தப்பிய குறி! ஏவுகணையால் வேறு ஒரு நாட்டின் கப்பல்களை தாக்கி மூழ்கடித்த ரஷ்யா! உக்ரைன் துறைமுகத்தில் பரபரப்பு

ரஷ்யாவின் ஏவுகணைகள் தாக்கியதில் பனாமா நாட்டின் கப்பல் கருங்கடலில் மூழ்கியுள்ளது. உக்ரனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்ய படையில் தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல உயிரிழப்புகள் மற்றும் பெரியளவில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய இடங்கள், கட்டிடங்கள் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. பனாமா நாட்டை சீண்டிய ரஷ்யா இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து கருங்கடலில் ரஷ்ய ஏவுகணைகளால் மூன்று பனாமா நாட்டு கொடி கொண்ட கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது. … Read more

மீண்டும் 156 நாட்டினருக்கு 5 ஆண்டு விசா சேவை ஆரம்பம் : மத்திய அரசு

டில்லி ஏற்கனவே 156 நாட்டினருக்கு வழங்கி வந்த 5 ஆண்டு இ விசா சேவைகள் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வர 165 நாட்டை சேர்ந்தவர்களுக்கு இ விசா வழங்கப்பட்டு வந்தது.  இது  5 ஆண்டுகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.  கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த இ விசா சேவையை மத்திய அரசு முற்றிலுமாக ரத்து செய்தது.    தற்போது உலகெங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. எனவே மத்திய அரசு இந்தியாவுக்கு வரும் … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடக்கிறது பங்குனி உத்திர திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடந்து அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 3.20 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேலக்கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை … Read more

கன்னியாகுமரி கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல்படை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படையினர் எல்லை தாண்டிய இலங்கை மீனவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்தை கைவிடுக; தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தல்| Dinamalar

தேனி அருகே நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும்; சாயல்குடியில் உரத்தொழிற்சாலை அமைக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, பார்லிமென்ட்டில் தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர். ராஜ்யசபாவில், தி.மு.க., – எம்.பி., சிவா: நியூட்ரினோ திட்டத்தினால் தேனி மற்றும் சுற்றுப்புறங்களில் மேற்குதொடர்ச்சி மலையின் இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் சரணாலயம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும். பூமியை குடைவதற்காக பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படும்போது, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். இதை தடுத்து நிறுத்தும்படி, தமிழக … Read more

தூள் கிளப்ப போகும் பங்குகள்.. ஐடி நிறுவனம் உள்படபல நிறுவனங்களின் பரிந்துரை..!

பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் கூகுள் கிளவுட் பிரீமியம் பார்ட்னர் மீடியா அஜிலிட்டியை 71.7 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்தது. இது இந்த நிறுவனத்தின் கிளவுட் சேவையை மேன்மைபடுத்தும். இது இந்த நிறுவனத்தின் வருவாயினை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனம் கடனையும் விரைவில் திரும்ப செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கினை வாங்கலாம் என ஷேர்கான் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தற்போது ஐடி துறையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இது வருவாயினை மேம்படுத்த உதவும் என … Read more

திருமணத்துக்கு மறுத்த காதலியின் தந்தை… பார்ட்டிக்கு அழைத்து கழுத்தை அறுத்து கொன்ற காதலன்

மும்பை உல்லாஸ் பகுதியை சேர்ந்தவர் பப்பு குமார் ஷா(26). பீகாரை சேர்ந்த ஷா கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். ஷா அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதலியை திருமணம் செய்து கொள்ள காதலியின் தந்தையான கமல்ஜித் என்பவரிடம் சென்று நேரடியாக பெண் கேட்டார் ஷா. ஆனால் கமல்ஜித் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஷா, பெண் கேட்டதற்காக … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்னடைவை சந்தித்த விராட் கோலி, ஜடேஜா – அதிர்ச்சி தகவல்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன், 2 ஆம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட், 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின்  ஸ்டீவன் சுமித், 4 ஆம் இடத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சொதப்பியதால் இந்தத் தரவரிசையில் முதல் 5 இடங்களில் எப்போதுமே இடம் பிடித்திருக்கும் விராட் கோலி  5வது இடத்தில் இருந்து 4 இடங்கள் கீழிறங்கி 9வது இடத்திற்கு சரிந்துள்ளார். 10வது இடத்தில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளது. … Read more

5 மாநில தேர்தல் தோல்வி :  காங்கிரஸ் முத்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

டில்லி ஐந்து மாநில தேர்தல் முடிவுகளையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது.    குறிப்பாகப் பஞ்சாப் மாநில ஆளும்  கட்சியாக இருந்த காங்கிரஸ் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியைப் பறி கொடுத்தது.   இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டபடி 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா … Read more

காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆவடி காவல் ஆணையர் சுற்றறிக்கை

சென்னை: காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். உத்தரவை  மீறி செல்போன் பயன்படுத்தும் போலீசார் மீது அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துளளார்.