ரூ.13 லட்சம் வாடகை பாக்கி… அலட்சியம் காட்டிய பத்து கடைகளுக்கு சீல்! – அறநிலையத்துறை அதிரடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேலசத்திரம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூ.1,300 வசூலிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்திருக்கின்றனர். பலமுறை அறநிலையத்துறை சார்பில் வாடகை பாக்கி செலுத்தக் கோரி அறிவுறுத்தியும் கடை உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்து வந்திருக்கின்றனர். `இந்து அறநிலைய துறை நிர்வாகத்தை மத்திய அரசிடம் … Read more

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மேற்கத்திய தலைவர்களை கடுமையாக விமர்சித்த ஜெலன்ஸ்கி

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். ஜெலன்ஸ்கி உரையாற்ற தொடங்குவதற்கு முன், ஜேர்மனி நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றனர். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, படையெடுப்புக்கு முன் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் கூடினர், அப்போது மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் மிகவும் மந்தமாக செயல்பட்டனர், ரஷ்யாவைத் தடுக்க போதுமான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. நீங்கள் அனைவரும் உங்களின் பொருளாதாரம் குறித்து மட்டுமே கவலைப்பட்டீர்கள். … Read more

முதுநிலை பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பு! யுஜிசி தகவல்…

டெல்லி: முதுநிலை கல்வி  படிக்காமல் இளநிலை பட்டப்படிப்பு முடிந்ததும்  நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் புதிய  இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய படிப்புகள் 4 ஆண்டுகாலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள் படிக்கப்பட வேண்டும். பின்னர் முதுநிலை பட்டப்படிப்பு 2 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றால்தான் பிஎச்.டி எனப்படும் முனைவர் படிப்பு படிக்க முடியும்,. இந்த நிலையில்,  பல்கலைக்கழக மானியக் குழு ஆராய்ச்சி படிப்பான … Read more

பெண் பித்தனாக சுற்றிய நீராவி முருகன்- 20 ஆண்டு சொகுசு வாழ்க்கை பற்றி பரபரப்பு தகவல்கள்

நீராவி முருகன்… சென்னை மாநகரை 7 ஆண்டுகளுக்கு முன்பு கலங்கடித்த கொள்ளையன் இவன். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஒயின் சங்கர்’ என்கிற தூத்துக்குடி ரவுடியிடம் கையாளாக இருந்தவன். பின்னர் ஒயின் சங்கரையே குருவாக ஏற்றுக்கொண்டு ரவுடித் தொழிலில் கால் பதித்த நீராவி முருகன், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈவு இரக்கம் பார்க்காமல் ஈடுபட்டு வந்தான். சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நடுரோட்டில் ஆசிரியை ஒருவரை கடந்த 2014-ம் ஆண்டு இவன் … Read more

நெல்லையில் நேற்று என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி நீராவி முருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படை்பு

நெல்லை: நெல்லையில் நேற்று என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி நீராவி முருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பின் ரவுடி நீராவி முருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் களாகாடு அருகே நேற்று அவரை கைது செய்ய சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மூத்த குடிமக்களுக்கான ரெயில்வே டிக்கெட் சலுகையை தொடரும் திட்டம் இல்லை – மத்திய ரெயில்வே மந்திரி

புதுடெல்லி, கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் தொடரும் திட்டம் இல்லை என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா தொற்று பரவலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன.  இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்து … Read more

4 வருடங்களுக்குப் பிறகு… பிள்ளைகளுடன் சந்திப்பு! – பதவியேற்பு விழாவில் நெகிழ்ந்த பக்வந்த் மான்

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று முதல்முறையாக பஞ்சாப்பில் ஆட்சியமைத்திருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராகப் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவருமான பக்வந்த் மான் முன்னிறுத்தப்பட்டார். இவர் தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னர் நகைச்சுவை நடிகராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், ஆம் ஆத்மி பஞ்சாப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, வழக்கமாகப் பின்பற்றப்படும் முதல்வர் பதவியேற்பு … Read more

திடீரென உயிரிழந்த தமிழ் சின்னத்திரை நடிகர்! பண நெருக்கடியால் வீட்டை இழக்கும் பரிதாப நிலையில் மனைவி

பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி வீட்டு கடனை கட்ட முடியாமல் தவித்து வரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்தவர் ராஜசேகர். இவர் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ராஜசேகர் பிரபலமானார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜசேகர் உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். ராஜசேகர் இறப்பதற்கு முன்பு சென்னை வடபழனியில் வீடு ஒன்றை … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது முறையாக நாளை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் அமைச்சர் பிடிஆர்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல்நாள் அமர்வில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யப்போகும் இரண்டாவது பட்ஜெட் என்பதுடன், 2வது காகிதமில்லா இ-பட்ஜெட் என்ற பெருமையையும் பெறுகிறது. கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நிதி அமைச்சர் பழனிவேல் ராஜனால் முதன்முறையாக  இடைக்கால நிதிநிலை … Read more

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்- மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் கடந்த வடகிழக்கு பருவமழையின்போது அக்டோபர் 25-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்தது. இதில் நவம்பர் மாதம் 7-ந்தேதி 6 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை கொட்டியது. அந்த மாதத்தில் மட்டும் 105 சென்டி மீட்டர் அளவுக்கு கன மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத தொடர் மழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. தி.நகர், வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், புரசைவாக்கம், திருவொற்றியூர், மணலி, வடபழனி, அரும்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் … Read more