திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது. கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் ராஜ கோபுரம் முன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

இலங்கைக்கு ரூ.7,500 கோடி: இந்தியா கடனுதவி| Dinamalar

புதுடில்லி :பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, இந்தியா மேலும், 7, 500 கோடி ரூபாய் கடனுதவி அளித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி, அன்னியச் செலாவணி பற்றாக்குறை போன்றவற்றால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியாஒப்புதல் அளித்தது. இதில் ஏற்கனவே, ரூ .7,000 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக் ஷே, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது … Read more

பட்ஜெட்டில் வரி உயர்வு, கட்டண உயர்வு இருக்குமா..? பழனிவேல் தியாகராஜன் திட்டம் என்ன..?

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை முழுமையாகத் தயாரித்து நாளை தாக்கல் தயாராக உள்ள நிலையில், மக்களின் சில முக்கியமான கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வரி உயர்வு, கட்டண உயர்வுகள் இருக்குமா என்பது தான் சாமானிய மக்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது. கரூர் மக்கள் வேண்டுகோள்.. பட்ஜெட்டில் பதில் கிடைக்குமா..?! வருமானம் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் போதுமான … Read more

PayTM Payments Bank: தொடரும் பிரச்னைகள்… ரிசர்வ் வங்கியின் தடைக்கு என்ன காரணம்?

பணப் பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழி செயலாக்கும் பிரபல நிறுவனம் பே டிஎம். இக்கட்டண வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதித்துள்ளது நாட்டின் முக்கிய நிதிநிலைகளைப் பராமரிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி. இதுதான் கடந்த மூன்று நாள்களாகப் பேசுபொருளாக இருக்கிறது. வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துதல் மற்றும் தனியுரிமை விதிகள் மீறல், சீன நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் தரவுகளை லீக் செய்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. சந்தேகத்திற்கு மேலும் இடம் வகுக்கும் விதத்தில் … Read more

கனடாவில் காலியாக இருக்கும் ஏராளமான பணியிடங்கள்: வெளிநாட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பு

கனேடியர்கள் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன? கனடாவில் பெருமளவில் பணியிடங்கள் காலியாக உள்ள அதே நேரத்தில், அங்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் உள்ளது. அதாவது, அதிக அளவில் காலியிடங்கள் உள்ளன, ஆனால், அந்த வேலைகளுக்கேற்ற தகுதியுடையவர்கள் குறைவாகவே உள்ளார்கள். சரியாகச் சொன்னால், தகுதியுடையவர்கள் ஏற்கனவே சரியான வேலைகளில் இருப்பதால், இந்த காலியிடங்களை நிரப்ப ஆளில்லை. ஆகவேதான், கனேடிய நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை அதிக அளவில் வேலைக்கு எடுக்கிறார்கள். இப்போதைய சூழலிலும், பல துறைகளில் … Read more

தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  17/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்   இன்று தமிழகத்தில் 37,406 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,51,56,414 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.   இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 146 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,13,394 பேர் குணம் அடைந்து … Read more

அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு- துரைமுருகன் தகவல்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நாட்டைக் காப்போம். மக்களைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசின் “தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, நாட்டிற்கு விரோதமான கொள்கைகளை” கண்டித்து வருகின்ற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்க வேண்டும் என தொ.மு.ச. உள்ளிட்ட 10 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கழகத் தலைவர் அவர்களை நேரில் … Read more

இந்தியா – ஜப்பான் இடையே நாளை மறுநாள் உச்சி மாநாடு; வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜப்பான் பிரதமர் 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.

படகு சவாரி தனியாருக்கு அனுமதி | Dinamalar

புதுச்சேரி-சுற்றுலா துறை சார்பில், தனியார் மூலம் படகு சவாரி துவங்கப்பட உள்ளது.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதையொட்டி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், உப்பளம் புதிய துறைமுகத்தில் உள்ள உப்பங்கழியில் இருந்து சுண்ணாம்பாறு வரை படகு சவாரி துவங்கப்பட உள்ளது. 60 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான படகை இயக்குவதற்கான உரிமை ஆணையை, படகு உரிமையாளரிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபை அலுவலகத்தில் வழங்கினார். … Read more

45 நாட்களில் போர் விமான துறைக்கு 7 அடுக்கு கட்டிடம்; டி.ஆர்.டி.ஓ. சாதனை

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்க கூடிய நவீன நடுத்தர வகையை சேர்ந்த போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வந்தது.  7 அடுக்குகளை கொண்ட இந்த கட்டிடத்தினை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நாற்பத்தி ஐந்தே நாட்களில் கட்டி முடித்து சாதனை படைத்து உள்ளது. இந்த கட்டிடம், போர் விமானங்களுக்கான மின்னணு சாதனங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட உள்ளது.  இதனை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் … Read more