தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு இடம்மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி,   தென்மண்டல ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பிரேம் ஆனந்த் சின்ஹா-வை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுளள்து சென்னையில் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக ஏ.டி துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி … Read more

நரிக்குறவர் மாணவிகளிடம் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடியை சேர்ந்த நரிக்குறவ இனத்தை சேர்ந்த மாணவிகளை நேற்று தலைமை செயலகத்துக்கு அழைத்து பேசினார். இதைதொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அந்த மாணவிகளின் இருப்பிட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச வைத்தார். செல்போன் வீடியோ காலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அந்த மாணவிகள் பேசும்போது, ‘‘நீங்கள் நேற்று எங்கள் மாணவிகளை பார்த்து பேசியது ரொம்ப சந்தோ‌ஷம். அதோடு எங்கள் வீடுகளுக்கு வந்து பார்த்தால் … Read more

சென்னை தலைமைச் செயலக காலனியில் 10 கிலோ ஹாஷ் போதை பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை தலைமைச் செயலக காலனியில் 10 கிலோ ஹாஷ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக சோழவரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகுமார், அவரது கூட்டாளி அழகுராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தில் இருந்து ஹாஷ் கடத்தி வந்து சென்னையில் பல பகுதிகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நவீன மற்றும் தன்னிறைவு இந்தியாவே இலக்கு: பிரதமர் அறிவுரை| Dinamalar

புதுடில்லி: நமது நாட்டை நவீன மற்றும் தன்னிறைவு பெற்ற தேசமாக மாற்றுவதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும் என பயிற்சி பெறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமியில், பயிற்சி பெறும் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த புதிய உலகத்தில், நமது பங்கை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில், நீங்கள் மாவட்ட அளவில் … Read more

தங்கத்தை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா, புதின் திட்டம் என்ன?! இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா..?!

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமாகி வந்த நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை துவங்கிய பின்பு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வர்த்தகச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா வருமானத்தை ஈட்டும் வகையில் இந்தியா உட்பட உலகில் பல நாடுகளுக்கு மிகவும் குறைவான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேவேளையில் ரஷ்ய அதிபரான விளாடிமீர் புதின் குவித்து வைத்திருக்கும் தங்கத்தை என்ன … Read more

அனுமதியின்றி முல்லைப் பெரியாறு சென்ற கேரள அதிகாரிகள் மீது வழக்கு; நடந்தது என்ன?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணைக்கு தினமும் பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பான அலுவல் பணிக்காக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர். இவர்கள் தேக்கடியிலிருந்து படகு மூலமாகவோ, வள்ளக்கடவிலிருந்து வனப்பகுதி வழியாக வாகனத்திலோ சென்று வருவது வழக்கம். அவ்வாறு அணைக்குச் செல்பவர்களின் விவரங்கள் பொதுப்பணித் துறையின் வருகைப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும். மேலும் அந்தப் பதிவேட்டில் யார், எதற்காக அணைக்கு … Read more

உக்ரைன் எல்லையில் கூட்டத்தில் ஒருவராக நின்று உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ஜேர்மன் இளவரசர்

ஜேர்மன் இளவரசர் ஒருவர், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கூட்டத்தில் ஒருவராக நின்று உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு உதவுவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. Heinrich Donatus (27), ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். ஜேர்மனியின் Schaumburg-Lippe என்ற பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையில் வந்தவர் அவர். முதல் உலகப்போருக்குப் பின் மன்னராட்சி ஒழிக்கப்படுவது வரை, அவரது முன்னோர்கள் அந்த பகுதியை ஆண்டு வந்துள்ளார்கள். ஆக, ஒரு இளவரசராக இருந்தும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல், போலந்து எல்லையில் தொண்டு நிறுவனம் … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 5வது மாதமாக சிறை விடுப்பு நீட்டிப்பு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு 5வது மாதமாக சிறை விடுப்பு நீட்டித்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 கைதிகள் தண்டனை பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை மத்தியஅரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளுக்கு  பரோல் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே … Read more

ஹிஜாப் விவகாரம்: கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு

பெங்களூரு: கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதை தொடர்ந்து உயர்நீதிமன்றம், ‘ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய வி‌ஷயமல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்’ என நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு … Read more

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைப்பு: தமிழக அரசு

சென்னை: முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைத்து  தமிழக அரசு அறிவித்துள்ளது. குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை உறுதி செய்யும் RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.