தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 09/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,24,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,10,494 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,28,70,191 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.   இதுவரை 34,24,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,837 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 16,473 பேர் குணம் … Read more

பிரசித் கிருஷ்ணா அபாரம் – 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய  அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரங்களில் ஆல் அவுட் ஆனதால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐடி நிறுவனங்களின் அதிரடி திட்டம்.. டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ் சொல்வதென்ன?

ஐடி நிறுவனங்கள் 2022ம் நிதியாண்டில் 2.15 லட்சம் பணியாளர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணியமர்த்தியுள்ளன. இது முந்தைய ஆண்டில் வெறும் 99,000 பேரை பணியமர்த்தியுள்ளன. இந்தியா டாப் ஐடி நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தலை இருமடங்காக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 8 நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ரூ.1.51 லட்சம் கோடி லாபம்..! தேவை அதிகரிப்பு இது ஐடி துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், திறனுக்கான தேவை என்பது பெரியளவில் அதிகரித்துள்ளது. ஆனால் அதே சமயம் … Read more

நாகர்கோவில்: தனித்துப் போட்டியிடும் சி.பி.எம் கட்சிக்கும் சேர்த்து வாக்கு சேகரித்த கே.எஸ்.அழகிரி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கன்னியாகுமரி மாவட்டம் வந்திருந்தார். நாகர்கோவிலில் பிரசாரத்தைத் தொடங்கிய கே.எஸ்.அழகிரி வேப்பமூடு சந்திப்பில் நாகர்கோவில் மாநகராட்சி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். கே.எஸ்.அழகிரி பேசும்போது, “நாடாளுமன்றத்தில் பிரதமர் மேடைப்பேச்சாளர் போன்று பேசியிருக்கிறார். நேரு, மொராய் தேசாய், இந்திராகாந்தி, மன்மோகன்சிங் போன்ற பெருமைமிக்க தலைவர்களை பார்த்த நாடாளுமன்றத்தில் கீழ்த்தரமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். வருங்கால இந்திய சமுதாயம் மோடி பேச்சை படித்துபார்த்தால் … Read more

பெயரை மாற்றி வேலைபெற்ற இளைஞர்: பிரித்தானியாவில் நடந்த சம்பவம்

Inein victor Garrick (34) என்ற நபர் தனது நைஜீரிய பெயரில் மாற்றத்தை கொண்டுவந்த பின்பே வேலை கிடைத்ததாக தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நைஜிரியாவை சேர்ந்த Inein victor Garrick (34) பிரித்தானியாவில் சவுத் வேல்ஸ் போக்குவரத்துக்கு துறையில் பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தான் நைஜீரிய பெயரை மாற்றியது குறித்தும், அதன் பிறகு அவருக்கு கிடைத்த வேலை வாய்ப்பு குறித்தும் தெரிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. Inein victor Garrick (34) … Read more

மாணவ சமூகத்தைக் கூறு போடும் ஹிஜாப் விவகாரம் : தமிழக எம் பி ஆவேசம்

டில்லி கர்நாடகாவில் மாணவர் சமூகத்தை ஹிஜாப் விவகாரம் கூறு போடுவதாகத் தமிழக எம் பி வெங்கடேசன் மங்களவையில் பேசி உள்ளார். கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை இந்துத்துவா மாணவர்கள் தடுத்ததை அடுத்து அங்கு கடும் போராட்டம் வெடித்துள்ளது.   நாளுக்கு நாள் போராட்டம் அதிகரிப்பதால் கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.  ஆயினும் மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டத்தை மாணவ மாணவிகள் நடத்தி வருகின்றனர். இது குறித்து மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் மக்களவையில், “தமிழகத்தில்  ஜனவரி 15 ஆம் தேதி … Read more

2வது ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 238 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷ்ப் ப்ண்டும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்னிலும், … Read more

பெரம்பலூர் பச்சைமலை பகுதியில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும்: மக்களவையில் பாரிவேந்தர் வலியுறுத்தல்

டெல்லி: பெரம்பலூர் பச்சைமலை பகுதியில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும் என மக்களவையில் பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார். பச்சைமலையில் சைனிக் பள்ளி அமைத்து அப்பகுதி மக்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க நடவடிக்கை தேவை என பாரிவேந்தர் கூறியுள்ளார்.