4 நாட்களுக்கு பிறகு சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

கடந்த நான்கு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வந்தது. எனினும் இன்று காலை அமர்வில் சற்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா? தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. ஆக இது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையே முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதெல்லாம் சரி சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் … Read more

அதிமுக வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை! – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வெளியான தகவலில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க-வை சார்ந்த ஜானகிராமன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் … Read more

ஆயுளை குறைத்து உடலை விரைவில் வயதாக்கும் உணவுகள் இவைதான்! முடிந்தளவு தவிருங்கள்

அனைத்து மனிதர்களுக்குமே நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். ஆனால் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் அது நமது ஆயுளை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சோடா சர்க்கரை கலந்த சோடா உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் 5,309 பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும் 20 அவுன்ஸ் சோடாவை உட்கொள்வது வயது முதிர்வை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. அதாவது இது ஆயுளை குறைத்திவிடும். … Read more

சினிமா விமர்சனம் : மகான்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம், மகான். காந்தி மகானாக விக்ரம். சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தைச் சேர்ந்த அவரை மதுவின் தீமைகளை சொல்லி சொல்லி வளர்க்கிறது குடும்பம். ஆனால், மது விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகிறார். அவரது ஐ.பி.எஸ். மகன் தாதாபாய் நௌரோஜி (துருவ்) மூலம் சங்கடங்கள் ஏற்படுகிறது. அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். … Read more

தமிழக மீனவர்களை மீட்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தங்களது விசைப்படகுகளை மீட்டுத்தர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக மீனவர்களிடம் பறிமுதல் … Read more

ஆஸ்கர் திரைப்பட விழாவில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை

லாஸ்ஏஞ்செல்ஸ்: ஆஸ்கர் திரைப்பட விழாவில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை. லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 27-ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துாதுர் — முன்டுவள்ளி இடையே புதிய பாலம் பணிகளை துவக்கம்| Dinamalar

பெங்களூரு-ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், துாதுர் — முன்டுவள்ளி இடையே, புதிய பாலம் பணிகளை துவங்க, முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புதல் அளித்துள்ளார்.ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், பா.ஜ., எம்.எல்.ஏ.,வுமான, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, தன் தொகுதி தலைவர்கள் குழுவுடன், முதல்வர் பசவராஜ் பொம்மையை, நேற்று சந்தித்தார். துாதுர் – முன்டுவள்ளி புதிய பாலம் பாலம் கட்ட, ஒப்புதல் அளிக்கும்படி கோரினார்.இப்பணிகள் முடிவடைந்தால், குப்பள்ளி, மிருகவதே, சிப்புலகுட்டே, சிருங்கேரி, ஹொரநாடு, என்.ஆர்.புரா போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்ல, உதவியாக இருக்கும்.பல்வேறு கிராமங்களிலிருந்து, … Read more

ஐக்கிய அரபு நாடுகளில் இனி வரி கட்டாயம்.. சவுதி அரேபியாவுக்கு சவால் விடுகிறதா #Dubai..!

கச்சா எண்ணெயை மட்டுமே நம்பி பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் உருவாக்கி ஒரு சிறு வலையில் சிக்கிக்கொண்டு இருந்த பல வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகளும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் துபாய் அரசு பல ஆண்டுக் காலத் திட்டமிடல் உடன் தொடர்ந்து மாற்றங்கள் மூலம் படிப்படியாகத் தற்போது உலகின் முன்னணி வர்த்தக நாடுகளுக்கு இணையாக இன்னோவேஷன் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகப்படியான முதலீடுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச வர்த்தக நாடுகளுக்கு இணையாகத் தன்னை உயர்த்திக்கொள்ளும் பொருட்டு … Read more

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலில் பரவும் புற்றுநோய்; காப்பாற்ற முடியுமா?

என் சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் வந்து வலது மார்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றினோம். ஆனாலும் பலனில்லை. தற்போது அவரது உடலில் புற்றுநோய் பரவுவதாகவும், காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர் கூறுகிறார். இதற்குத் தீர்வு உண்டா…? – சிவகாமி பிரம்மநாயகம் (விகடன் இணையத்திலிருந்து) மருத்துவர் ரத்னாதேவி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ரத்னாதேவி. “உங்கள் சகோதரியின் வயது, புற்றுநோயின் எந்த ஸ்டேஜில் கண்டுபிடித்தார்கள், இதுவரை அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன … Read more

விமானத்தில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியர்! பயணியின் புகாரால் பரபரப்பு..

நியூ ஜெர்ஸியிலிருந்து லண்டன் வந்த விமானத்தில் தன்னை பிரித்தானியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரமான Newark-ல் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 40 வயது பெண் ஒருவரை, பிரித்தானியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தாக Heathrow விமான நிலைய பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விமான பயணத்தின்போது பயணிகள் உறங்கி கொண்டிருந்ததாகவும் அப்போது பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதான நபர் … Read more