த கையகப்படுத்தலின் மதிப்பு 3.75 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது. 2வது நாளாக அதானி கொடுத்த வாய்ப்பு.. முதலீட்டாளர்களுக்கு இது பொற்காலம் தான்..! … Read more