சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக இந்தியாவுக்கான ஏர்டெல் செயல் இயக்குநர் கோபால் விட்டல் தகவல்

டெல்லி: சராசரி தனிநபர் வாடிக்கையாளர் வருவாய் இலக்கை ரூ.163-லிருந்து ரூ.200-ஆக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அடுத்த 3-4 மாதங்களுக்கு பிறகு சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக இந்தியாவுக்கான ஏர்டெல் செயல் இயக்குநர் கோபால் விட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவிட்; இந்தியாவில் மேலும் 1.67 லட்சம் பேர் குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.67 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,24,78,060 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,67,882 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை … Read more

RBI-ன் அதிரடி முடிவு.. கடன் வாங்கியவர்களையும், டெபாசிட் செய்தவர்களையும் எவ்வாறு பாதிக்கும்..!

ரிசர்வ் வங்கி குழு இன்று 10 வது முறையாக அதன் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இது வழக்கம்போல 4% ஆகவே தொடரலாம் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. 3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. ! இந்த நிலையில் இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் … Read more

ஹிஜாப்: `இது எங்கள் நாடு, எங்கள் பிரச்னை; பாகிஸ்தான் தலையிட வேண்டாம்!’ – அசாதுதீன் ஒவைசி

கர்நாடகாவில் பெரும் பரபரப்பாகி வரும் ஹிஜாப் பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக கல்லூரி ஒன்றில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்குள் வர அனுமதி மறுக்கப்பட, அதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகளால் தொடங்கப்பட்ட போராட்டமானது, பின்னர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கலவர நிலவரம் ஆனது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்திருக்கிறார். ஹிஜாப் சர்ச்சை அசாதுதீன் ஒவைசி, … Read more

நான் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறேன்… சுவிஸ் நாட்டவர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான பிரச்சினை

தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக போராடி வருகிறார் சுவிஸ் நாட்டவர் ஒருவர். கடந்த நவம்பர் மாதம் சுவிட்சர்லாந்தின் Winterthur நகரில் வாழும் Ullrich Frey (74) என்பவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அவர் உள்ளூர் ஓய்வூதிய அலுவலகத்தை அழைத்து தனக்கு ஏன் இன்னமும் ஓய்வூதியம் வரவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அளித்த பதில், நீங்கள் இறந்துவிட்டீர்கள், அதனால்தான் உங்களுக்கு ஓய்வூதியம் அனுப்பவில்லை என்பதுதான்… அதிர்ந்துபோன Frey, என்ன நடந்தது என விசாரனையில் இறங்க, நீண்ட விசாரணைக்குப் பின், … Read more

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 3 அடுக்கு கண்காணிப்பு குழு!

சென்னை: தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 3 அடுக்கு கண்காணிப்பு குழு அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மண்டல அளவில் இருந்த கண்காணிப்பு குழு தலைமைச்செயலாளர் தலைமையில் 3 குழுவாக மாற்றியமைக்கபப்ட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கோட்டாட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவில் டி.எஸ்.பி, நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் மற்றும், நீர்வளத்துறை உபகோட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை உதவிக்கோட்ட  பொறியாளர்களுக்கும் குழுவில் இடம்பெறுவார்கள். அதேபோல, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில் எஸ்.பி, காவல் ஆணையர், … Read more

முதலமைச்சர் தன்னை ஒரு விளம்பர பிரியர் ஆக மட்டுமே பார்க்கிறார் – எடப்பாடி பழனிசாமி

காஞ்சீபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கவனக்குறைவாக இருந்து விட்டோம். இதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. ஆமை போல் மெல்ல ஊர்ந்து ஊர்ந்து வெற்றியை பெற்றது. தி.மு.க. ஆட்சியால் எந்த நன்மையும் … Read more

தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்த்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகாகன கல்வியை அனுபவங்கள் வாயிலாக மாணவர்கள் அடைய புதிய திட்டம் வகுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்த்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை: புதிய வழிகாட்டுதல்கள்| Dinamalar

புதுடில்லி: மத்திய அரசு திருத்தப்பட்ட கோவிட் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதை நீக்கி, அதற்கு பதிலாக 14 நாட்கள் தொற்று அறிகுறிகள் காணப்படுகிறதா என சுய கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 14 திங்கள் முதல் அமலுக்கு வரும். தொடர்ந்து மாறிவரும் கோவிட் வைரசை கண்காணிக்க வேண்டியது அவசியம். … Read more

ICICI வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. செக், கிரெடிட் கார்டு கட்டணங்கள் ரூ.1500 வரை அதிகரிப்பு..!

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை அளிக்கும் விதமாக, அதன் புதிய கட்டண முறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. கடந்த மாதமே இது குறித்தான அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் செக் ரிட்டர்ன் கட்டணம் பற்றிய அறிவிப்புகள் தான். இந்த கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் வாருங்கள் பார்க்கலாம். ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய தகவல்.. சில்லறை பணவீக்கம் இனி இப்படித் தான்..! … Read more