50 வயதில் ரூ.11 கோடி சாத்தியமா.. எதில் முதலீடு..எவ்வளவு செய்யலாம்..!

இன்றைய காலகட்டத்தில் கொரோனாவின் தாக்கம் என்பது மிக மோசமானதாக இருந்து வந்தாலும், மக்கள் மத்தியில் சேமிப்பின் அவசியத்தினையும் உணர்ந்துள்ளனர். இதற்கிடையில் பல முதலீட்டு திட்டங்களிலும் கணிசமான முதலீடுகள் அதிகரித்துள்ளன. பொதுவாக நீண்டகால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல லாபம் கொடுக்கலாம் என்றே நிபுணர்கள் கூறிவருகின்றனர். குறைந்த தொகையை முதலீடு செய்யலாம் அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது 50 வயதில் 11 கோடி ரூபாய் வேண்டும். தற்போது வயது 25. எவ்வளவு முதலீடு செய்யணும்? எந்த திட்டத்தில் … Read more

`பார்களை மூட வேண்டும்..!’ – நீதிமன்ற உத்தரவு யாருக்கான செக்?!

தனியாரிடமிருந்த மதுபான சில்லரை விற்பனையை 2003-ம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்றுநடத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ஐ திருத்தி, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003 என்ற சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. அதன்படி, தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. அன்று முதலே, மதுக்கடைகளை ஒட்டி, தனியார் சார்பில் அமர்ந்து மது அருந்துவதற்காகவும், காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் திண்பண்டங்கள் விற்பனை என்ற … Read more

36 மொழிகளில் பாடல்கள்.. யார் இந்த கானக்குயில் லதா மங்கேஷ்கர்?

இந்தியாவின் நைட்டிங்கேல் என செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8.12 மணிக்கு உயிரிழந்தார். கடந்த மாதம் 11ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லதா மங்கேஷ்கர். அவரது உடல்நலம் தேறி வந்த நிலையில், நேற்று நிலைமை மோசமடைந்தது, கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சையின் போது பல்வேறு உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் இன்று காலை 8.12 மணிக்கு … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்

மும்பை பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தாக்குதலால் இன்று உயிர் இழந்தார். சென்ற மாதம் 8 ஆம் தேதி அன்று பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதையொட்டி அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று  அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக  மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது..  அவர் தொடர்ந்து 29 நாட்களாகச் சிகிச்சையில் இருந்தார்.  இன்று காலை அவர் உயிர் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- தலைவர்கள் பிரசாரம் இன்று தொடக்கம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இன்று முதல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளார். இன்று மாலை 5 மணியளவில் கோவை மாவட்டத்தில் இருந்து அவர் தனது காணொலி பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த காணொலி காட்சி பிரசாரத்தை மக்கள் பார்க்கும் வகையில், கோவை மாநகராட்சியில் … Read more

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலில் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையம் தொட்டுள்ளார் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட்: “காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ரூ.500-க்கும் குறைவாக காஸ் சிலிண்டர்!’ – ராகுல் காந்தி

5 மாநில தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 -ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கிச்சாவின் தேராய் பகுதியில் 1,000 விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்து, உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு 4 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். நரேந்திர மோடி – ராகுல் காந்தி “4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வோம், சிலிண்டர் விலையை ரூ. … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்: ரசிகர்கள் கண்ணீர்

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு இசை ரசிகர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது. … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்- சினிமா பிரபலங்கள் இரங்கல்

மும்பை: இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை … Read more