ஜேம்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்| Dinamalar

பெங்களூரு-மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று அவரது நடிப்பில் ஜேம்ஸ் படம் ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கால் அழுதபடி வெளியே வந்தனர்.மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகா முழுவதும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீசானது.இதனால் தியேட்டர்கள் அனைத்தும் திருவிழா கோலம் போல காட்சி அளித்தது. படம் பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கால் அழுதபடி பார்க்கும் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி, தெற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.   இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய 5 தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக பின்பற்ற வேண்டும். … Read more

ஈரானின் சூப்பர் ஆஃபர்.. இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது, வரலாறு காணாத உச்சத்தினை எட்டியது. தற்போது வரையில் இவ்விரு நாடுகளுக்கான பிரச்சனையானது மிக மோசமாக நிலவி வரும் நிலையில், இதுவரையில் சுமூக நிலை ஏற்பட்டதாக தெரியவில்லை. இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை விதித்துள்ளன.. எல்ஐசி ஐபிஓ மே மாதத்திற்கு ஒத்திவைப்பு..? ரஷ்யா – உக்ரைன் போரால் மொத்த கதையும் மாறியது..! ரஷ்யா மீதான தடை குறிப்பாக … Read more

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜெலன்ஸ்கி பெயர்; பரிந்துரைக்கக் கோரி ஐரோப்பியத் தலைவர்கள் கடிதம்!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்பு போரால் உலகமே உக்ரைன் எப்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும், உக்ரேனியர்களின் முகத்தில் மீண்டும் எப்போது புன்னகையைக் காணமுடியும் என்று எதிர்பார்த்துக் கிடக்கிறது. கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் நான்காவது வாரத்தை எட்டிவிட்டது. போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் போர் தொடங்கிய நாள்முதல், ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டு, தங்கள் நாட்டு … Read more

இளவரசர் என் காதல் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்: பாடகி ஒருவர் குற்றச்சாட்டு

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் எனது காதல் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார் என்கிறார் பிரபல பாடகி ஒருவர். இளவரசர் சார்லசின் 30 ஆவது பிறந்தநாளின்போது, அவருடன் ஆடிப்பாடினார் Sheila Ferguson. அப்போதே இருவருக்கும் இடையில் ஒரு நட்பு உருவாகிவிட்டதாம். இப்போதும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்களாம். ஆனால், Sheilaவுக்கு இளவரசர் சார்லஸ் மீது ஒரு கோபம். அவரால் தனது காதல் வாழ்க்கை நாசமாகிவிட்டது என்கிறார் Sheila. என்னை யாருமே காதலிக்கவில்லை என்று கூறும் Sheila, ஒரு முறை நடன விடுதி … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வாளர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய 25-ம் தேதி கடைசி நாள்…

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை எழுதிய தேர்வாளர்கள், தங்களது கல்வி சான்றிதழ்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் கால அவகாசம்  வரும் 25-ம் தேதி வரை  நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும், … Read more

பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லை- பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

சென்னை: தமிழக பட்ஜெட் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது.  6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு  உயர்கல்வியினை பயிலும் போது ₹1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்! ஆனால் … Read more

தஞ்சையில் காவலர்களின் மெத்தனம்; கைவிலங்குடன் தப்பிய கைதி: 6 பேரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி அதிரடி உத்தரவு

தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடியில் கைவிலங்குடன் கைதி தப்பிய சம்பவத்தில் 4 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி, காவலர்கள் மணிகண்டன், விஜயகுமார், ஜகலதலப்பிரதாபன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சாராயம் கடத்திய ஹரிஹரன் என்பவர் இறந்த சம்பவத்தில் எஸ்.எஸ்.தனசேகரன், காவலர் பார்த்திபன் ஆகியோரை இடைநீக்கம் செய்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.      

கர்நாடகாவில் அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை| Dinamalar

பெங்களூரு: மேகதாது அணை திட்டம் தொடர்பாக பெங்களூருவில், கர்நாடகாவில் அனைத்து கட்சிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தமிழகம் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் குடிநீர் சார்ந்த திட்டம் என்பதால் அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கர்நாடகா வலியுறுத்தி வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட … Read more

'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட இயக்குநருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.    இதற்கிடையில், காஷ்மீரில் … Read more