மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் – இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

புனே: மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். முதல் செட்டில் இந்திய ஜோடி தோற்றாலும், அடுத்த இரு செட்களை அதிரடியாக ஆடி வென்றது. இந்த இறுதிப்போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 44 நிமிடங்கள் நீடித்தது.  இதில், 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் … Read more

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதினியாவில் நடைபெற்ற காணொலி பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி அறிவித்தார்.

இந்திய அணி அபார பந்துவீச்சு; 176 ரன்னுக்கு விண்டீஸ் அணி ஆல்-அவுட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விண்டீஸ் அணி 176 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது. இந்திய அணியில் ‘ஆல்-ரவுண்டர்’ தீபக் ஹூடா அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். விண்டீஸ் அணிக்கு … Read more

3ல் 2பேர் அசைக்க முடியா நம்பிக்கை.. பட்ஜெட்டால் பொருளாதாரம் மீண்டு வரும்.. சர்வேயில் பலே ரிசல்ட்!

3ல் 2 இந்தியர்கள் பட்ஜெட் 2022 ஆனது பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நம்புகின்றனராம். இது குறித்தான லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில், இந்தியர்கள் பலரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நம்பிக்கை கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய சவால்.. சமாளிக்க முடியுமா..!! மேலும் தற்போது கொரோனா தொற்று நோயின் காரணமாக தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் வருமான வரி சலுகையில் பல மாற்றங்களை செய்யலாம் … Read more

“நீட்-க்கு திமுக மூல காரணமாக இருந்ததை மறைக்க, அதிமுக மீது வீண் பழி!” – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

நீட் தேர்விற்கு மூல காரணமாக திமுக இருந்ததை மூடி மறைக்க அதிமுக மீது வீண் பழி சுமத்துவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கைவிட்டு இருப்பதை பார்த்தால், எவ்வளவு பெரிய பொய் ஆனாலும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள் என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ … Read more

லதா மங்கேஷ்கர் எப்படிபட்டவர் தெரியுமா? சிறு வயது நினைவுகளை பகிர்ந்த பாடகி சித்ரா

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் குறித்து பாடகி சித்ரா தன்னுடைய இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலையில் லதா மங்கேஷ்கர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து சினிமா வட்டாரங்கள், அரசியல் … Read more

லதா மங்கேஷ்கரின் இழப்பு எனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளது : இளையராஜா உருக்கம்… வீடியோ

இந்திய திரைப்பட இசை உலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவு தனக்கு மிகவும் மனவேதனை அளித்திருப்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜா இசையில் ‘ஆராரோ ஆராரோ’ என்று பிரபு நடித்த ஆனந்த் படத்திலும், ‘வலையோசை கலகலகலவென’ என்று கமல் நடித்த சத்யா படத்திற்க்காகவும் பின்னணி பாடியவர் லதா மங்கேஷ்கர். கொரோனா காரணமாக ஜனவரி மாதம் 8 ம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ம.தி.மு.க.

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.  இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்நிலையில், ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க, பா.ம.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து … Read more

மும்பை பிரபுகஞ்சில் இருந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மும்பை: மும்பை பிரபுகஞ்சில் இருந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. லதா மங்கேஷ்கர் உடல் ராணுவ வாகனத்தில் வைத்து சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.