மலேசிய தமிழருக்கு மரண தண்டனை விதித்த சிங்கப்பூர்

போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய தமிழருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மலேசிய தமிழரான 41 வயது கிஷோர்குமார் ராகவன், சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் 900 கிராம் எடைகொண்ட மாவுப் பொருளை ஒரு பையில் எடுத்துச் சென்று, சிங்கப்பூரைச் சேர்ந்த புங் ஆகியாங் (61) என்பவரிடம் கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் சிங்கப்பூர் பொலிஸாருக்கு தெரியவரவே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புங் ஆகியாங்கிடம் இருந்த … Read more

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம்

சென்னை: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி கொள்கையை பாதுகாக்க இக்கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக அக்கட்சியின் மூத்த … Read more

தாசில்தார் மீது பெட்ரோலை வீசி கொலை மிரட்டல் – முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

ராஜ்கர்: மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பச்சோர் பகுதியில் சாலை ஆக்ரமிப்பை அகற்று நடவடிக்கையில் ஆக்கிரமிப்பு தடுப்புப்பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.  இந்த நடவடிக்கை அப்பகுதியை சேர்ந்த தாசில்தார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மத்திய பிரதேச மாநில பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பகவான் சிங் ராஜ்புத் அந்த நடவடிக்கையை கைவிடுமாறு எச்சரித்தார்.  திடீரென அவர் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை தாசில்தார் ராஜேஷ் சோர்டே மீது வீசினார்.அருகில் நின்று கொண்டிருந்த ஆக்கிரமிப்பு … Read more

பிப்., 14ஆம் தேதிமுதல் சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் நேரடி விசாரணை தொடக்கம்..!

புதுடெல்லி,  கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது சுப்ரீம்கோர்ட்டு நேரடி விசாரணை முறையை கைவிட்டு வழக்குகளை காணொலி வழியாக விசாரிக்கத் தொடங்கியது.  கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி முதல் செவ்வாய், புதன், வியாழன் என வாரத்தில் 3 நாள்கள் மீண்டும் நேரடி விசாரணை நடைபெற்று வந்தது. ஒமைக்ரான் பரவலைத் தொடா்ந்து மீண்டும் வழக்குகள் முழுமையாக காணொலி வழியில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தசூழலில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி … Read more

இன்றைய ராசி பலன் | 08/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

மொராக்கோவில் உயிரிழந்த சிறுவன் இறுதிச்சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர்!

மொராக்கோவில் ஐந்து நாட்களாக கிணற்றில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். மொராக்கோவில் 105 அடி ஆழ்துளைக் கிணற்றில் கிட்டத்தட்ட 5 நாட்களாக சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன் Rayan Awram-ன் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொள்ள நூற்றுக்கணக்கான மக்கள் Chefchaouen-ல் உள்ள Ighran கிராமத்தில் சம்பவம் நடந்த இடத்திலேயே சிறுவனின் வீட்டிற்கு வெளியே கூடினர். சிறுவனுக்கு இஸ்லாமிய முறைப்படி அனைத்து சடங்குகளும் செய்யபட்டன. அங்கு … Read more

ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி – நடவடிக்கை எடுக்க ஆணை

சென்னை: ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு ஒன்றில் கிளப்களில் நுழைவு, வெளியேறும் பகுதிகள் மற்றும் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் குறிப்பிட்ட காலத்தில் சிசிடிவிகளை அமைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கிளப்களில் சூதாட்டம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவிகளைப் பொருத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள … Read more

பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கவிக்க நடவடிக்கை – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட் தெரிவித்துள்ளதாவது: ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் கந்தேரி, ஐஎன்எஸ் சென்னை, நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தளவாடங்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.  இந்த திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் பல கொள்கை முன் முயற்சிகளை … Read more

மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் 6,802 மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் 6,802 மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. தரவரிசை பட்டியலில் உள்ள 6,639 இடங்களில் முதற்கட்டமாக 6,082 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிந்தது

மும்பை, மராட்டியத்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 2-வது வாரத்தில் மாநிலத்தில் தொற்று பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியது.  இதில் இன்று  பாதிப்பு அதிரடியாக சரிந்தது. மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 436 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 78 லட்சத்து 10 ஆயிரத்து 136 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75 லட்சத்து 57 ஆயிரத்து 34 … Read more