செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் பராமரிப்புப் பணி நிறைவு: பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல அனுமதி

சென்னை: பராமரிப்புப் பணி நிறைவடைந்ததை அடுத்து செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு பாலாறு பாலம் வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.  

தென் மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா.. தமிழக பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பு.. !

தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. ஆனால் அதில் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது. இதற்கிடையில் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. முக்கிய எதிர்பார்ப்புகள் குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பினை வெளியிடலாம் … Read more

மேகதாது – மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா முடிவு

பெங்களூரூ: மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. மேலும் இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தமிழகம் இத்திட்டத்திற்கு பலத்த … Read more

ஜெலென்ஸ்கியுடன் நேருக்கு நேர்: உக்ரைன் தொடர்பில் கசிந்த புடினின் தொலைபேசி அழைப்பு

உக்ரைனுடன் அமைதிக்கான தனது கோரிக்கைகளை ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவரித்து தொலைபேசியில் பேசிய விவரங்கள் தற்போது கசிந்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை பிற்பகல் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்தோகனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மட்டுமின்றி, உக்ரைனுடனான சமாதான உடன்படிக்கைக்கான தனது நிபந்தனைகள் என்ன என்பதையும் விளக்கியுள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பின் போது, ஜனாதிபதி எர்தோகனின் முன்னணி ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் கலினும் மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளில் ஒருவர் என தெரிய வந்துள்ளது. இதில், உக்ரைன் … Read more

21 உலக மொழிகளில் தந்தை பெரியார் நூல்களை அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட்: கி.வீரமணி பாராட்டு

சென்னை: தந்தை பெரியார் நூல்களை 21 உலக மொழிகளில் அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு அளித்தார். மிகச் சிக்கலான இந்த நேரத்தில் அருமையான வரவு- செலவு திட்டத்தை அறிவித்துள்ளதாக கி. வீரமணி பாராட்டு தெரிவித்தார். உலகம் பெரியார் மயமாகும் என்று கூறத்தக்க வகையில் அவரது நூல்களை 21 மொழிகளில் அச்சிட உள்ளது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.   

தோப்புகரணத்துக்கு கேரள போலீஸ் மன்னிப்பு| Dinamalar

கண்ணூர் : கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, கட்டுப்பாடுகளை மீறியோருக்கு, கேரளாவைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி யாதிஷ் சந்திரா, தோப்புகரணம் போடும் தண்டனை வழங்கினார். இது தொடர்பாக மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. அதிகாரியின் நடவடிக்கைக்கு, மாநில போலீஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. கண்ணூர் : கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, கட்டுப்பாடுகளை மீறியோருக்கு, கேரளாவைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி யாதிஷ் சந்திரா, தோப்புகரணம் போடும் தண்டனை வழங்கினார். இது தொடர்பாக … Read more

மத்திய அரசால் தமிழ்நாட்டு அரசுக்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு..! #TNBudget2022

மதிப்புக் கூட்டு வரி நடைமுறையில் இருந்தபோது, தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையைப் பெருமளவில் பாதித்துள்ளது. பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன? ஜிஎஸ்டி இழப்பீடு இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022 ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில், … Read more

“எனக்குக் கெடு விதிக்க அவர் என்ன பிரம்மாவா?" – அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி… தொடரும் வார்த்தை போர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும், தி.மு.க – வின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் வார்த்தை யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “355 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு முறைகேடாக 4,472 கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜி ட்வீட் இதற்குப் பதிலளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “2019-ல் அ.தி.மு.க ஆட்சியில் தான் … Read more

போரில் உயிரிழந்துள்ள 109 குழந்தைகள்: வினோத போராட்டத்தில் உக்ரைன் மக்கள்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அமைதியான முறையில் எதிர்க்கும் விதமாக லிவிவ் நகரின் மைய சதுக்கத்தில் சுமார் 109 குழந்தைகள் தொட்டில் வண்டிகளை நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய போரின் 23வது நாளான இன்று அதிகாலை மேற்கு உக்ரைனின் முக்கிய நகரான லிவிவ்விற்கு அருகில் உள்ள ராணுவ ஹெலிகாப்டரை பழுது நிக்கும் மையத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ள லிவிவ் நகரின் இந்த பகுதியானது நேட்டோ கூட்டமைப்பு நாடான … Read more