ஜேர்மனியில் 31 கார்களை இடித்து பெரும் விபத்தை ஏற்படுத்திய டிரக் சாரதி! 3 பேர் காயம்

ஜேர்மனியில் டிரக் சாராராதி ஒருவர் குடிபோதையில் வாகனம் ஒட்டி 31 கார்களை இடித்து நாசமாக்கியுள்ளார். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பிப்ரவரி 8-ஆம் திகதி தெற்கு ஜேர்மனியின் Fuerth பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, போதையில் இருந்த டிரக் டிரைவர் சிவப்பு விளக்கைப் புறக்கணித்து வேகமாக சென்றுள்ளார். பின்னர், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார்கள் மீது தனது வாகனத்தை மோதி, கட்டிடங்களுக்கு எதிராக கார்களைத் … Read more

கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.808 கோடி காப்பீடு அளித்த மத்திய அரசு

டில்லி கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்களுக்கு ரூ.808 கோடி காப்பீட்டு தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை   இன்றைய காலை தகவலின்படி இதுவரை இந்தியாவில் 4.24 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 5.05 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4.10 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 8.92 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனா குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார … Read more

தமிழர்களின் நாட்டுப் பற்றுக்குப் பிரதமர் மோடியின் சான்றிதழ் தேவையில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது: இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை வட இந்திய ஊடகங்கள் எனக்கு வழங்கியதை எனக்குக் கிடைத்த பாராட்டாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை நான் அர்ப்பணித்துள்ளேன் என்பதை அகில இந்திய … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி பொது விடுமுறை அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, சாதாரண தேர்தல் நடைபெற உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.

குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி – பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாங்கள் நம்புகிறோம். ஆனால், சில தலைவர்கள் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகின்றனர். நாடு முழுவதும் 100 முன் மாதிரி மாவட்டங்களை கண்டுபிடித்துள்ளோம். இன்று சில மாவட்டங்கள் பல்வேறு அளவீடுகளில் தேசிய சராசரியை கடந்துள்ளது.  ஒரு கட்சி தலைமறை தலைமுறையாக ஒரே குடும்பத்தால் நடத்தப்படும்போது குடும்ப அரசியலில் தான் இருக்குமே தவிர மாற்றமிருக்காது. இரு கட்சிகள் இரு குடும்பத்தால் நடத்தப்படும் … Read more

கச்சா எண்ணெய் விலை இனி எப்படியிருக்கும்.. புட்டு புட்டு வைத்த நிபுணர்கள்..!

திரவத் தங்கம் என்றழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கு பல்வேறு காரணிகளும் சாதகமாக உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு குறித்தான தரவானது எண்ணெய் விலைக்கு சாதகமாக வரலாம் என்றும் கூறப்பட்டது. எதிர்பார்ப்பினை போல கச்சா எண்ணெய் இருப்பு குறித்தான தரவும் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளது. இந்த நிலையில் தான் கச்சா எண்ணெய் விலையும் ஆரம்பத்தில் ஏற்றத்தினை கண்டிருந்தாலும், தற்போது சரிவினைக் கண்டு வருகின்றது. 91 டாலரை தாண்டிய … Read more

“கிரீடமோ, ஹிஜாபோ அவரவர் உரிமை… மதவெறியால் மாணவர்களை துண்டாடாதீர்கள்!" – சு.வெங்கடேசன் சுளீர்

கர்நாடகாவில் தொடங்கி நாடுமுழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆவேசமாகப் பேசினார். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பு அரசியலால், கலந்துரையாடி சமூகமயமாக வேண்டிய மாணவ சமூகம் கூறுபோடப்படுகிறது. யாருடைய உத்தரவின் பேரில் ஹிஜாப் அணிவதும், கிரீடம் அணிவதும் நடக்க வேண்டும்? பள்ளிக்குழந்தைகள் என்ன நாடகம் போட வேண்டும்? என்ன ஆடை அணிய வேண்டும் … Read more

பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை குறித்து அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு ‘கணிசமான’ என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்த நடத்தப்பட்ட இரண்டு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு ‘கடுமையான’ நிலைக்கு உயர்த்தப்படுவதாக கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம் (JTAC) அறிவித்தது. இந்நிலையில், பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு ‘கடுமையாக’ என்பதிலிருந்து ‘கணிசமாக’ நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார். இதன் மூலம் பிரித்தானியாவில் … Read more

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாநிலங்களுக்கு ஏற்ப நீட் தேர்வு ரத்து : கே எஸ் அழகிரி

நாகர்கோவில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் மாநிலங்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.   தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகின்றது.   இதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது  நாகர்கோவிலில் உள்ள வேப்ப மூடு சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி  திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப். 19ம் தேதி பொது விடுமுறை

சென்னை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே இந்த தேர்தலில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வரும் 19-ம் … Read more