ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்பருத்திகுன்றம், கீழ்கதிர்பூர் ஆகிய ஊராட்சிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆர்த்தி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.அப்போது அவர், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்களை பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை தரமானதாகவும், சரியான அளவிலும் விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கென்யா மாஜி பிரதமர் மகளுக்கு பார்வை தந்த ஆயுர்வேத சிகிச்சை| Dinamalar

கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், மகளின் மேல் சிகிச்சைக்காகவும் குடும்பத்துடன் அவர் கேரளா வந்துள்ளார்.கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு, 2017ல் 39 வயதில், திடீரென மூளை ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை … Read more

அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இடாநகர்,  அருணாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில்  நடைபெற்றன.  இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ  வீரர்கள் … Read more

NPS திட்டம்.. வரியை மிச்சப்படுத்தி சேமிக்க சிறந்த வழி.. யாரெல்லாம் இணையலாம்..!

எந்தவொரு முதலீட்டு திட்டமாக இருந்தாலும் நன்மை தீமை உண்டு. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டம் முழுமையாக ஓய்வுகாலத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மற்ற திட்டங்களை காட்டிலும் இந்த திட்டத்தில் குறைந்த செலவினைக் கொண்டுள்ளது. இது ஒரு நெகிழ்வுதன்மையை கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வரிச்சலுகையும் உண்டு. 3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! வரிச்சலுகையுடன் இந்த திட்டத்தில் இருந்து வாங்குவதற்கும், வெளியேறுவதற்கும் குறைந்த செலவை வழங்குகிறது. இது 80சிசிடி (1 பி)ன் படி 50,000 … Read more

பாகிஸ்தானில் இந்து ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் மத நிந்தனை செய்த குற்றச்சாட்டில் இந்து ஆசிரியர் ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது. நௌதன் லால் (Nautan Lal) என்ற அந்த ஆசிரியருக்கு, சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி நீதிமன்றம் கூடுதலாக 50,000 பாகிஸ்தானி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு முதல் விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் லால் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு … Read more

நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய தமிழக அரசு

சென்னை தமிழக அரசு சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. இன்று கடந்த 11 ஆண்டுகளில் 5 ஆம் முறையாகச் சிறப்பு கூட்டத் தொடர் நடந்தது..   இன்றைய இந்த கூட்டத்தில் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார். ஏற்கனவே இதே மசோதா கடந்த 1 ஆம் தேதி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.  அமைச்சர் ஆளுநரின் மதிப்பீடுகள் தவறானவை எனக் கூறியதுடன் பல முறை நீட் … Read more

குடும்ப அரசியலை எதிர்த்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிக்கலை சந்தித்தார் – பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தற்கு மக்களவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோதி பதில் அளித்து உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக சாடினார்.  இரண்டாவது நாளாக நேற்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சமீபத்தில் எங்களை விட்டுப் பிரிந்த லதாமங்கேஷ்கர், முதலில் கோவாவைச் சேர்ந்தவர். அவரது சகோதரர் ஹிருதய்நாத் … Read more

4 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை

சென்னை: 4 மாவட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கே.மாதவராமானுஜம், மணிமாளிகை எம்.கணேசன், செ.பாலசுப்பிரமணியன், பி.விஜி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த என்.கரிகாலன்(எ)ரமேஷ், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நகர செயலாளர் எம்.அங்குசாமி, டி.ஆர்.சீனிவாசன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி பொதுக்குழு உறுப்பினர் … Read more

கென்யா முன்னாள் பிரதமர் மகளுக்கு பார்வை தந்த ஆயுர்வேதம்: கேரளா வந்து நெகிழ்ச்சி| Dinamalar

கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், மகளின் மேல் சிகிச்சைக்காகவும் குடும்பத்துடன் கேரளா வந்துள்ளார்ரெய்லா ஒடிங்கா.ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு 2017 ல் 39 வயதில், திடீரென மூளையில் ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை சிகிச்சை மேற்கொள்ளப் … Read more

காஷ்மீரில் அல்-கொய்தா இயக்க பயங்கரவாதி கைது; என்.ஐ.ஏ. நடவடிக்கை

புத்காம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய ஏ.ஜி.எச். என்ற இயக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தவ்ஹீத் அகமது ஷா என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதுபற்றி கடந்த ஆண்டு ஜூனில் உத்தர பிரதேசத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதுதவிர, லக்னோ நகரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என்றும் வழக்கு பதிவாகி உள்ளது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் அல்-கொய்தா இயக்க பயங்கரவாதி அகமதுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) … Read more