குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் திறப்பு – பொது மக்கள் பார்வையிட அனுமதி

புதுடெல்லி: குடியரசுத்தலைவர் மாளிகையின் வருடாந்திர தோட்டத்திருவிழாவையொட்டி அங்குள்ள வரலாற்று புகழ் பெற்ற  முகலாய தோட்டத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். வண்ண வண்ண விதவிதமான மலர்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 11 வகையான துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றைத் தூய்மைப்படுத்தக் கூடிய தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிட த்தக்கது.வருடந்தோறும் இந்த மலர் தோட்டத்தை பொது மக்களும் பார்வையிட … Read more

காவல்துறையில் 90 % அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்: ஐகோர்ட் கருத்து

சென்னை: காவல்துறையில் 90 % அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர், 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும் திறமையானவர்களாகவும் உள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊழல் அதிகாரிகளை களைந்து திறமையான அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரோன் இறக்குமதி: மத்திய அரசு தடை| Dinamalar

புதுடில்லி : மத்திய அரசு, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளது.கடந்த 2021 ஆகஸ்டில், ட்ரோன் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் ட்ரோன் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்புக்கு ஏற்ப சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம் ட்ரோன் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களை அனுமதியின்றி இறக்குமதி செய்யலாம்.எனினும் அனைத்து … Read more

புதிய எலக்ட்ரிக் நேனோ கார்.. ரத்தன் டாடா-வுக்கு கோவை நிறுவனத்தின் ஸ்பெஷல் கிப்ட்..!

புதுமைகளையும், சவால்களையும் எப்போதும் விரும்பும் ஒருவராக விளங்கும் ரத்தன் டாடா, இந்திய ஆட்டோமொபைல் துறையில் செய்த மிகப்பெரிய புரட்சி என்றால் அது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நேனோ கார் தான். வெறும் 1 லட்சம் ரூபாயில் அறிமுகமான இந்த நேனோ கார் லோவர் மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றாலும் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. ரத்தன் டாடா திட்டமிட்டப்படி டாடா மோட்டார்ஸ் தற்போது எலக்ட்ரிக் கார் … Read more

ஜனவரி 26.., டார்க் கிராடோஸ் இ-பைக் விற்பனைக்கு வருகின்றது

வரும் ஜனவரி 26 ஆம் தேதி விற்பனைக்கு டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் மாடலாக கிராடோஸ் வெளியிடப்பட உள்ளது. 2016 ஆம் ஆண்டு முதன்முறையாக T6X என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது பல்வேறு மேம்பாடுகளை பெற்றுள்ள இந்த மாடல் ஆனது உற்பத்தி நிலை மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. வெளியிடப்படும் அன்றைக்கு முன்பதிவும் தொடங்கப்பட்டு மார்ச் முதல் வாரத்தில் டெலிவரியும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 125 சிசி – 150 சிசி வரையிலான … Read more

வாடகை பாக்கி வைத்திருக்கும் சோனியா காந்தி… ஆர்.டி.ஐ மூலம் வெளியானது நிலுவைத் தொகை விவரம்!

இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தலைநகர் டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் சொந்தமாக அந்த இடங்களில் அலுவலகம் கட்டி 3 ஆண்டுகளில் அரசு கட்டடங்களை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அந்த வகையில், கடந்த 2020-ல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் டெல்லி குடியிருப்பை ஒரு மாத காலத்துக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு அவருக்கு வெளியேற்ற … Read more

பிரபல ஐரோப்பிய நாட்டின் தலைநகரில் புதிய தடை உத்தரவு பிறப்பிப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு

 பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ‘Freedom Convoy’ வாகன ஓட்டிகள் நுழைய பிராந்திய அரசாங்கம் தடை வித்துள்ளது. Freedom Convoy போராட்டகாரர்கள் திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸ் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நகருக்குள் ‘Freedom Convoy’ வாகன ஓட்டிகள் நுழைய பாரிஸ் காவல்துறை தடை வித்துள்ளது. இந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரஸ்ஸல்ஸில் வருவதற்கான முக்கிய சாலைகளில் மத்திய பொலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். போராட்டம் நடத்த வரும் வாகனங்களை கட்டுப்படுத்துவார்கள். பிரஸ்ஸல்ஸ் நகர … Read more

தமிழகத்தில் பிப்.26 ல் புத்தகமில்லா தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் மேலும் 3,592 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை:     தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 3,971 ஆக பதிவாகி இருந்தது.   இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 3,592 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 28 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது. … Read more

உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.