தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ரூ.32,599 கோடியில் இருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சரியான நடவடிக்கை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அமேசானில் பொருட்களை வாங்கி வெடிகுண்டு தயாரித்தது அம்பலம்| Dinamalar

தட்சிண கன்னடா-மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர், அமேசான் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்கி வீட்டிலேயே தயாரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையத்தில் 2020- ஜனவரி 20ல் டிக்கெட் கவுன்டர் அருகே ஒரு பை, நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.அந்த பையை சோதனை செய்தபோது மூன்று வெடிகுண்டுகள் இருந்தன. அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர். இது தொடர்பாக உடுப்பி … Read more

மாணவிகளுக்கு ரூ.1000 முதல் தொழிற்துறை பூங்காக்கள் வரை.. தமிழக பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் அறிவிப்புகள்

நடப்பு நிதியாண்டிற்காக தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் பற்பல அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக தொழிற்துறையினை மேம்படுத்தும் விதமாக பல அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக பட்ஜெட்டின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு நோயற்ற வாழ்வு, நல்ல விளைச்சல், பொருளாதார வளம், பாதுகாப்பு, இன்ப நிலை என ஐந்தும் அவசியம் என ” பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து” என்ற குறளுடன் ஆரம்பித்தார். பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன? எதற்கு … Read more

மாணவிகளுக்கு ₹1,000 ஊக்கத்தொகை முதல் வானிலை கருவிகள் வரை; தமிழக பட்ஜெட் டாப் 10 ஹைலைட்ஸ்!

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களிலிருந்து முக்கியமான 10 ஹைலைட்ஸை பார்ப்போம். 1. 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 8 ஆண்டுகளாக தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்துவந்தது. முதல்முறையாக இந்த ஆண்டு சுமார் 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை குறையவுள்ளது. நிதிப்பற்றாக்குறையும் 4.51 சதவிகிதத்திலிருந்து 3.80 சதவிகிதமாக குறைகிறது. அதேசமயம், உக்ரைன் போரின் தாக்கம், தமிழக … Read more

உடல் எடையை சட்டென குறைக்க வேண்டுமா? இப்படி 5 விதமாக நீரை குடிங்க போதும்

பொதுவாக இந்த காலத்தில் உடல் பருமன் மக்களின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.   இதனை எளியமுறையில் குறைக்க தினமும் காலையில் பல்வேறு வகையான தண்ணீரைக் குடித்தால் போதும். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். 5 நாட்களுக்கு வெவ்வேறு எடை இழப்பு நீர்களை குடித்து வந்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  வெந்தய நீர்  வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயல்முறையை குறைக்கிறது. உடல் எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் தினமும் … Read more

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட் – முழு விவரம்….

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட்  முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதி நிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இடைக்கால நிதி நிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முதன்முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின்  நிதிநிலை அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச்.18) காலை 10 மணிக்கு நிதியமைச்சா் … Read more

சென்னை வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி- தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது.  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசு நிலங்களில் நிலஅளவைப் பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள, “தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்களின் அமைப்பு” வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நிலஅளவைப் பணிகளைமேற்கொள்ள நிலஅளவையர்களுக்கு “ரோவர்” கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் … Read more

வரும் 2022-23ம் நிதியாண்டில் வணிகவரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,06,765.22 கோடி வருவாய் கிடைக்கும்: நிதியமைச்சர் நம்பிக்கை

சென்னை: வரும் 2022-23ம் நிதியாண்டில் வணிகவரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,06,765.22 கோடி வருவாய் கிடைக்கும் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். மாநில எக்சைஸ் வரிகள் வாயிலாக, வரும் நிதியாண்டில் ரூ.10,589.12 கோடி வருமானம் கிடைக்கும். முத்திரைத்தாள், கட்டணம் வாயிலாக வரும் ஆண்டில் அரசுக்கு ரூ.16,322.73 கோடி வருமானம் வரும். மோட்டார் வாகன பதிவு கட்டணம் வாயிலாக வரும் நிதியாண்டில் ரூ.7,149.25 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து அமைச்சர்கள் தேர்வு| Dinamalar

புதுடில்லி: வரும் 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, சமீபத்தில் வெற்றி பெற்ற நான்கு மாநிலங்களில், அமைச்சர்கள் தேர்வை பா.ஜ., மிக கவனமுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது முறை சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பஞ்சாபை தவிர, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில், பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த நான்கு மாநிலங்களில் அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், … Read more

திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மொபைல் தகவல் சென்டர்கள்.. எதற்காக..?

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டினை முதல் முறையாக திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்துறை என பல முக்கிய துறைகளிலும் கவனம் செலுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் கம்பியூட்டர் வாங்கும் தமிழ்நாடு அரசு..! மொபைல் தகவல் … Read more