கோவிட்; இந்தியாவில் மேலும் 2,528 பேர் பாதிப்பு, 3,997 பேர் நலம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,528 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,997 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,04,005 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 3,997 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,58,543 ஆனது. தற்போது 29,181 பேர் … Read more

தங்கம் விலையில் தொடரும் சரிவு.. ஆனா நகை கடையில் எந்த மாற்றமும் இல்லை.. மக்கள் கவலை..!

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில், இன்று மீண்டும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. கடந்த அமர்வில் அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரித்ததாக செய்திகல் வெளியானாலும் தங்கம் விலையானது சற்றே ஏற்றத்திலேடே காணப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் சர்வதேச சந்தையில் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையானது இன்று ஹோலியை முன்னிட்டு விடுமுறையாகும். எனினும் மாலை அமர்வு உண்டு. ஆக சர்வதேச சந்தையின் எதிரொலியானது இன்று மாலை நேர வர்த்தகத்தில் இருக்கலாம். அப்போதும் பெரும் … Read more

காங்கிரஸ் Vs ஜி 23 தலைவர்கள்… இந்த உள்குத்து யுத்தத்துக்கு முடிவு எப்போது?

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தோ்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களைப் பதவி விலகுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி உத்தரவிட்டார். சோனியா, ராகுல் காங்கிரஸ் கட்சிக்குள் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கையை கட்சியின் தலைமை எடுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியில் … Read more

போருக்கு பயந்து உக்ரைனில் இருந்து தப்பி கப்பலில் பயணித்த இளம்பெண்ணுக்கு 2 ஆண்களால் நேர்ந்த கொடூரம்!

உக்ரைன் – ரஷ்யா போரில் இருந்து தப்பி அகதியாக சென்ற இளம்பெண் இரண்டு பேரால் கப்பலில் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 24ஆம் திகதி உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து உக்ரைனை சேர்ந்த பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அந்த வகையில் உக்ரைனை சேர்ந்த 18 வயதான இளம்பெண் நாட்டிலிருந்து தப்பி ஜேர்மனி ஹொட்டல் கப்பலில் சென்றிருக்கிறார். அவருடன் மேலும் 25 அகதிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் … Read more

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி – எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள்….

சென்னை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர், சட்டப்பபேரவையில் இன்று 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில்  துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-  சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி,  மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் … Read more

அவமானப்படுத்தியதால் ஆத்திரம்: ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற முன்னாள் மாணவர்

பிரஸ்சல்ஸ்: பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்தவர் மரியா வெர்லிண்டன் (57). ஆசிரியையான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதில் அவரது உடலில் 101 முறை கத்தியால் குத்தி இருப்பது தெரியவந்தது. அவரை கொடூரமாக கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் … Read more

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் – துறைமுகம் மேம்பாட்டு சாலை திட்டத்தை செயல்படுத்த ரூ.5770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

சூப்பர் கம்பியூட்டர் வாங்கும் தமிழ்நாடு அரசு..!

கல்வி, தொழிற்துறை எனப் பல துறையில் தமிழ்நாடு இன்று முன்னோடியாக இருக்கத் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்படும் திட்டங்களைச் சரியான முறையில் சரியான நேரத்தில் செயல்படுத்தியதால் மட்டுமே இத்தகைய உயர்ந்த வளர்ச்சியை அடைந்துள்ளோம். இந்த வகையில் வானிலை மற்றும் வானிலை சார்ந்த கணிப்புகள், ஆய்வுகள், கணக்கீடுகளைச் சரியமான முறையிலும், முன்கூட்டியே கணிக்கும் வகையில் தமிழக அரசு சூப்பர் கம்பியூட்டர் உருவாக்கும் முக்கியமான திட்டத்தை 2022 -23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் … Read more

“எங்களை விட்டு போகாதீங்க சார்..!" – ஆசிரியரை கண்ணீருடன் சுற்றி வளைத்த மாணவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூர் கிராமத்தில் இயங்கி வருகிறது அரசு உயர்நிலைப்பள்ளி. அங்கு ஆங்கில பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த கண்ணன். அந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களின் குடும்பச் சூழலையும், கிராமத்துப் பிண்ணனியையும் உணர்ந்துகொண்ட ஆசிரியர் ஆனந்த கண்ணன், அவர்களுடன் அன்பாக பழகியிருக்கிறார். மேலும் தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே ஆங்கிலத்தில் பேச முடியும், எழுத முடியும் என்ற நிலையை மாற்றி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி முறையில் ஆங்கிலத்தை எளிமையாக கற்றுக்கொடுத்திருக்கிறார். … Read more

ரஷ்யா மீண்டும் உக்ரைனை தாக்கினால்… சக நாடுகளுடன் முக்கிய விவாதத்தில் ஈடுபட்டுள்ள பிரித்தானியா

புடின் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக உக்ரைனை மண்டியிடவைக்க முடியவில்லை. ரஷ்ய தரப்பில் கடும் இழப்பு, முக்கிய தளபதிகள் முதல் ஏராளம் வீரர்களை இழந்து தவிக்கிறது ரஷ்யா. புடின் பேச்சை நம்பி உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள், சரியான உணவு கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஆக, போரை முடித்துக்கொள்வதுதான் இப்போதைக்கு ரஷ்யாவுக்கு ஒரே வழி. ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது என்பது போல, தாங்கள் வெளியேறவேண்டுமானால், உக்ரைன் சில நிபந்தனைகளுக்கு உட்படவேண்டும் என ரஷ்யா … Read more