சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம்! – புதுச்சேரி நகராட்சி குறிப்பிடும் இடங்கள் எவை?

புதுச்சேரியில் வீடுகள், காலிமனைகள், சொத்துகள், வணிக உரிமம், குடிநீர் போன்றவற்றுக்கு வரிகளை வசூலித்துவரும் புதுச்சேரி நகராட்சி, தற்போது வருவாயைப் பெருக்க புதிய புதிய வரி விதிப்புகளிலும் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், புதுச்சேரியின் நகர்ப்புறச் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும் நகராட்சி, அதற்காக டெண்டர் கோரியிருக்கிறது. அதனடிப்படையில் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படவிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு வீதிக்கும் டெண்டர் ஆரம்பத் தொகையை நிர்ணயித்து, அதற்குச் செலுத்தவேண்டிய முன்வைப்பு … Read more

உக்ரைன் ஊடகத்தால் ஏற்பட்ட துயரம்… குறிவைத்த ரஷ்யா: டசின் கணக்கான குழந்தைகள் நிலை?

உக்ரைனில் நாடக அரங்கம் ஒன்று ரஷ்ய விமான தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. குறித்த நாடக அரங்கத்தில் ரஷ்ய தாக்குதலுக்கு பயந்து டசின் கணக்கான சிறார்களுடன் சுமார் 1,200 உக்ரைன் குடிமக்கள் பதுங்கியிருந்துள்ளனர். குறித்த தகவல் உக்ரைன் செய்தி ஊடகம் ஒன்று தவறுதலாக வெளியிட, அடுத்த 20 நிமிடங்களில் ரஷ்யா வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், டசின் கணக்கான குழந்தைகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி, சிறார்கள் என அந்த அரங்கத்திற்கு … Read more

மார்ச்-18: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பி.டி.ஏ., புதிய கட்டடம் பணிகள் யார் வசம்?| Dinamalar

பெங்களூரு-”இந்திரா நகரில் உள்ள பி.டி.ஏ., வர்த்தக கட்டடத்தை இடித்து புதிதாக கட்டுவதற்கான பணியை, ஒப்பந்தம் பெற்றிருந்த பழைய நிறுவனத்திடம் ஒப்படைப்பதா அல்லது புதியவரிடம் ஒப்படைப்பதா என்பது பற்றி ஆலோசிக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.சட்டமேலவை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் வெங்கடேஷ் கேள்விக்கு பதிலளித்து, முதல்வர் கூறியதாவது:பெங்களூரின் இந்திரா நகரில் உள்ள பி.டி.ஏ., வர்த்தக கட்டடத்தில், 133 கடைகள் உள்ளன. 68 கடைகள் வாடகைக்கு அளிக்கப்பட்டுள்ளன; 65 கடைகள் காலியாக உள்ளன. 75.91 லட்சம் ரூபாய் … Read more

நட்சத்திர பலன்கள்: மார்ச் 18 முதல் 24 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

உக்ரைன் போர்… உயிர் பயம்: விளாடிமிர் புடின் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை

தமது தனிப்பட்ட ஊழியர்களால் தாம் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக கூறி, ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை நீக்கி, பதிலுக்கு புதியவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது ஆதரிக்க மறுக்கும் ரஷ்யர்கள் தேச விரோதிகள் என அறிவித்துள்ளார் விளாடிமிர் புடின். அரசு சார்பு ரஷ்ய செய்தி ஊடகம் வாயிலாக பேசிய விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு எதிரான தமது போரை எதிர்க்கும் எவரும் மோசமானவர்கள் என குறிப்பிட்டு வீராவேசமாக பேசியுள்ளார். ஆனால், … Read more

உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்- புதினுக்கு, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வேண்டுகோள்

வாஷிங்டன்: ரஷியா நடத்தி வரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆதரவாக ஹாலிவுட் மூத்த நடிகர், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் குரல் கொடுத்துள்ளார். உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்த வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது: எனது அன்பான ரஷிய நண்பர்கள் மற்றும் உக்ரைனில் பணியாற்றும் ரஷிய வீரர்களுக்கு சென்று அடையும் வகையில் இந்த செய்தியை அனுப்புகிறேன். உலகில் நடக்கும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,086,740 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,086,740 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 465,584,289 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 397,553,546 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 63,422 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகிழ்ச்சியை சீர்குலைக்கும் ஊழல், லஞ்சம்| Dinamalar

புதுடில்லி : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘ஹேப்பி பிளஸ் கன்சல்டிங்’ என்ற தனியார் நிறுவனம், இந்தியாவில் மக்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது தொடர்பான களஆய்வை நடத்தியது. அதன்படி முந்தைய ஆண்டுகளைவிட மக்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 10க்கு 6.84 மதிப்பெண் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், 43.2 சதவீத மக்கள், ஊழல் மற்றும் லஞ்சம் தங்களுடைய மகிழ்ச்சியை சீர்குலைப்பதாக கூறியுள்ளனர். புதுடில்லி : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், … Read more

ஒரே நேரத்தில் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கோடீஸ்வரர் இவர் தான்: வெளிவரும் பின்னணி

பிரித்தானியாவில் P&O படகு நிறுவனம் ஒரே நேரத்தில் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், P&O படகு நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார் எனவும், அவர்கள் எந்த நாட்டவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது P&O படகு நிறுவன நிர்வாகமானது ஒரே ஒரு வீடியோ அழைப்பில், 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. மட்டுமின்றி, அடுத்த சில நாட்களுக்கு தங்களின் 20 படகுகளும் சேவையை முன்னெடுக்காது எனவும் … Read more