சென்னையில் இருந்து ஹஜ் பயணத்தை தொடங்க அனுமதிக்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியினைக் கருத்தில் கொண்டு, முன்பிருந்ததுபோல் சென்னையிலிருந்து அவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி மத்திய சிறுபான்மையினர் நலத் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்விக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 2022-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டுமென்று கோரி பிரதமருக்கு 11-11-2021 ஆம் நாளன்று … Read more

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே மார்ச் 21ஆம் தேதி 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு

டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இருதரப்பு மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

முருங்கப்பாக்கத்தில் ரதி–மன்மதன் வீதியுலா| Dinamalar

புதுச்சேரி-முருங்கப்பாக்கத்தில் ரதி – மன்மதன் வீதியுலா நேற்று நடந்தது.முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் காமன் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக, கடந்த 9ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு ரதி–மன்மதன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து, தினமும் ரதி-மன்மதனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுவந்தது.நேற்று, ரதி -மன்மதன் வீதியுலா நடந்தது. அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர், முன்னாள் எம்.பி., ராமதாஸ், அறங்காவல் குழுவினர்,பஞ்சாயத்தார் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று … Read more

நடப்பு ஆண்டில் 10 வீரர்கள் தற்கொலை; சி.ஆர்.பி.எப். டி.ஜி. வேதனை

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) டி.ஜி. செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.  அவர் கூறும்போது, நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், 41 வி.ஐ.பி.க்களுக்கு சி.ஆர்.பி.எப். படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  தேர்தல் முடிந்த பின்பு, 27 பேரது பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு கல்வீச்சு சம்பவங்கள் ஏறக்குறைய பூஜ்ய எண்ணிக்கையில் உள்ளன.  வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்களின் … Read more

பட்ஜெட்டுக்கு முன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட தரவுக் கொள்கை.. எதற்காக..?!

2022-23-ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கை மார்ச்18-ம் தேதி காலை 10 மணிக்குத் துவங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இன்று தமிழக அரசு மிகவும் முக்கியமான பாலிசியைக் கொண்டு வந்துள்ளது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பேவரைட் பங்கு.. வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்..! தமிழ்நாடு தரவுக் கொள்கை தமிழக அரசு மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை வழங்கவும், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காகப் … Read more

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு… முன்னாள் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் இடம்பெறுகிறாரா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸையும் மற்ற மாநிலங்களில் வென்ற பா.ஜ.க-வையும் தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பக்வந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இதன் வெற்றியின் மூலமாக ஆம் ஆத்மி ராஜ்ய சபா இடங்களை உறுதி செய்திருக்கிறது. பஞ்சாபின் 17 ஆவது முதல்வராக பக்வந்த் மான் பொறுப்பேற்ற பின் அந்தத் தேர்வு பட்டியலில் ஹர்பஜனின் பெயர் அடிப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஜலந்தரில் அமையவிருக்கும் புதிய … Read more

எக்கச்சக்கமான வீரர்களை பலிகொடுத்துள்ள ரஷ்யா… இழந்தது என்ன?: அமெரிக்காவும் பிரித்தானியாவும் வெளியிட்டுள்ள தகவல்கள்

உக்ரைனை ஊடுருவியதால் எக்கச்சக்கமான வீரர்களை இழந்துள்ளது ரஷ்யா. உக்ரைன் போரில் ரஷ்யா குறைந்தது 7,000 வீரர்களை பலிகொடுத்துள்ளதுடன், ரஷ்ய வீரர்கள் சுமார் 14,000 முதல் 21,000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. நான்கு தளபதிகள், ஏராளம் படைவீரர்கள் என பலிகொடுத்துள்ள ரஷ்யாவின் இழப்பைக் கணக்கிட்டால், புடின் உக்ரைனை ஊடுருவதற்காக அனுப்பிய படைவீரர்களில் ஐந்தில் ஒரு பங்கு சேதமடைந்திருக்கலாம் என பென்டகன் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்ய ஊடுருவல் கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து … Read more

உக்ரைன் மீதான தாக்குதல்: சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது என கிரெம்ளின் மாளிகை அறிவிப்பு…

மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குலை நிறுத்த ரஷ்யாவுக்கு  சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த  உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்ய அதிபர் மாளிகையான  கிரெம்ளின் அறிவித்து உள்ளது. நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் நேட்டோ படையினரும் உக்ரைனை கைவிட்டுவிட்டதால், உக்ரைன் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அங்கிருந்து பல லட்சம்பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். போர் இன்று 22வது நாளாக தொடர்கிறது. உக்ரைனின்  தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் … Read more

லஞ்ச ஊழலுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை… ஹெல்ப்லைனை தொடங்க உள்ளது பஞ்சாப் அரசு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக கூறியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் எண் தொடங்கப்பட உள்ளது. லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மற்றும் பிற முறைகேடுகளில் ஈடுபடும் ஊழல் அதிகாரிகளின் வீடியோக்களை இந்த எண்ணில் மக்கள் பதிவேற்றம் செய்து புகார் அளிக்கலாம்.  அந்த ஹெல்ப்லைன் எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் ஆகும். மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வேன். டெல்லியில் … Read more

2018ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை; 103 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பூந்தமல்லி: 2018ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 103 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி அருகே 2018ல் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், 103 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் பரசுராமன் என்பவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.45,000 அபராதம் விதித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.