மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிப்பு
மதுரை மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது. மதுரை நகரின் முக்கிய அடையாளங்களில் காந்தி அருங்காட்சியகமும் ஒன்றாகும். மதுரை நகருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. காந்தியின் புகழ்பெற்ற எளிமையான ஆடைக்கு அவர் மாறியது மதுரையில் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்குள்ள காந்தி அருங்காட்சியகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிக்ள் வருகை புரிகின்றனர். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தை ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்குரிய நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more