குஜராத்தைப் போல கர்நாடக பள்ளி பாட திட்டத்திலும் பகவத் கீதை!| Dinamalar

பெங்களூரு: ”குஜராத் போன்று, கர்நாடகாவிலும் பாடப்புத்தகத்தில் ‘பகவத் கீதை’ இடம் பெறுவது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,” என கர்நாடக தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார். பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது: குஜராத்தில் மூன்று முதல் நான்கு கட்டங்களாக ‘மாரல் சயின்ஸ்’ எனப்படும் அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக பகவத் கீதையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதுதான் என் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக முதல்வருடன் விவாதித்த பின்னரே, அறநெறி பாடத்தை … Read more

"நான் நிஜ `சார்பட்டா பரம்பரை' பாக்ஸர்; ஏ.ஆர்.ரஹ்மான் என் சிஷ்யன்!"- மதன்பாப் சொல்லும் ரகசியங்கள்

நகைச்சுவை நடிகர்களில் இசையமைக்கத் தெரிந்தவர் என்ற பெருமை மதன்பாப்பிற்கு உண்டு. ஒரு காலத்தில் பாக்ஸராகவும் இருந்திருக்கிறார். கே.பாலசந்தரின் கண்டுபிடிப்புகளில் ஒருவர். ஏ.ஆர்.ரஹ்மானும் இவரது இசைக்குழுவில் வாசித்திருக்கிறார்… மீதியை அவரிடமே கேட்போம். “எங்க வீட்டுல நான் எட்டாவது புள்ள. காமெடியா சொல்றதா இருந்தா வீட்ல இருந்து நான் தொலைஞ்சு போனாலே, என்னை கண்டுபிடிக்கவே ரெண்டு நாள் ஆகிடும். ஒரு காலத்துல ஃபிட்னஸ்க்காக கோல் சண்டை, பானா, சூரி கத்தி, பாக்ஸிங்னு பல கலைகள் விரும்பி கத்துக்கிட்டேன். அப்ப நான் … Read more

தமிழ்நாட்டில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை 28.5 சதவிகிதம்! ஆய்வறிக்கை தகவல்…..

சென்னை: தமிழ்நாட்டி இளைஞர் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த  நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக இருந்தது. அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக இருந்தது. பெண்களிடம் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவிகிதத்தோடு காஷ்மீர் முதல் … Read more

உக்ரைனை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யாவுக்கு உதவ சீன படைகள் சென்றனவா? அதிரவைத்த புகைப்படம் குறித்து தெரியவந்த உண்மை

ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன ராணுவ வாகனங்கள் ரஷ்ய எல்லையில் செல்வதாக ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து தெரியவந்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த 24 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பல உலக நாடுகளின் கண்டனம் மற்றும் எதிர்ப்பை மீறி புடினின் ரஷ்யா இத்தாக்குதலை நடத்தி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம் இந்நிலையில் சீனாவின் கனரக ராணுவ வாகனங்கள் ஏவுகணைகள், ஆயுதங்களுடன் ரஷ்ய … Read more

தமிழக பட்ஜெட் பற்றிய மக்களின் கருத்து என்ன?

சென்னை: 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருந்தன. இந்த பட்ஜெட் குறித்த மக்களின் கருத்துகள் வருமாறு:- கல்லூரி மாணவி குர்பானி பேடி:- எல்லா துறைகளும் எல்லா வளர்ச்சியையும் பெறவேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று முதல்-அமைச்சர் கூறி வருகிறார். அது இந்த பட்ஜெட்டில் எதிரொலித்திருக்கிறது. அனைத்து பிரிவுகளிலும் ஒருபோல வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு … Read more

பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை

ப்ரசிலியா: பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்த புகாரில் டெலிகிராம் செயலிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தியா-அர்ஜென்டினா பலப்பரீட்சை| Dinamalar

புவனேஸ்வர் ; புரோ ஹாக்கி லீக் தொடரில் இன்று இந்தியா, அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், ஐ.பி.எல்., பாணியில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்காக புரோ ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தலா இரு முறை மோதும். முடிவில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். கொரோனா காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து விலகிக் கொள்ள 9 அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்திய ஆண்கள் அணி, 6 … Read more

நேரடி வரி வசூலில் வரலாற்று சாதனை..!

இந்திய வரலாற்றில் வருமான வரித் துறை அதிகப்படியான வரியை வசூல் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரிச் செலுத்துதலில் 41 சதவீத அதிகரிப்பால் மொத்த நேரடி வரி வசூல் 48 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய நேரடி வரி அமைப்பின் தலைவர் ஜேபி மொஹபத்ரா தெரிவித்துள்ளார். வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..! 13.63 லட்சம் கோடி ரூபாய் இதன் மூலம் மார்ச் 17ஆம் தேதி நிலவரப்படி … Read more

`உக்ரைனிய தோட்டாக்கள் வேண்டும்’… போரை தவிர்க்க தங்களை தாங்களே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்?!

உக்ரைன் ரஷ்யா இடையே தொடரும் கடுமையான போரில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைனிய குடிமக்கள் தங்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களை தாங்களே காலில் சுட்டுக்கொள்வதாக `Daily Star’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “உக்ரைனில் நடக்கும் போரிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் காலில் தாங்களே சுட்டுக்கொள்ளும் அளவுக்கு புதினின் ராணுவத்தில் … Read more

இந்தியாவுக்கு மொயீன் அலி வருவதில் சிக்கல் – சென்னை அணிக்கு அடுத்த தலைவலி

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் சென்னை அணியில் முக்கிய வீரர் இணையாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே நடப்பாண்டு தொடருக்காக சென்னை அணியில் தோனி, ருத்துராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, ஜடேஜா ஆகிய 4 வீரர்களும் … Read more